Translate

2/03/2017

வேறு வழி ..... வேறு வழி

பசிக்கு கஞ்சோ கூழோ கிடைப்பதைத்தானே சாப்பிட முடியும். அடுத்த வீட்டில் கம கமவென்று விதவிதமான உணவுகளின் மணம் மூக்கை துளைத்தெடுத்தாலும் அதை முகர்ந்துகொள்ளத்தான் முடியும், திருடி தின்ன ஆசை, திருட வழி ? அதை திருடப்போய் கைகால் உடைந்து அடிஉதை வாங்கி அவமானப்பட முடியுமா.......ஹு ஹு ....

என்ன இருந்தாலும் என் அம்மா கைபக்குவம் வருமா, அம்மாவுக்கு அப்புறம் என்னோட மனைவியின் கைப்பக்குவம் ச் சோ ....என்ன சுவை என்ன ருசி. ( வேறு என்னத்த சொல்ல முடியும், வயிறு கத்துதே ... பசியில கெடைக்கறதா சாப்பிடலன்னா, அடுத்த நாள் அம்மாவும் பொண்டாட்டியும் பட்டினி போட்டுடுவாளுங்க ). பல பாவப்பட்ட ஆண்களின் புலம்பல்கள். 

எனக்கு சிம்ரன் மாதிரி பொண்ணு மனைவியா வரணும்னு அம்மாகிட்ட ஜாடை மாடையா எத்தனையோ முறை சொல்லி பார்த்தேன், என் அம்மாவும் ( அவளுக்கு மட்டும் சிம்ரன் மாதிரி மருமகள் வரணும்னு ஆசையிருக்காதா என்ன ) அவளால முடிஞ்சா அளவுக்கு தேடித்தேடி, ஒண்ணு  ( அழகிருந்தா வேலையோ படிப்போ இல்ல,  பொண்ணு படிச்சு வேலைக்கு போறதா கிடைச்சா பார்க்க சகிக்கல) கிடைச்சா இண்ணொன்னு ( நல்ல அழகு, படிப்பு கை நிறைய சம்பாத்தியம் உள்ள பொண்ணு கிடைச்சா, மாப்பிள்ளையின் படிப்பு, வருமானம், சொத்து என்னன்னு கேட்கிறார்கள் ) கிடைக்காம, கடைசியில ஒரு முடிவுக்கு வந்தாகணுமே, "கஞ்சோ கூழோ" மாதிரி "கருப்போ சிகப்போ" எது வந்தா என்ன, ஏதோ ஓண்ணு. 

ச்சே!! அடிக்கடி சிம்ரன் வேற எதிர்ல வந்து நின்னு நக்கலா சிரிக்கிறா மாதிரி இப்போல்லாம் கனவு வருது. 
அதே பசி  ( எதோ அம்மா ஏற்பாடு பண்ணி கல்யாணம் பண்ணி தொலைச்சுட்டா ), இருட்டுல கருப்பா செவப்பா தெரியப்போகுது.  பாவம் ஆம்புளைங்க படுகிற கஷ்டம் யார்கிட்ட சொல்லி அழ முடியும்,  பொம்பள மாதிரி அப்பப்ப கண்ணை துடைச்சு, மூக்கை சிந்திக்கிட்டா இருக்க முடியும், அரை பாட்டில் சரக்கு அடிச்சு லயிட்டா போதைக்குள்ள சிக்கி மனசில இருக்கிற துக்கத்துக்கு மூடி போடத்தான் முடியும் .....  "என்ன இருந்தாலும் என் பொண்டாட்டி மாதிரி வருமான்னு" சொல்லி காலத்தை ஓட்டுவதை தவிர வேறு வழி. இருந்தாலும் அடிக்கடி சிம்ரனின் நக்கல் சிரிப்பை பார்க்காமல் தவிர்க்க முடிவதில்லை. 

"அழகு எதுக்கு, நிறம் எதுக்கு, குணம் தானே முக்கியம்" ( குணவதியா ---- தெரியல, மனச தேத்திக்கறத தவிர வேற வழி ). 

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்கேயும் கொடுமை கூத்தாடிக்கிட்டு வந்து நின்னா என்ன பண்ணமுடியும்.  ஒரு சினிமாவில் ஊர்வசி சொல்ற மாதிரி ஒரு டயலாக் வருமே " பொதருக்குள்ள இருந்து எட்டி பாக்குறாப்புல, தாடிக்குள்ள இருந்து எட்டி பார்க்கிற முகம் " பற்றி, என்ன பண்றது வேற வழி, ஆணோ பெண்ணோ பிரச்சினை ஒன்றுதான்.

எல்லாமே வாழ்க்கைல அட்ஜஸ்ட்மெண்ட்டுதான், [ என்ன இருந்தாலும் அம்மா கைப்பக்குவம் போல வருமா !! ] அமெரிக்க அதிபரின் மனைவியை போல " முதல் பெண்மணி " யாக விருப்பம் யாருக்கு வேண்டுமென்றாலும் ஏற்படலாம், அதெல்லாம் நெனப்பு பொழப்ப கெடுக்கிறதுக்கு. "கெடைச்சதே போதும்"  ( வேற வழி ). எது வேண்டும் என்று நினைத்தாலும் கிடைத்துவிடவா போகிறது, கிடைக்கவில்லை என்பதற்காக " அமெரிக்க முதல்பெண்"மணியை குறை கூறிக்கொண்டு தன் மனதை தேற்றிக்கொள்வதை தவிர வேறு வழி.
எது கிடைக்கிறதோ மனது அதனைப்பற்றி திருப்தி அடைய விடுவதில்லை. திருப்த்தி அடைந்துவிட்டது போல நடந்துகொள்ள முயற்சி செய்பவரை பார்க்கும்போது ( சீ சீ இந்த பழம் புளிக்கும் கதை மாதிரி ) நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்துல விஜய் சேதுபதி ஓவர் மேக்கப் போட்டிருக்கும் மணமகளை பார்த்து சொல்வாரே " ப்ப்பா"ன்னு, செம்ம காமெடி !!  ஓவர் ஆக்ட்டிங் பண்றவங்கள பார்க்கும்போது நல்ல நகைச்சுவையாக இருக்கும்.