Translate

12/23/2016

சந்தோஷமான சமயங்கள் @ ?

பதிவெழுதி அதிக காலமாகி விட்டது இன்று எழுதவேண்டும் என்று தோன்றியது. மனதிலும் யோசனையிலும் பல செய்திகள் இருந்தாலும் எதை முதலில் எழுத வேண்டும் என்பதற்கு எனக்கு பதிலில்லை எனினும் எழுத துவங்கி விட்டேன். ஏதோ இன்று தான் மனம் மிகவும் கனகத்திருப்பது போல உணர்கிறேன. பலவித கேள்விகள் பலவித பதில்கள....... இன்னும் சில நாட்களே நான் வாழப் போகிறேன் என்பது போல உணர்கிறேன். நம்மை சுற்றி நடக்கின்ற காரியங்கள் எல்லாம் மர்மம் போலவும் பல காரியங்கள் வெறுப்பு, வெறுமையை தருவதாக உண்கிறேன். சந்தோஷமான சமயங்கள் எப்போது எங்கே யாருக்கு நடக்கிறது என்றறிய விழைகிறேன். அப்படி ஒன்று எங்கேயும் எப்போதும் எவருக்கும் நடக்கவில்லை என்பதை அறிந்து கொண்ட பின்னர் மீண்டும் சோகமும் வெறுப்பும் என்னை சூழ்ந்து கொண்டு விடுகிறது.

பணமுள்ளவர் அதனை தன் சந்தோஷத்திற்காக செலவழித்தும் கூட சந்தோஷமாக இருந்ததாக செய்தியில்லை. எங்கே நிம்மதி எங்கே சந்தோஷம் என்று அலைகின்ற எண்ணிலடங்கா மனிதர்களை மட்டுமே காண முடிகிறது. எனக்கு பரம சந்தோஷத்தை கொடுக்கின்ற ஒரு இடமுண்டு அது என் கண்களை மூடி கொண்டு இறைவனிடம் பேசி முடித்த பிறகு.  இறைவனிடம் பேச விடாமல் தடுக்க எத்தனை தடைகள் !!  அதையும் மீறி பேச ஆரம்பித்தால் இரவில் வராமல் அடம்பிடிக்கின்ற உறக்கம் கண்களை கவ்வி கொண்டு விடும். நன்றாக உறங்கலாமே என நினைத்து படுத்தால் போதும் திடுக்கிட  வைக்கும் கெட்ட செப்பனங்கள். கண் விழித்தால் போதும் என்றாகிவிடும். இவ்வாறு மனிதர்களின் உணர்வுகளோடும் வாழ்க்கையோடும் உறவாடி கெடுக்கும் அந்த மாபெரும் அரக்கன் யார் என்று எப்போதாவது எவராவது சிந்திப்பதுண்டா.  சிந்திக்க விட்டால் மனிதர்கள் உண்மையை அறிந்து கொண்டு விட்டால் தனக்கு பெரிய பிரச்சினை என்றறிந்த "அவன்" மிக மிக சாதுர்யமாக பிரச்சினைக்கு மேல் பிரச்சினையாக குவித்து திண்டாடவைக்கிறான். அவன் யார் --- பிசாசு என்றும் சாத்தான் என்றும் கூறப்படுகின்ற கடவுளின் எதிரி. தங்கள் சந்தோஷத்திற்காக மது மாது என்று அலைய வைத்து இன்னும் அதிகமான நரகத்திற்குள் தள்ளி புதைத்து சமாதி கட்டி விடுகிறான். என் மனம் மனிதர்களின் இத்தகைய போராட்டங்களை எண்ணி வருந்துகிறது.