Translate

2/06/2013

மழைக்காக கூட்டு பிரார்த்தனைமுன்மாரி பின்மாரி மழை பொய்த்து விட்டது, நிலத்தில் பயிரிட்ட பயிர்கள் நாசமாகிவிட்டது, வாங்கிய கடனை திருப்பி கொடுக்க இயலாமல் 'இனி உயிர் வாழ்வது எப்படி' என்ற திகைப்பில் சில விவசாயிகள் உயிரை விட நேர்ந்தது, அடுத்து வர போகின்ற கோடைகாலத்தில் குடிநீர் தேவை எப்படி சமாளிக்கப்பட போகிறது, அரிசி விலை அதிகமாகுமா என்பதை குறித்த கேள்வி, மத்திய அரசு குழு பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு சென்றுள்ளது. விவசாயிகளுக்கு நட்ட ஈடு கொடுத்துவிட்டால் அத்துடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடுமா, குடிநீர் தேவை, மின்சாரத் தேவை எவ்வாறு சமாளிக்கப்போகிறோம் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

அறிவியலில் மழை குறைவாக பெய்வதற்கு நிறைய காரணங்கள் கூறப்பட்டாலும், மழையை உண்டாக்குவதற்க்கோ குடிநீரை உண்டாக்கவோ வழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக இதுவரையில் தகவல் இல்லை, அரிசி கோதுமை பருப்பு காய்கறி பழங்களை விளைவித்து கொடுப்பதற்கு கூட அறிவியலில் எந்தவித கண்டுபிடிப்பும் இல்லை. நமது முன்னோர்கள் கடை பிடித்த பல வழிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க தவறிவிட்டதன் விளைவு இன்று விவசாயிகள் செய்வதறியாது உயிரை மாய்த்துகொள்ள காரணம் என்று நான் நம்புகிறேன். அது என்ன முன்னோர்களின் வழி: விதைப்புக்கு முன்னர் விளைந்த பின்னர் இறைவனிடம் கள்ளமில்லா நெஞ்சத்தோடு வேண்டுதல் செய்துவிட்டு விவசாயம் செய்தனர். முப்போகம் விளைந்தது.

நேர்மை நாணயம் உபசரிப்பு போன்ற திருவள்ளுவர் கூறும் அத்தனை நன்நெறிகளையும் தங்கள் வாழ்க்கையில் திருக்குறளை படிக்காமலேயே கடைப்பிடித்து வந்தனர், ஆண்களும் பெண்களும் கற்ப்பு தவறாதிருந்தனர், அப்படிபட்ட மக்களுக்கு இயற்க்கை தனது செல்வங்களை வாரி வழங்கி அவர்களை நிறைவுற செய்தது. வீணாக ஒருவனின் உயிரை எடுப்பதற்கு அஞ்சினர், மறுத்தனர் அவ்வாறு செய்தவர் பாவத்தால் அல்லலுறுவர் என்ற பயம் அவர்களை நிறைத்திருந்தது. கள்ளர் இனத்தை சேர்ந்தவர் மட்டுமே திருடி அதை கொண்டு ஜீவனம் செய்தனர், திருடியவற்றைக் கொண்டு கள் குடித்து நடனமாடி தங்களது இன்பத்தை கூட்டமாக ரசித்தனர் என்று வரலாறு கூறுகிறது.

இன்றைய நிலை என்ன? விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு தங்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை வைப்பது மின்சாரம் கேட்டு கோரிக்கை வைப்பது போல எல்லோரும் ஒன்று திரண்டு கடவுளிடமும் மழை வேண்டி கோரிக்கை வையுங்கள், அதற்க்கு கூட்டு பிரார்த்தனை என்று சொல்லுகிறார்கள். அவ்வாறு ஒன்று திரளும்போது எப்படி கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கிறதோ அதுபோல மழை வருவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். குடிநீருக்காக மழை வேண்டியும் கூட்டு பிரார்த்தனைகள் நடத்துங்கள் நிச்சயம் தீர்வு கிடைக்கும். நம் முன்னோர்களும் இவ்வாறு செய்தனர் இவற்றையெல்லாம் நாம் பின்பற்ற மறந்து விட்டோம் என்பதை சுட்டி காண்பிப்பதே இப்பதிவின் நோக்கம்.

என்னதான் அறிவியல் முன்னேற்றங்கள் வந்தாலும் மழையை உண்டாக்குவதற்க்கோ தானியங்களை உற்பத்தி செய்வதற்கோ அவர்களால் [Scientist] என்றுமே இயலாது என்பது உறுதி. விவசாயம் இல்லாத நாட்டில் அறிவியல் முன்னேற்றம் மட்டும் ஏற்பட்டுவிட முடியுமா. விவசாயிகள் இல்லாத ஊரும் நாடும் அழிந்துபோகும். விவசாயிக்கு மட்டுமல்ல எந்த நாடாக இருந்தாலும் நீர் வசதி இல்லை என்றால் அது பாலைவனமாகத்தான் மாறும். அரபு நாடுகளுக்கு சென்றவர்களுக்கு இதைப்பற்றி நன்கு தெரியும், அவர்களிடம் பூமிக்கு அடியில் நீருக்கு பதிலாக பெட்ரோல் கிடைக்கிறது  அதை ஏனைய நாடுகளுக்கு விற்று அதன் மூலம் கிடைக்கின்ற வருவாயை கொண்டு குடிநீர் உணவு தானியம் என்று எல்லா பொருட்களையும் மற்ற நாடுகளிலிருந்து விலைக்கு வாங்குவதால் அந்நாடுகளில் பொருட்களின் விலை அதிகம். அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு குளிர்சாதன பெட்டி  இல்லாமல் வாழவே இயலாது அதனால் மின்சாரம் பொன்னை போன்று விலையேறபெற்ற ஒன்று.

நமது நாட்டில் கிடைக்கும் கனிமங்களும் நமது பூமி விளைவிக்கும் அனைத்தும் நமக்கு கிடைத்த மகா பெரிய பொக்கிஷம். அதை பயன்படுத்த முடியாமல் அல்லது சிலரின் சுயநலத்திற்கு சூரையாடப்படும்போது "கிடைத்ததை சுருட்டிகொள்ளும்" நிலையை புறக்கணித்து நாட்டில் உள்ள வளம் முழுமையாக எல்லோராலும் அனுபவிக்க கூடிய வகையில் நியாயம் நேர்மையுடன் ஒத்துழைக்க வேண்டும். மழைக்காக கூட்டு பிரார்த்தனை செய்வோம் [நேர்மையாக]. வரும் கோடையில் மக்கள் குடிநீருக்காக போராடாமல் சுபீட்சம் பெற மழைக்காக வேண்டுதல் செய்வோம், நாடும் வீடும் வளம் பெற ஒன்று சேர்ந்து முயற்ச்சிப்போம்.