Translate

3/31/2011

சூடு பிடிக்குது


இந்திய மட்டைபந்து விளையாட்டு வீரர்களின் உலக கோப்பை ஆட்டங்களில் பார்க்க விரும்பியது ஆஸ்த்திரேலியாவுடனும் பாகிஸ்தானுடனும் ஆடிய ஆட்டங்கள், ஆஸ்த்திரேலிய மட்டைபந்து அணியின் தோல்வியை கண்டு சிறிது வருத்தம் ஏற்பட்டது, அதை ஈடு செய்ய இந்தியா ஜெயித்தது என்னவோ உண்மை. நேற்றைய விளையாட்டு மிகவும் ஆர்வமுடன் எல்லோராலும் கவனிக்க வைத்த விளையாட்டு என்பதாலும் இருநாட்டு ஜனாதிபதிகள் உள்பட முக்கியஸ்த்தர்களின் வருகையும் இந்த விளையாட்டிற்கு மேலும் ஊக்கமளித்தது என்பதும் இந்திய மற்றும் பாகிஸ்தானிய வீரர்களின் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் நிர்பந்தத்தையும் ஏற்படுத்தியது.

விளையாட்டு என்றால் வெற்றி தோல்விகள் நிச்சயம் என்பதை ஏற்றுகொண்டவர்களே சிறந்த ரசிகர்களாகவும் சிறந்த விளையாட்டு வீரர்களாகவும் திகழமுடியும் என்பதற்கு ஆஸ்திரேலிய அணி சான்று, குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று ஆஸ்திரேலிய மட்டைபந்து ஏன் மிகவும் சிறப்பாக மூன்று முறை உலக கோப்பையை வென்றது என்பதற்கு அவர்கள் அந்த விளையாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் சிறப்பானது என்பதை நிரூபிக்கும் வகையில் நேற்றைய செய்தியில் ஆஸ்திரேலிய மட்டைப் பந்து தலைவராக பல சாதனைகளை அந்த குழுவிற்கு செய்த ரிக்கி பாண்டிங் இம்முறை உலக கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் போன காரணத்திற்க்காக மாற்றப்பட்டு இருப்பது தெளிவாக்குகிறது, அவர்களது வெற்றிகளுக்கு அடிப்படை, போன்ற காரணங்களை பலவற்றை குறிப்பிடலாம்.

நமது நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு விளையாட்டு வீரர் எத்தனை முறை தவறுகள் செய்தாலும் அவரை எந்த காரணத்திற்காகவும் குழுவிலிருந்து நீக்குவது என்கின்ற பேச்சுக்கே இடமில்லை என்கின்ற நிலை உள்ளது வீரர்களுக்கு அசைக்க முடியாத இடம் குழுவில் கிடைப்பதும் தொடர் தோல்விகளுக்கு மிகவும் முக்கிய காரணம். ஆனால் உலகிலேயே அதிக மட்டைபந்து ரசிகர்களை, அல்லது மட்டைபந்து வெறியர்களை கொண்ட ஒரே நாடு இந்தியா என்பதும் மாற்ற இயலாத பந்தம்; விளையாட்டு வீரர்களின் அசைக்க முடியாத பதவிகளுக்கு காரணமாக அமைந்துவிட்டதோ என்றும் தோன்றுகிறது.

நம்ம ஊர்ல எல்லாத்துக்குமே 'வேட்டு' வைக்கிறாங்க எல்லாத்துக்குமே மாலை போடறாங்க, யாராவது செத்தாலும் மாலை போட்டு வேட்டு வைக்கிறாங்க யாராவது ஜெயிச்சாலும் வேட்டு வச்சி மாலை போடறாங்க. ஒருபக்கம் வெயில் சூட்டை தினமும் கூட்டிக்கொண்டே போகுது இன்னொரு பக்கம் மட்டைபந்து சூட்டை ஏத்திகிட்டே போகுது, எல்லாத்துக்கும் மேல தேர்தல் சூடு வேற நாளுக்கு நாள் கூடிகிட்டே போகுது. அக்னி நட்ச்சதிரத்துக்கும் மட்டை பந்து உலக கோப்பை முடிவுக்கும் தேர்தல் முடிவுக்கும் ஒரே சமயம் வந்திடும் போல இருக்கு. என்னமோ எல்லாம் நல்லபடி இருந்தா நல்லதுதான்.

@@@@@@@@