Translate

12/27/2011

பெண்களை பிடித்திருக்கும் சனி

இந்திய தேசத்தில் பெண்களை தெய்வம் என்று வணங்குகின்றனர், தாய்க்கென்று ஒரு தனி இடம் இந்திய தேசத்தில் இருப்பதால் 'தாய்நாடு', 'தாய்மொழி' என்று தாயின் ஸ்தானத்தை கொடுக்கின்றனர், இவ்வாறெல்லாம் போற்றப்படும் பெண்ணினத்தை இந்திய சமுதாயத்தில் மிக கேவலமான முறைகளில் குற்றம் சுமத்தப்படுவதும் மிகவும் சகஜமான ஒன்று. காலம் எத்தனைதான் மாறினாலும் அறிவியல் வளர்ச்சியும் கல்வியும் அதிகரித்தாலும் பெண்களின் மீது சுமத்தப்படுகின்ற கேவலமான நிந்தைகள் மட்டும் சமுதாயத்தில் மாறுவதாகவே தெரியவில்லை. நமது நாட்டில் மாற்றங்கள் அதிகம் ஏற்ப்பட்டுவிட்டதாக நினைப்பது வெறும் பிரம்மையே. ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமம் என்று கூறுவது வெறும் பேச்சளவில் மட்டுமே. ஆண்களுடன் பெண்கள் அதிகம் பழகினால் அப்பெண்ணை நடத்தை கெட்டவள் என்று கூறுவதும் வீண் பழிகள் சுமத்துவதும் இந்திய கலாசாரத்தின் மிகவும் முக்கிய பணி.

பெண்ணின் நடத்தையின் மீது சந்தேகபடுவதும் அதை பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ளாமலேயே அச்செய்தியை திரித்து பன்மடங்காக்கி விமரிசனம் செய்வதும் மிக சாதாரணமாக சமுதாயத்தில் காணப்படும் அவலம். தங்கள் வீடுகளில் இருக்கும் தாய், சகோதரி, அத்தை, சித்தி, மாமி என்ற பெண்களைப்பற்றிய விவரங்களை மற்றவர்களும் அவ்வாறே திரித்து பன்மடங்காக்கி வீதிகளில் விமரிசனம் செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தால் போதும் அவ்வாறான வதந்திகளை பரப்பும் நபர்கள் முற்றிலுமாக காணாமல் போவார்கள். ஆனால் நிலைமை முற்றிலும் தலைகீழாக உள்ளது, வேறு பெண்களைப் பற்றிய வதந்திகளை காதுகொடுத்து கேட்பதற்கும் அதை இன்னும் சில பல மாற்றங்களுடன் கேட்பவர் உள்ளத்தின் ஆவலை தூண்டுகின்ற வகையில் ஜோடித்து எல்லோரிடமும் விமரிசனம் செய்வதில் இந்திய சமுதாயத்திற்கு நிகர் வேறு யாரும் இருக்க முடியாத அளவிற்கு கற்பனையை தங்கள் விருப்பத்திற்க்கேற்றபடி கயிறு திரிக்க வல்லவர்கள்.

எதிலெல்லாம் தங்களது திறமையை காட்ட வேண்டுமோ அவைகளில் காட்டுவதற்கு வழி அறியாத 'கண்ணிருந்தும் குருடர்களும், காதிருந்தும் செவிடர்களுமாக' வாழ்ந்து கொண்டிருக்கும் செத்த பிணங்கள். அறிவியலும் கல்வியும் வளர்ச்சியடைந்தாலும் சமுதாயத்தில் சீர்திருத்தங்கள் ஏற்ப்படாத வரையில் விஞ்ஞானம் வளர்ச்சியடைவதில் யாருக்கும் நன்மை இருக்கப்போவதில்லை. சமுதாயத்தில் சீர்திருத்தங்கள் அடைந்த நாடுகளில் மட்டுமே அறிவியல் மற்றும் கல்வி வளர்ச்சியின் முழுமையை காணமுடிகிறது. அவ்வாறு இரண்டிலும் வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமே வல்லரசுகள் என்ற மேன்மையை அடைய முடியும். இந்தியாவை வல்லரசாக்க நினைப்பவர்கள் முதலில் சமுதாயத்தில் கடைநிலையில் வாழுகின்ற பெண்ணைகூட மதிக்கின்ற தனது தாயைப்போல, தங்கையை போல ஏற்றுக்கொள்ளும் மனம் எப்போது வளர்ச்சியடைகிறதோ அன்றைக்குத்தான் சமுதாயம் முழு முன்னேற்றத்தை கிரகித்துக்கொள்ளுகின்ற தரத்தை பெறமுடியும்.

பேருந்தில் தன்னுடன் பயணிக்கின்ற சக பயணியை உரசிக்கொண்டு சுகம் காண துடிக்கும் ஓநாய்களும், அடுத்தவன் சம்பாதித்து சேமித்து வைத்திருக்கும் பணம், நகைகளை கொள்ளையடித்து சந்தோஷமாக தனது வாழ்நாளை அனுபவிக்க ஆசைப்படுகின்ற பிணம் தின்னி கழுகுகளும், எப்படிவேண்டுமானாலும் வாழலாம் என்று வாழ்க்கையை தரம்கெட்ட விதத்தில் வாழ்ந்துவிட நினைக்கும் மாக்கள் நிறைந்த சமுதாயத்தினால் நாட்டிற்கும் கேடு சமுதாயத்திற்கும் கேடு. கேடு நிறைந்த சமுதாயத்தை உள்ளடக்கிய நாடு ஒருகாலமும் வளர்ச்சியை அடையும் வாய்ப்பே இல்லை. அடிப்படை கல்வியும் அடிப்படை தகுதிகளும் கொண்ட சமுதாயம் மட்டுமே விஞ்ஞான மற்றும் கல்வி வளர்ச்சியில் முழு பங்காற்றும் தரத்தை உடையது. அவ்வாறு இல்லாத 'ஆட்டு மந்தை' சமுதாயம் வல்லரசாகவோ முன்னேற்றப்பாதையை தொடுவதற்க்கோ கூட லாயக்கு அற்றது.


....................................................@@@............................................

12/14/2011

சின்னக்குயில் சித்ரா


பழைய திரைப்பட பாடல்களை இரவின் நிசப்த்ததில் கேட்கின்ற சுகம் அலாதியானது. அதிலும் மொட்டை மாடியில் பவுர்ணமி நிலவில் பனிவிழும் இரவில் கேட்க்கும்போது அதன் சுகம் இனிமையானது, பீ. சுசீலாவின் இனியகுரல் நாடி நரம்புகளுக்குள் புகுந்து ஏற்ப்படுத்துகின்ற உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. பீ.லீலா, ஏ.எம்.ராஜா, ஜிக்கி பீ.சுசீலா போன்றவர்களின் அழகிய குரல்களுக்குப்பின்னர் சித்ராவின் குயிலோசை சிந்தையை ஈர்த்து வந்தது, வாழ்க்கையில் குறிப்பிட்ட முன்னேற்றம் மற்றும் உச்சங்களை அடைந்தவர்களுக்கு வேறு ஏதேனும் குறைகள் இருக்கும் அல்லது ஏற்ப்படும் என்பது நம்பிக்கை. மேற்கூறிய அத்தனை பாடகர்களும் தங்களது தொழிலிலும் பிரபலத்திலும் எல்லாவித நிறைவுகளையும் பெற்று வாழ்க்கையை நிறைவு செய்தனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் சித்ராவின் பாடல்களை தேடிக்கொண்டிருந்தபோது அதிர்ச்சியளித்த செய்தி எனது தேடலில் தொய்வை ஏற்ப்படுத்தியது, அதற்க்கு காரணம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி [இன்றுடன் சரியாக 8 மாதம் நிறைவடைந்துள்ளது] ஷார்ஜாவில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு தனது எட்டு வயது மகள் நந்தனாவையும் உடன் அழைத்து சென்ற பாடகி சித்ராவிற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது, அவர் குளிக்க சென்ற சமயம் அவரது குழந்தை நந்தனா அருகிலிருந்த நீச்சல் குளத்தில் விழுந்து இறந்துகிடந்தாள் என்பது செய்தி.

இந்த
செய்தியை கேட்டவுடன் அவர் என்ன நிலையை அடைந்திருப்பார் என்பதை நினைத்துப்பார்க்கவே வேதனையாக உள்ளது. ஏறக்குறைய ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் சித்ராவின் ஒரே குழந்தை அகால மரணத்தை தழுவியது சாதாரண வேதனையாக இருந்திருக்காது. துபாயைவிட்டு இறந்த குழந்தையுடன் திரும்புவோம் என்று அவர் நினைத்திருக்க முடியாது, எப்போதும் குழந்தையைப்போல சிரித்த முகத்துடன் காணப்படும் சித்ராவிற்கு இப்படியொரு சோதனையா என்று என் மனம் மிகவும் வேதனையடைந்தது. விஜெய் தொலைக்காட்ச்சியில் அதே வயதொத்த குழந்தைகளுடன் அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது தனது குழந்தையின் நினைவு ஏற்பட்டு இன்னும் மனவேதனை அதிகம் ஆகாமலிருக்க வேண்டுமே என்று நான் கவலைப்படுவதுண்டு. இனியொரு குழந்தையை ஈன்றெடுக்கும் நிலையில் அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இழந்த குழந்தையைப் பற்றிய வேதனையை மறப்பதற்கு இறைவன் துணையிருக்கவேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். விருதுகள் அதிகம் வாங்கிய ஒரே தெனிந்திய பாடகி சித்ராதான், அவரது இனிய குரலுக்கு கோடிகணக்கில் ரசிகர்கள் கூட்டம் உண்டு, எல்லோரையும் தனது இனிய குரலின் மூலம் மகிழ்வித்து வருகின்ற இவரது வேதனைக்கு ஈடுசெய்யவோ ஆறுதல் கூறவோ இயலாது.


..............ooooooooooo..............

இந்திய காதல்

காதல் என்ற வார்த்தைக்கு என்றுமே தனி இடம் உண்டு. மனித வாழ்க்கையில் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களையும் இந்த மந்திரச்சொல் யுக யுகமாக ஆட்கொண்டிருக்கிறது, இதன் புனிதம் என்பதை மனிதன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டாலும் காதலுக்கென்று, அன்புக்கென்று சிறப்பான இடம் இயற்க்கை கொடுத்த வரம். காதல் என்கின்ற அன்பு எங்கே எப்போது சீர்குலைகிறதோ அங்கே வன்மம் தழைத்தோங்குகிறது. காதல் என்கின்ற அன்பு இடத்திற்கிடம் நபருக்கு நபர் உறவுக்கு உறவு வெவ்வேறு நிலைகளில் உயிரினங்களை ஆண்டுக்கொண்டிருந்தாலும், சில உறவுகளுடன் மட்டும் இதன் ஆழம் அகலம் அதிகரித்து காணப்படுவது இயற்கையின் மற்றொரு ஆச்சரியம்.

ஒரு பெண்ணை பல ஆண்கள் காதலிப்பதாக இருந்தாலும், அத்தனை ஆண்களுமே அவளை தன் உயிரினும் மேலாக அன்பு கூர்வதை அப்பெண் அறிந்திருந்தாலும் அவர்களில் யாரேனும் ஒருவரை அல்லது முற்றிலும் புதிய நபரை அப்பெண்ணின் மனம் நாடுவது இயற்கையின் மற்றொரு விந்தை. ஒரு ஆண் தான் உயிரினும் மேலாக அன்பு கூர்ந்த பெண்ணைத் தவிர வேறு ஒரு பெண்ணை நினைத்து பார்க்ககூட இயலாது என்று கருதி இருக்கின்ற நிலையில் முற்றிலும் தனது எதிர்பார்ப்புகளுக்கு மாறான வேறு பெண்ணுடன் இணைத்துக்கொண்டு வாழ்நாளை கழிக்கின்றபோது தன்னால் எப்படி தன் விருப்பத்திற்கு எதிர்மாறான குணமும் தோற்றமும் கொண்ட பெண்ணுடன் வாழ முடிந்தது என்று தன்னைத்தானே அதிசயப்படுகின்ற விதத்தில் வாழுகின்ற இயற்கையின் விளையாட்டும் அதிசயம்தான்.

இப்படி பலவிதமான அன்பு அல்லது காதலை உள்ளடக்கிய இயற்கையின் விந்தைகளுள் மற்றுமொரு சுவாரசியமான செயல்பாடும் நாம் காண்பதுண்டு. ஒரு பெண் தான் காதலித்த அல்லது நேசித்த பலரில் ஒருவரை மட்டும் நேசித்தது உண்மையாக இருந்தபோது காலம் அவர்களை ஒன்றாக வாழவிடாமல் தவிர்த்து, பிரிந்து விட்ட காதலர்கள் வாழ்க்கையில் வெவ்வேறு திசைகளில் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடர, பல ஆண்டுகள் கடந்த பின்னர் தன் மனதில் பழைய காதலின் சுவடே காணாமல் போனதென்று நினைத்து தன்னைத்தானே அதிசயித்துக் கொண்டிருக்கும்போது எதேச்சையாக இருவரும் சந்தித்துக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்ப்பட்டு அவ்வாறு சந்தித்தபோது இருவரும் பேச மறந்து செயலிழந்து விடுவதும் இயற்கையே, ஏனெனில் அதுவரையில் தங்களது வாழ்நாளில் இனி ஒருமுறையேனும் இருவரும் மீண்டும் சந்திக்கின்ற வாய்ப்பே இல்லை என்று நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கின்ற நிலையில் அந்த சந்திப்பு சத்திய சோதனையாக அமைந்துவிடுவதும் உண்டு. அதுவரையில் அவ்வாறு ஒருமுறை சந்திக்க நேர்ந்தால் எவ்வாறெல்லாம் கேள்விக்கணைகளை தொடுக்க வேண்டும் என்று இருவரும் மனதில் பல ஆண்டுகளாக தேக்கி வைத்திருந்தார்களோ அத்தனை கேள்விகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும் மாயம் இயற்கையின் மற்றொரு அதிசயம்.

"வாழ்ந்தால் உன்னுடன்தான் என்று நாம் இருந்தோமே விதி நம்மை பிரித்து விட்டது அதனால் வா நாமிருவரும் எஞ்சியுள்ள வாழ்நாளிலாவது ஒன்றாக வாழ்ந்துவிடுவோம்" என்று காதலன் தனது காதலிக்கு இறுதி வாய்ப்பை கொடுக்க முன்வரும்போது அப்பெண் அந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்று ஏற்றுக்கொள்வாளா, தன்னைத்தானே பல கேள்விகளை கேட்டுக்கொள்வாள், அதுவரையில் தன்னுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் தன் கணவனின் நிலையை எண்ணி பார்ப்பாள், தன் கணவனுடன் வாழ்ந்த வாழ்க்கையின் சாட்சியாக தங்களுக்கு பிறந்திருக்கின்ற குழந்தைகளின் நிலையை எண்ணி பார்ப்பாள், தான் தனது பழைய காதலனை திடீரென்று சந்தித்ததுபோல தன் கணவன் அவனது காதலியை சந்தித்து இதுபோன்றதொரு விபரீத முடிவெடுத்து தன்னை குழந்தைகளுடன் விட்டுவிட்டு பிரிந்து சென்றால் தனது நிலையைப்பற்றி யோசித்து பார்ப்பாள், காதலா திருமணவாழ்க்கையா என்ற குழப்பம் ஏற்ப்படும்,

இளம் வயதில் மனதில் தோன்றிய காதலும் உறுதியுடன் இருவரும் எடுத்துக்கொண்ட முடிவுகளும் அப்போதைய சூழலுக்கு சரியானதாக தோன்றியது உண்மை, அக்காதல் திருமணத்தில் முடியாமல் மாறாத துயரை ஏற்ப்படுத்தியது என்பதற்காக காலம் கடந்த பின்னர் அக்காதலை தொடரும் வாய்ப்பு கிடைத்ததை நியாயப்படுத்த நினைப்பது சரியானதாக இருக்க முடியுமா. திருமண வாழ்க்கையில் என்னதான் குறை நிறைகள் இருந்தாலும் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தாகிவிட, தன்னை நம்பியிருக்கும் குழந்தைகள் மற்றொருபுறம். இந்நிலையில் மனதைவிட அறிவு மேலோங்கி செயல்பட்டு கேள்விக்கணைகளை அள்ளிவீசும், இங்கே காதல் தோற்றுப்போகும், உறவுகளின் மீதிருக்கும் அக்கறை மேலோங்கிவிடும், சுயநலம் காணாமல் போகும், "வாழ்ந்தால் தன் காதலனோடு வாழ்ந்துவிட வேண்டும்" என்கின்ற வீரியம் பொசுங்கிவிடும். பிடித்தோ பிடிக்காமலோ இதுவரையில் வாழ்ந்துவிட்ட வாழ்க்கை பழகிவிடும், நோக்கம் தனது காதலின் மீது இல்லாமல் தன் மூலம் இவ்வுலகிற்கு கொண்டுவரப்பட்ட உயிர்களின் நல்வாழ்க்கையின் மீது நிலைத்துவிடும் இதுவும் இயற்கையின் அதிசயம்.


..................oooooooo................

12/07/2011

விழித்திரு !!!

கூடங்குளம் அணுமின் நிலையம், அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டம், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, முல்லை பெரியார் அணை பற்றிய சர்ச்சை என நாட்டில் பல பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக கிளப்பப்பட்டு எதற்கு முதலிடம் எதற்கு இரண்டாம் மூன்றாம் இடம் கொடுப்பது என்று அறிந்துகொள்ள இயலாத அளவிற்கு இன்னும் பல பிரச்சினைகளும் ஒன்றை ஒன்று முந்திகொள்கிறது. இரண்டு வருடத்திற்கு முன்பு அச்சுதானந்தன் அரசு கேரளாவில் ஆட்ச்சியில் இருந்த போது முல்லை பெரியார் அணை மிகவும் பழமை வாய்ந்தது என்பதால் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் அணையில் ஏற்ப்படும் அசம்பாவிதங்களால் பாதிப்பு அடையும் என்கின்ற காரணத்தை கூறி புதிய அணை கட்டப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து வந்தது.

பல நிபுணர் குழுக்களின் ஆய்வு அறிக்கைகள் மூலம் அணை நல்ல நிலையில் இருப்பதை மத்திய அரசிற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் அளிக்கப்பட்டபின்னர் புதிய அணை கட்டும் அவசியம் இல்லை என்றும் முல்லை பெரியார் அணையை தகர்க்கும் அவசியம் இல்லை என்றும் தீர்ப்பு வழங்கிய பின்னர், கேரள குழுக்கள் வேறு சதித்திட்டம் தீட்ட சிறிது அவகாசம் எடுத்துக் கொண்ட பின்னர் தற்போது பூகம்பம் ஏற்ப்படும் அபாயம் அப்பகுதியில் உள்ளதாகவும் அவ்வாறு பூகம்பம் ஏற்ப்பட்டால் அணை உடைந்து சுற்றியுள்ள கிராமங்கள் அழியும் என்ற வதந்தியை திரைபடமாக்கி பொதுமக்களிடம் விநியோகித்து அதன் மூலம் மக்களை பீதியில் ஆழ்த்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட சதி செய்து வருகிறது.

இதேபோன்ற பீதியை இதே கேரள குழுக்கள் கூடன்குள அணுமின் நிலைய விவகாரத்திலும் வேறு நபர்களின் மூலம் பொதுமக்களிடம் பரப்பி தமிழகத்தின் முன்னேற்றத்தை நாசப்படுத்தும் நோக்கில் சதி வேலைகளில் ஈடுபடுகிறதோ என்கின்ற சந்தேகம் எழுகிறது. கேரள சதி குழுக்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு வேறு நாடுகளின் பண உதவிகளை பெற்று இவ்வாறு சதி திட்டங்களை செயல்படுத்துகிறதா அல்லது கேரள சதி குழுக்களே இவ்வாறு தன்னிச்சையாக செயல்படுகிறதா என்பது சந்தேகத்தை அளிப்பதாக உள்ளது.

உள்நாட்டு கலவரங்களை ஏற்ப்படுத்தி நாட்டின் ஒற்றுமைக்கு கேடு விளைவிக்க சதி நடக்கிறதா என்கின்ற ஐயம் ஏற்ப்படுகிறது. கேரளாவில் எதற்கெடுத்தாலும் கடையடைப்பு போராட்டம் என்ற நிலை இருந்து வருவது போல தமிழகத்தையும் சீர் குலைக்கும் சதிசெயலுக்கு முல்லைபெரியாறு அணையும் கூடங்குளம் அணு மின் நிலையமும் தற்போது இலக்காகி உள்ளது. அமைதியை சீர்குலைக்க இவ்வாறு தூண்டப்படும் சதி திட்டங்களை பொதுமக்கள் ஒருபோதும் ஏற்க்க கூடாது. அவற்றிக்கு துணை போகவும் சம்மதிக்க அல்லது இடம் கொடுக்க கூடாது. விழிப்புடனும் அறிவாற்றலுடனும் இல்லாவிடில் நாடு போர்க்களமாகும், யாருக்காக எதற்க்காக நாம் போராடுகிறோம் என்கின்ற விவரங்களை மேலோட்டமாக தெரிந்து கொண்டு செயல்பட கூடாது. விழிப்புடன் இல்லாவிட்டால் அமைதிக்கு பங்கம் விளையும் சதிகாரர்களின் வெற்றிக்கு நாம் துணை போவதாக ஆகிவிடும். அமைதியை குலைக்கும் சதி திட்டங்களுக்கு செவி சாய்க்க கூடாது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்வது அவசியம்..................oooOooo.............

11/25/2011

பாதுகாப்பு

மத்திய அமைச்சர் திரு சரத்பவாரை தாக்கிய வாலிபர் ஏற்க்கனவே கடந்த வாரத்தில் வேறு மத்திய அமைச்சரை தாக்கியவர் என்று கூறப்படுகிறது. இந்த வாலிபரை மனநலம் குன்றியவர் என்று காரணம் கூறி காவலிலிருந்து டெல்லி காவல்துறை வெளியே விட்டதாக கூறப்படுவதும் கேலிகூத்தாக உள்ளது. ஏற்க்கனவே டெல்லியில் பாதுகாப்பு எந் அளவிற்கு கடுமையாக உள்ளது என்பதற்கு பல சம்பவங்கள் நடந்துள்ளதும் நாடறிந்த செய்திகள். மத்திய அமைச்சர்களுக்கே இந்நிலை என்றால் ஏனைய இந்நாட்டு குடிமக்களின் நிலையைப் பற்றி யார் கவலைப்படுவது.

மக்கள் தொகைக்கும் நாட்டின் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கும் ஏற்றார்போல காவல்துறையை நவீனப்படுத்துவத்தின் அத்தியாவசியம் ஏற்ப்பட்டுள்ளதுடன் காவல்துறைக்கு இன்னும் அதிக காவலர்களை நியமித்து நவீனத்துவமான பாதுகாப்பு முறைகளில் பயிர்ச்சியளித்து பாதுகாப்பு வசதிகளையும் நவீன துப்பாக்கி மற்றும் இயந்திரங்களையும் மேம்படுத்தவேண்டிய கட்டாயம் தற்போது நாடு முழுவதும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்பதற்கு இது போன்ற சம்பவங்கள் உதாரணம். அவசர உதவிக்கு காவல்நிலையம் செல்லும் ஏழை மற்றும் பொதுமக்களின் நிலை மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இச்சம்பவம் சிறந்த உதாரணமாக உள்ளது.

அசம்பாவிதங்கள் ஏதேனும் நடந்த பின்னர் சில நாட்களுக்கு மட்டும் குறிப்பிட்ட பகுதியிலோ குறிப்பிட்ட நபருக்கோ பாதுகாப்பு கொடுப்பதுடன் நின்றுவிடுகின்ற பாதுகாப்பு சேவை என்பதுதான் காலம் காலமாக நடைமுறையில் உள்ளது, இதனால் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை மட்டுமே நிரந்தரமாகி விட்ட அவலநிலையால் ஆங்காங்கு நடக்கின்ற கொள்ளை கொலை சம்பவங்கள் தினம் செய்திகளில் இடம்பெற தவறுவதில்லை. செய்திகளில் இடம்பெறாத கொலை கொள்ளை வழிப்பறி, போன்ற பல சம்பவங்கள் இன்னும் மிகுதியாக நாள்தோறும் நடந்து வருகிறது என்பதே உண்மை. மத்திய அரசின் வயது முதிர்ந்த அமைச்சர்களுள் ஒருவரான சரத்பவாருக்கே இந்நிலை, சாதாரண மனிதர்களின் நிலை என்ன. யாரிடம் சென்று பாதுகாப்பு கேட்பது.


..................oooOooo.......................

11/23/2011

கருங்காலிகள், துரோகிகள்

அணுமின் நிலையத்தை எதிர்க்கும் கூட்டம் பல காரணங்களை காட்டி அணுஉலையை செயல்படுத்த விடாமல் தடுத்துவருகிறது, எதிர்ப்பாளர்களின் கூட்டத்தில் சிலர் தங்களது அறிவியல், விஞ்ஞான புலைமையினால் தங்களுக்கு அதன் தாக்கம் என்ன என்பது அரசைவிட அதிகமாகவே தெரியும் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். இவற்றிற்கு இடையே காங்கிரஸ் கட்சி நடுவன் அரசில் உள்ளதால் அணுமின் உலையை திறந்து மின்சார உற்பத்தியை துவங்க வேண்டும் என்று அக்கட்சியினர் கோரிக்கை வைக்கின்றனர். இவை ஒன்றிலுமே இடம் பெறாத அல்லது இவர்களின் கூற்று எத்தனை நியாயமானது அல்லது அநியாயமானது என்பதை அறியாமலேயே எதிர்ப்பாளர்களின் கூட்டத்தை ஆதரித்து வருகின்ற கூட்டமும் இவர்களுடன் சேர்ந்துகொண்டுள்ளது.

அணு உலை இயங்கத்துவங்கினால் பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் என்றறிந்த தங்களை அறிவியலில் சாணக்கியன் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு நடுவன் அரசின் மீதுள்ள வன்மைத்தையெல்லாம் ஒன்று திரட்டி பிரதமமந்திரியையும் சோனியா மற்றும் ராகுல், சிதம்பரம் ஆகியோரை கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் தங்களது கோரிக்கைகளை முன் வைக்கலாமே, இவர்களது கோரிக்கைகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி, உண்மையிலேயே நியாயமானதாகவும் பொதுமக்களின் நலன் மட்டுமே தங்களது நோக்கமாக இருந்தால் பிரதமரையும் அவரது தலைமையின் கீழ் செயல்படுகின்றவர்களையும் கேவலமான முறையில் விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன.

எத்தனை விஞ்ஞானிகள் தங்களது முழு அர்ப்பணிப்பை தங்களது தாய் நாட்டிற்காக முழு உள்ளத்தோடு அர்ப்பணிக்கின்றனர். கேள்விகள் கேட்பவர்கள் எல்லாருமே அதி புத்திசாலிகள் என்று தங்களை காண்பித்துக் கொள்வது என்பதொன்றும் புதிய வித்தையல்ல. இவர்கள் கேட்கும் கேள்விகளை வைத்து இவர்கள் வித்தகர்கள் என்று எண்ணிகொள்வோரும் நாட்டில் உண்டு. அப்படி சிலருக்கு வேண்டுமானால் இவர்கள் அறிவியலில் புலியாகவும் சிங்கமாகவும் தெரியலாம். பொதுவாக இவர்களது கோபக்கனல் எரிமலைபோல் வெடித்து வார்த்தைகள் என்கின்ற நெருப்புகளை வெளியேற்றும் போது அந்த நெருப்பில் கலந்துள்ள கனிமங்கள் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கு விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியம் தேவையில்லை. அணுஉலை விவகாரத்தை மட்டுமல்ல வேறு எது கிடைத்தாலும் மத்தியிலுள்ள அரசிற்கு எதிரான கோஷங்களை எழுப்ப இவர்கள் எப்போதும் தயார் நிலையில் தான் இருந்துகொண்டிருக்கின்றார்கள்.

இவர்களுடன் சேர்ந்து தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் தீயசக்திகளும் ஒன்று திரண்டு கைகோர்த்து கொண்டு அப்பாவி பொதுமக்களையும் சேர்த்துக்கொள்கின்றனர். தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்தோ
சீனாவிலிருந்தோ இந்தியாவிற்குள் வரவேண்டிய அவசியம் இல்லை நாட்டினுள்ளேயே இருந்துகொண்டு ஆளும் கட்சியின் அசைவுகளையெல்லாம் தவறாக சித்தரித்து பிரசாரம் செய்யும் இவர்கள்தான் முதல் தீவிரவாதிகள் என்பதை அதிக நாட்கள் மறைக்க இயலாது. இவர்களது ஆத்திரமெல்லாம் இவர்கள் மத்திய அரசிற்கு முன் வைக்கும் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் அதை அப்படியே அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு இவர்களது கோரிக்கைகள் அனைத்தையுமே மத்திய அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தவேண்டுமென்றால், மத்தியில் செயல்படுவது அரசாங்கம் இல்லை, அதற்க்கு தஞ்சாவூர் பொம்மைகள் என்று பெயர் சூட்டலாம்.

தீவிரவாதிகள் என்று சொன்னால் அது அதிகபட்ச்ச
துரோகியென்று அர்த்தம் இருக்காது, கருங்காலிகள், துரோகிகள் போன்ற பெயர்கள் தான் இவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.


..................oooOooo.............

11/22/2011

அவள் எங்கே போவாள்

இறுதிப்பயண
கூட்டமெல்லாம்
கலைந்து சென்றது
பல தினமாய்
அழு(த்)ததாலே
கண்கள் அயர்ந்து
உறக்கம் கொண்டேன்

அதிகாலை
அடுப்பாங்கரையில்
பாத்திர ஓசையில்லை
இரவு விளக்கு
பொழுது விடிந்தும்
அணைக்கவில்லை
அடிவயிற்றிலிருந்து
எழுந்தவொன்று
தொண்டையடைக்க
கண்களில் நீர்
அருவியானது

பெற்றவள் மீண்டும்
வருவாளா
அவள்மடி உறங்க
தருவாளா
குடிசையில் கூட
ராணி போல
என்னை பேணி
வளர்த்தவள்
இனி வருவாளா

உழைத்து
ஓடாய்போன
அவள் தேகம்
வறுமை தின்ற
அவள் அழகு
இனி நான்
காணமாட்டேனா

வேலைக்காரி
போல் எனக்கு
பணி செய்வாள்
நான்
புடவை அணிய
அவள் கண்களில்
நீர் மல்கும்
என் ரசிகையவள்
நான் பட்டம்
பெற்றேன்
அவள் பூரிப்பிற்கு
எல்லை இல்லை
கற்பனையில்
அவள் பறந்தாள்

பணிக்கு சென்றேன்
பெருமை கொண்டாள்
மாலை நான்
வீடு வர
காத்து
பதைத்திருப்பாள்

பொறுமையின்
சிகரமவள்
அன்பின் பல்
கழகமவள்
அழகில் அவள்
தேவதை

பிரிவொன்று
வருமென்று
மறந்திருந்தோம்
சீமைக்கு செல்வதற்கு
சீக்கிரமாய்
புறப்பட்டேன்
புது பயணம்
புது நாடு
யோசனையில்
என் தாயவள்
மனநிலையை
முழுவதும்
மறந்தே போனேன்

என்னை பிரிந்த
முதல் சமயம்

அவள்

ஆடிப் போனாள்
என்று
பிறகரிந்தேன்
பல மாதம்
கழித்து நான்
திரும்பி வந்தேன்
அப்போதும்
அவள்
நிலை
நான்
அறிந்தேன் இல்லை

இப்பிரிவெல்லாம் பிரிவல்ல
என்றுணர்த்த
தீரா வியாதியொன்று
படுக்கையிலே
ஒரு மாதம்
அவளை
கிடத்திவிட
மருத்துவரும்
கெடு கொடுத்தார்
அவள் உயிர்
பிரிவதற்கு

அவர் கூற்று
நடந்துவிட
என்னை விட்டு
அவள்
நிரந்தரமாய்
பிரிந்தே போனாள்
ஆரா துயர் என்னை
ஆட்கொள்ள
நிரந்தரமாய் அவள்
பிரிவை ஏற்றுக்கொள்ள
இயலாமல் நான்
தவித்தேன்

கனவெல்லாம் அவள்
நிறைந்தாள் என்
நினைவெல்லாம் அவள்
நின்றாள்
அவள் எங்கே
என்னை பிரிந்தாள்
என் உதிரத்தில்
அவள் இருந்தாள்
அவள் சாயல்
எனக்களித்தாள்
அவள் பிரியம்
என்னுள் வைத்தாள்
அவள் மூச்சு
எனக்களித்தாள்
அவள் வேறு
நான் வேறாய்
பிரிந்திருத்தல்
போதுமென்று
எனக்குள்ளே
ஒன்றாகி
கலந்து விட்டாள்.யார் காரணம்

விலைவாசிகள் ஏறினாலும் டீசல், பெட்ரோல், தங்கம் விலை ஏறுவது போல வீட்டிற்கு வீடு மகப்பேறும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. வருவாய்க்கு ஏற்றார் போல பிள்ளைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற திட்டம் இருப்பதில்லை, கூலித் தொழிலாளிக்கு நாளொன்றிற்கு 200 ரூபாய் வருமானம் என்றால் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டு அவர்களையும் சேர்த்து நால்வருக்கு உணவு உடை இருப்பிடம் அமைத்துக் கொள்ள இயலுமா என்று யோசித்து குழந்தை பேற்றிற்கு தங்களை தயார் செய்துகொள்ளும் அமைப்பு சமூகத்தில் இல்லை.

மாறாக வருமானம் மிகக்குறைந்த வீடுகளில் குழந்தைகளை நிறைய பெற்றுக்கொண்டு பராமரிக்க இயலாமல் அவர்களை சமூகவிரோதிகள் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். அளவிற்கு அதிகமான சொத்துக்கும் வருமானத்திற்கும் சொந்தக்காரர்களின் இல்லங்களில் ஒரு குழந்தையே போதும் என்று குழந்தை பேற்றை நிறுத்திக்கொள்கின்றனர். மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் சீன நாட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது போன்று இந்தியாவிலும் திட்டங்கள் நடைமுறைபடுத்தவேண்டும்.

உலகின் மக்கள்தொகையில் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருந்து வருவதை தவிர்க்க வேறு வழியே இல்லை. வறுமை ஒழிப்பிற்கும் தானிய உற்பத்திக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அடிப்படை காரணம் அதிக மக்கள் பெருக்கம். அடிப்படை சுகாதாரம் அடிப்படை கல்வி போன்றவற்றை கிராமப்புறம் மற்றும் நகரத்தை ஒட்டிய கிராமங்களில் கட்டாயம் ஆக்க அரசு முயன்றாலும் இடையே பல ஊழல்கள் அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இல்லை.

மழைகாலத்திற்கு முன்னர் மழைநீர் தடங்கலின்றி போகும் வழித்தடங்களை ஆக்கிரமித்திருக்கும் கழிவுகள், அனுமதியின்றி கட்டப்படும் குடிசைகளை அகற்றினால் மழைநீர் சாலைகளில் தேங்கி போக்குவரத்திற்கு இடையுறு ஏற்ப்படுவதை தவிர்க்கலாம். ஏரி, குளங்களை தூர்வாரி தயாராக வைத்திருக்கும்போது அவற்றில் மழைநீர் சேமிக்கப்பட்டு சுற்றுப்புற ஊர்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய நீர் தேவைகளை பூர்த்தி செய்ய இயலும். பெய்கின்ற மழைநீரெல்லாம் வீணாக ஓடி கடலில் கலந்துவிட்டால் வருடம் முழுவதிற்கும் கிணறுகளில் குடிநீர் எவ்வாறு சுரக்கும், விவசாயத்திற்கு நீர் வருடம் முழுவதற்கும் எப்படி போதுமானதாக இருக்கும்.

சாலைகளில் மழைநீர் ஓடும் கால்வாய்களில் ஏற்ப்படும் அடைப்புகள், பலவற்றில் மழைநீர் செல்வதற்கான வழிகளின்றி அமைக்கப்பட்டிருக்கின்ற சாலைகள் என மழை நீர் தேங்குவதற்க்கான காரணங்கள் பல, இதனால் மழைநீரும் கழிவுநீரும் இணைந்து ஓடாமல் சாலைகளில் தேங்கி நின்று அதில் நடக்கும் பாதசாரிகளுக்கு தொற்று நோய் பரப்பும் கிருமிகளை பரப்பி, காய்ச்சல், வாந்தி, பேதி போன்ற நோய்கள் ஏற்ப்பட காரணமாகிறது. எல்லாவற்றிற்கும் மிக முக்கிய காரணம் தேவையான பராமரிப்பின்றி கிடப்பில் கிடக்கும் சமுதாய முன்னேற்ற பணிகள். கேட்பாரற்று கிடக்கும் சமூகநலப்பணிகள். எந்த துறையை எடுத்தாலும் தேக்கம், தனியார் நிறுவனங்களில் நடக்கின்ற பணிகளைப்போன்று அரசு பணிகள் செயல்படுவதில்லை, இதற்க்கு காரணமாக கூறப்படுவது மெத்தனபோக்கு. வாங்குகின்ற சம்பளத்திற்கு ஏற்ற உழைப்பை கொடுக்க இயலாத சுயநலம் மிக்க கூட்டம்.


.............ooOoo.............

11/21/2011

பூஜியத்தினுள்ளே......

ஒன்றில் கண்டேன்
சுகம்
இரண்டில் பசி
மூன்றில் பாசம்
நான்கில் பேச்சு
ஐந்தில் அறிவு

ஆறில் நட்பு
ஏழில் அன்பு [இறைவன்]
எட்டில் வறுமை
ஒன்பதில் முயற்சி
பத்தில் கண்டேன்
உறவுகளை
பதினொன்றில் கண்டேன்
விரோதிகளை
பனிரெண்டில் கண்டேன்
சோகங்களை
பதிமூன்றில் கண்டேன்
உழைப்பை
பதினான்கில் கண்டேன்
உணர்வுகளை
பதினைந்தில் கண்டேன்
கன்று காதலை
பதினாறில் கண்டேன்
படிப்பின் மேன்மையை

வறுமையும் படிப்பும்
இரு கரம் நீட்ட
இளமையில்
காதல் மறந்தே
போனது
காலம் கடந்த
பின்னே
தொடர்ந்த காதல்
இருட்டில் தொலைத்த
பணம்போல
காணாமல் போனது

திருமண தொடர்கதைக்கு
நாயகியாய்
புதிய உறவுகளின்
உரசல்கள் இடையே
நுழைந்த
புது முககுழந்தைகள்
வாழ்க்கை வண்டி
நான்கு சக்கரமாய்
பயணம் தொடர.......


திரும்பி பார்க்கிறேன்
பூஜியத்தினுள்ளே.....
வெறுமையாய்.......
'நான்' என்றோ
தொலைந்துப்போனேன் .....


.............oooOooo................

11/20/2011

கவிஞர் திரு வைரமுத்து


உள்ளமும் அறிவும்
வெண்மை நிறமென
உணர்த்திய
பட்டை தீட்டாத
'வைர' நிறமொத்த
புதுமை கரு'முத்தே'

மாதும் மதுவும்
இல்லா
புதுமை கவிஞன் நீ
வரவில் செலவை
சரியாய் செய்ய
தான தருமம் என
திட்ட வாழ்வை
கையாளும் மகா
புரட்சிக் கவிஞன் நீ

என்றும் வாடா
கவி மலரால் நீ
தொடுத்த தமிழ் மாலை
ஓயாத நறுமணம்
வீசி
இன்பக் கிளர்ச்சியினை
தெவிட்டாது அளித்திடுதே
அப் பூக்களெல்லாம்
விற்ப்பனைக்கு
விற்றாலும் தவறில்லை

அவற்றை

விற்கும் விலையெல்லாம்
அநியாய விலையல்ல
வாங்கும் விலையெல்லாம்
அநியாய விலைதான்
விலை பேச
இயலாத வகையில்
அற்புதமாய்
தொடுத்த பிரம்மாவும்
நீயன்றோ

தமிழ் இலக்கணமும்
இலக்கியமும்
உன் காதல் என்றால்
அறிவியலின் மீதுனக்கு
மோகம் அதிகமாமே

எத்தனையோ கற்றுணர்ந்து
முத்தமிழ் கவி படைத்தாய்
ஆனால்
மனிதர்களின் திருக்கு
எண்ணம் தனை
படித்தறியா பேதையானாய்

அறிவியலின் அதிசயங்கள்
இயற்கையின் அதிசயங்கள்
இலக்கணத்தின் வரம்புகள்
இலக்கியத்தின் உச்சங்கள்
இவையனைத்துமே
உனக்கு அத்துப்படி

சீற்றம் மிக்க
கடலலையைக்கூட
பதவிசாய் பாங்காய் கூற
ஆற்றல் உமக்கு
அதிகமுண்டு

வில்லங்க மனிதர்களின்
விவேகமற்ற செயல்கள்
மட்டும் என்றும்
உன் கருத்துக்குள்
நுழைந்ததில்லை


உம் புலமை
கண்டு
பொறாமை கொண்ட
தீயர
வர்
பித்தளை கணையாழி
பரிசளித்து
அவர் தரத்தை
காண்பித்தார்

உமக்கு

தமிழ் கொடுத்த
பரிசு போதும் - கவிதை
தமிழ் புலமை கொடுத்த
புதையல் போதும்-ரசிகன்

நான் பிறந்த
நூற்றாண்டின்
என்னுடன்
பிறந்த
அற்புத
கவிஞன் நீ
என்றுணரும்போதெல்லாம்
சொல்லொண்ணா
இன்பமொன்று
வருகுதுவே

சாகா வரம்
பெற்ற உம் கவித்துவம்
என்றும் வாழ்க !!


10/06/2011

கண்ணால் காண்பது.....பொய்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி, ஆனால் இது எல்லோருக்கும் எல்லா சமயங்களிலும் பொருந்துவதே இல்லை. இதனால் பல விதமான இழப்புகளை பொதுமக்கள் சந்திக்க நேருவதும் வாடிக்கையாகி வருகிறது. சிலரது புறத்தோற்றத்திற்கும் முகபாவனைகளுக்கும் துளியேனும் சம்பந்தமே இல்லாத அளவிற்கு முற்றிலும் வேறான உண்மைகள் உள்ளடங்கி கிடக்கின்றது. இப்படித்தான் பல கொள்ளை திருட்டு கொலை போன்ற சம்பவங்கள் என்று எங்கு பார்த்தாலும் நடந்து வருகிறது. நடை, உடை, பாவனையை வைத்து ஒருவரை பற்றி தீர்மானிக்க இயன்ற காலம் கடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆளை பார்த்தாலே இவர் இப்படிப்பட்ட குணம் கொண்டவர் என்பதை பறை சாற்றிய காலம் தற்போது இல்லை. இதனாலே ஏமாறுவதும் ஏமாற்றப்படுவதும் எங்கேயும் சகஜமாகி வருகிறது.

இதனால் யாரையும் நம்புவது முற்றிலும் இல்லாமல் அழிக்கப்பட்டு வருகிறது. 'போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்'என்று விளம்பரங்களில் மற்றும் பொருட்களின் மீதும் எழுதப்பட்டு வெளியிடுவதுண்டு ஆனால் தற்போது போலிகளில் கூட 'போலிகளைக்கண்டு ஏமாறாதீர்கள்' என்கின்ற வாசகம் அச்சிடப்பட்டு விற்ப்பனைக்கு வருகின்ற அளவிற்கு போலிகளின் வரவு அதிகரித்து உள்ளது. மனிதனை மனிதன் ஏமாற்றும் காலம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது, எப்படியாவது சுக வாழ்க்கை அடைந்துவிட்டால் போதும் என்பதே இவர்களின் குறிக்கோளாக உள்ளது. விஜிலன்ஸ் ஆபீசர், இன்கம் டாக்ஸ் ஆபீசர், காவல் துறையினர், மருத்துவர், மெடிகல் ரெப்ரசன்டேடிவ், டாக்ஸ் கலக்டர் என்று இவர்களின் வேஷத்திற்கு முடிவே இல்லாமல் இருக்கிறது.

இரவில் வீடுகளில் கொள்ளையடிக்கும் தொழில் அமோகமாக நடத்தப்படுகிறதை சமீபத்திய செய்திகள் நமக்கு தெரிவிக்கிறது. திருடுகின்ற வீட்டின் சமயலறையில் இருக்கும் உணவை தின்று மதுபானத்தை அங்கேயே குடித்துவிட்டு அவர்கள் வீட்டின் பீரோவை உடைத்து கொள்ளையடித்து போகும் பிச்சைகார திருடன், நகைகளை பாலீஷ் போட்டு தருவதாக கூறி ஏமாற்றி எடுத்துகொண்டு தலைமறைகின்ற திருடன், இரவு நேரத்தில் வீட்டிற்க்குள் திருட போகின்ற சமயத்தில் அவர்கள் வீட்டின் கட்டிலில் நடக்கும் உடலுறவு காட்சிகளை கண்டு ரசிக்கும் அல்ப்பன், திருடிக்கொண்டு போகும்போது அவர்கள் வீட்டு வாகனத்திலேறி தப்பிக்கும் கேடு கெட்டவன், இரண்டு அல்லது மூன்று கிராம் தங்கதோடு அல்லது மூக்குத்திக்காக வயதான கிழவியை கொன்றுவிட்டு காதை அறுத்துக்கொண்டு போகும் மூர்க்கன் என்று இவர்களைப் பற்றிய விவரங்கள் நம் சிந்தையை பேதலிக்க வைக்கின்றது.

சிறிய குழந்தைகளை கடத்திச் சென்று பேரம் பேசும் உழைக்க லாயக்கற்ற முடவன், அடுத்தவர் மனைவியை அடுத்தவர் உழைப்பை அபகரித்து உல்லாசம் தேடும் முடவர்களின் கூட்டம் நாளுக்கு நாள் பெருகி வருவதை காவல்துறை தடுக்க முயற்ச்சிகள் எடுக்க வேண்டும். சமீபத்தில் கோவை அருகே நடந்த கொள்ளை சம்பவத்தில் திருடு போன ஆயிரம் சவரன் நகைகள் மற்றும் கொள்ளை கும்பலை காவல்துறை கண்டு பிடித்ததைப் போன்று, நடிகையின் பெற்றோரை தாக்கி நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற திருடர்களை உடனே காவல்துறை பிடித்ததை போன்றே ஏனைய திருடர்களையும் கொள்ளை மற்றும் கொலை ஏமாற்று போன்றவற்றில் ஈடுபட்டு மக்களை துன்பத்திற்கும் பயத்திற்கும் உள்ளாக்குகின்ற சமூக விரோதிகளை பிடித்து சில வருட சிறை தண்டனை மட்டும் கொடுக்காமல் கடும் தண்டனைக்குட்படுத்தினால் மட்டுமே மீண்டும் புதிய திருடு கொள்ளை கொலை ஆட்கடத்தல் போன்ற சமூக விரோதிகளின் பெருக்கம் குறைக்க இயலுவதுடன் மீண்டும் நடக்காமல் தடுக்க அதிகபட்ச தண்டனைகள் கொடுக்க வேண்டும், சிறையிலிருந்து வெளி வரும் இவர்கள் மீண்டும் அதே குற்றங்களில் ஈடுபட இயலாவண்ணம் தவிர்க்க இயலும்.

சிறப்பான முறையில் காவல்துறையினர் இயங்குவதனால் தான் எளிதில் கொள்ளையர்களை கொலைகாரர்களை பிடிக்க முடிகிறது, ஆனால் மீண்டும் மீண்டும் குற்றவாளிகள் பெருகாமல் தடுக்க சட்ட திருத்தங்கள் செய்வது அரசின் கடமையாகும்.

9/30/2011

போராட்டம்

நக்சலைட்டுகளுக்கு பெயர் போன ஆந்திரபிரதேசத்தில் தனி தெலுங்கானாவிற்கு நடத்தப்படும் போராட்டங்கள் நியாயமானதா என்பது கேள்வி என்றால் போராட்டக்காரர்களை பொருத்தமட்டில் மட்டுமே நியாயமாக இருக்கும். இன்று நாட்டில் நடக்கும் பல போராட்டங்களும் இந்த வகையை சேர்ந்தது. பேருந்துகளை தீவைத்து எரித்து நாசம் செய்வதில் போராட்டக்காரர்கள் தீவிரம் காட்டிவருவதைப் பார்த்தால் தனி தெலுங்கானாவை மட்டுமே கோருவதாக தெரியவில்லை. சென்னையில் நடந்த ரயில் விபத்து போன்றே போராட்டங்களுக்கு வேறு காரணங்களும் இருக்ககூடும் என்ற சந்தேகம் ஏற்ப்படுகிறது.

வேறு காரணம் என்றால் வேற்றுகிரஹவாசிகளை அழித்துவிடும் நோக்கமாகவா இருக்கப்போகிறது, நடுவன் அரசை கவிழ்க்கும் சதிகளில் இதுவும் ஒன்றோ என தோன்றுகிறது. மன்மோகன் அரசுக்கு அல்லது காங்கிரஸ் ஆட்சிக்கு தொல்லை கொடுப்பதே போராட்டங்களின் நோக்கமாக இருக்க கூடாதா, போராட்டங்களை சுட்டி காட்டி எதிர்கட்சிகள் 'நாட்டில் மன்மோஹன்சிங் தலைமையிலான அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை' என்ற குற்ற சாட்டை கூறி வருவதை பார்த்தால் மன்மோஹன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்ச்சியை பதவியை விட்டு இறக்குவதற்கான பல உத்திகளில் இதுவும் ஒன்று என்றே எண்ணத் தோன்றுகிறது. ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும் என்று சத்தமிடும் பலர் 2G ஸ்பெக்ட்ரம் ஊழலை காரணம் காட்டி போதாக் குறைக்கு இன்னும் பலரையும் அந்த வழக்கிற்காக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென வதந்திகளை கிளப்பி வருகின்றனர்.

மீண்டும் எந்த கட்சி ஆட்சியை கைப்பற்ற இயலுமோ அல்லது முயன்றுகொண்டிருக்கிறதோ அந்த கட்சிதானே இவ்வாறான செயல்பாடுகளுக்கு காரணமாக இருக்க முடியும். ஒன்றிரண்டு மாநிலத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கின்ற கட்சிக்கு தங்கள் இன்னும் அதிகமான மாநிலங்களில் ஆட்சி செய்யவேண்டும் என்ற (பேரா)ஆசை இருக்காதா என்ன, அதிகபட்ச மாநிலங்களில் தற்போது ஆட்சி செய்து வருகின்ற காங்கிரஸ் கட்ச்சிக்கு நாட்டை ஆளுகின்ற தரம் இருக்க கூடாதா. ஒன்றிரண்டு மாநிலத்தை தங்கள் கைக்குள் வைத்திருக்கும் கட்சியின் ஆசை எதுவாக இருந்தாலும் அவர்கள் ஆட்சி நடத்துகின்ற மாநிலங்களில் எத்தனை முதலமைச்சர்களின் ஆட்சி பொறுப்பு மிக்கதாகவும் ஊழல் அற்றதாகவும் உள்ளது என்பதை நினைவில் கொள்ள அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

ஆட்சி பொறுப்பில் இருக்கின்ற கட்சியின் மீது குறைகளை கண்டுபிடித்து அவற்றை ஒன்றுக்கு பத்தாக மாற்றி புரளி கிளப்புவதும் ஆட்சியிலிருக்கும் கட்ச்சியை ஆட்ச்சியை விட்டு எப்படியெல்லாம் வெளியேற்ற முடியுமென்று திட்டங்கள் வகுப்பதற்கே நேரம் போதாக்குறையாக இருக்கும்போது தங்களது குறைகளை அவர்களால் எண்ணி பார்க்க நேரம் போதாது. இன்றைய சூழலில் ஏதாவது இனாம் கிடைத்தால் ஒட்டு போட தயாராக இருக்கின்ற மக்களுக்கு ஊழலைப்பற்றியோ கட்ச்சியின் கொள்கைகள் பற்றியோ அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதில்லை. அதனால் தேர்தலில் யார் வெற்றி பெற வாய்புகள் அதிகம் என்ற கருத்து கணிப்பிற்கும் அவசியம் இருக்கப்போவதில்லை. எந்த கட்ச்சிகாரர் அதிக இனாம் கொடுக்க முன்வருகிராரோ, அல்லது தேர்தல் பிரசாரத்தில் யார் அதிக விலையிலான பொருட்களை வாரி கொடுப்பதாக சொல்கின்றார்களோ அவர்களுக்கு ஒட்டு போடும் நிலை இன்றைய வாக்காளர்களின் நிலை.

இதனால் ஊழல் அற்ற அரசு ஆட்சியை கைப்பற்றினால் என்ன ஊழல் நிறைந்த அரசு ஆட்சியை கைப்பற்றினால் என்ன, யார் வேண்டுமானாலும் எந்த தொகுதியில் நின்றாலும் ஜெயித்துவிடலாம் அது அவர் கொடுக்கப் போகின்ற தேர்தல் அறிக்கையில் உள்ள இனாமை பொறுத்தது. ஆந்திராவில் பேருந்து எரிப்பு கடையடைப்பு தடியடி என்று மக்களின் இயல்பு வாழ்க்கையை முடங்க வைப்பவர்களின் ஆவேசம் பொதுமக்களுக்குத்தான் அன்றாட பிரச்சினை.நோயாளிகளும் அன்றாடம் காய்ச்சிகளும் இயங்க இயலாமல் போராட்டக்காரர்கள் மக்களை அவதிக்குள்ளாக்குவது வருந்தத்திற்குரியது. மன்மோகன்சிங் தலைமையை பதவியிலிருந்து இறக்கி விட்டு அடுத்த தலைமை பதவியேற்கும் போது நாட்டிலிருந்து ஊழல் மொத்தமாக கழுவப்பட்டு நாடு சுத்திகரிப்பு செய்யப்படப் போகிறதா, அல்லது நாடு இப்போது இருப்பதைவிட உலகமே பார்த்து வாயில் விரல் வைக்கும் அளவிற்கு நிலைமை மாறப்போகிறதா.

அவ்வளவு ஏன், பெட்ரோல் டீசல் விலை, தங்கம், வெள்ளி விலை, வீடு மனை விலை, அன்றாட உணவுப் பொருட்களின் விலை போன்ற விலையேற்றத்தை 20 அல்லது 25 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைக்கு திருப்பிவிடப் போகிறதா, அல்லது சுவிஸ் வங்கியில் முடங்கி கிடக்கின்ற கோடிக்கணக்கான கருப்புப்பணம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு அவை பொதுமக்களின் தேவைகளுக்காக செலவிடப்படப் போகிறதா, கசாப்பை தூக்கிலிடப்போகிறதா, ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப் போகிறதா. 'மோடி' வித்தை காட்டி வருகின்ற ஒரு மாநிலத்தை கையில் வைத்துகொண்டு 'இது நேர்மை நாணயம் மிகுந்த ஆட்சி முறை' என்று எத்தனை காலத்திற்கு வித்தை காட்ட இயலும். மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பதவியை விட்டு இறங்கினால் நாடு என்னென்ன நன்மைகள் பெறப்போகிறது என்பதை அதை எதிப்பவர்களால் பட்டியலிட முடியுமா. பட்டியல் இட்டாலும் அவை ஊழலற்ற அதீத திறன் படைத்ததாக இருக்கும் என்று உர்ஜிதம் செய்ய இயலுமா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

9/29/2011

அப்ஸ்ஷெஷனா லாபமா நட்டமா

கணிணி மூலம் வலைதளத்தை அடைந்து, அங்கே கொட்டி கிடக்கும் ஆயிரம் ஆயிரம் வகையான வலைத்தளங்களை படிப்பதும் அறிந்து கொள்வதும் காண்பதும் சுவாரஸ்யமானது, இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற தொழில் நுட்ப்பங்களுள் ஒன்று. அவ்வாறு அறிந்து கொள்கின்ற தகவல் ஒருபுறம் இருக்க, வலைபூக்கள் [ப்ளாக்] மூலம் நமது உணர்வுகளை கருத்துக்களை எழுதி வைப்பது இன்னொரு வகையான அனுபவம், இவற்றில் லாப நட்ட கணக்கு பார்ப்பது என்பதை எவ்வகையில் நியாயப்படுத்த முடியும், சிலருக்கு பொழுது போக்கிற்காக பயன்படுகின்ற ஒரு அம்சம் மற்றவருக்கு தொழிலாக இருக்கும்போது, யார் லாப நட்டம் எதிர்பார்க்க முடியும்.

சினிமா என்பது ரசிகனுக்கு பொழுது போக்கு அம்சமாக கருதபட்டாலும் அவற்றை உருவாக்குபவர்களுக்கும் அதில் ஈடுபடுகின்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் அது ஒரு வேலையாக வயிற்று பிழைப்பாக உள்ளது போன்றே வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் நோக்கம் வெவ்வேராக இருக்கின்ற போதும் அவற்றை உருவாக்கிய அல்லது உருவாக்குகின்றவர்களுக்கு தொழிலாக உள்ளது. எந்த கருவியாக இருப்பினும் அதன் பயன்பாடும் அவற்றை உருவாக்கியதன் நோக்கமும் வெவ்வேறாக இருப்பது என்பது புதிதல்ல. கைபேசியின் அவசியம் என்பது மிகவும் உன்னதமானது, அதிலிருந்து மற்றவருக்கு அனுப்புகின்ற குறுஞ்செய்திகளுக்கான வசதி உருவாக்கியதன் நோக்கம் மிகவும் முக்கியமானதாக கருதபட்டடாலும் அதை பெரும்பாலும் பயன்படுத்துவது பொழுதுபோக்காகி போனது அதை உபயோகப்படுத்துபவரின் இழிச்செயல்.

ஈடு இணையற்ற இணையதள வசதிகளும் இழிச்செயல்களுக்கு உபயோகிப்பவரது நோக்கமாக இருப்பதும் அப்படிப்பட்ட ஒன்று. இதனால் இந்த கண்டுபிடிப்புகளெல்லாம் வீணென்று கருத இயலுமா, குறுஞ்செய்திகளை வீணாகவும் இழிச்செயல்களுக்கும் பயன்படுத்துகின்ற நிலை இந்தியாவில் மட்டுமே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. வலைதளங்களை இழிச்செயல்களுக்காக, தவறான நோக்கத்திற்காக பயன்படுத்துகின்ற ஆசாமிகள் குறைவா என்ன, ஆனால் அப்படிப்பட்ட வலைத்தளங்களை தவிர்ப்பதும் அவரவரது பயன்பாட்டை பொறுத்துள்ளது. சில சமூக விரோதிகளின் அத்து மீறல்கள் வலைதளங்களில் மிக அதிகம். அப்படிப்பட்டவர்களின் நடவடிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கான தண்டனைகளும் நாளுக்குநாள் கூடி வருகிறது.

அரசுமயமாக்கப்பட்ட வங்கியொன்றின் வாடிக்கையாளரின் வங்கிகணக்கிலிருந்த பெருந்தொகை ஒன்றை மும்பையிலிருந்து செயல்படுகின்ற வலைதள திருடர்களின் கூட்டமொன்று அபகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது, இன்றளவும் அந்த கும்பல் அகப்படவில்லை என்பதன் காரணம் என்ன என்பது விளங்காத புதிர் என்றே சொல்லலாம். நெட் பாங்கிங் என்பது அந்த அளவிற்கு பாதுகாப்பற்றதாக உள்ளதா அல்லது வங்கியில் பணிபுரிகின்ற ஊழியரின் ஒத்துழைப்பும் சதித்திட்டமும் காரணமாக இருக்க முடியுமா என்பது கேள்வியாக உள்ளது. அந்த வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கு வெவ்வேறு பாதுகாப்பு முறைகளை கையாள சொன்னாலும் திருடனை தன்னுள் வைத்துக் கொண்டு பாதுகாப்பு பற்றி பேசுவதில் என்ன லாபம் இருக்கப்போகிறது என்பது விளங்கவில்லை. கையும் மெய்யுமாக பிடிபடுகின்ற வரையில் வேலியே பயிரை மேய்கின்ற கதைதான்.

ப்ளாக் எழுதுவதை அப்ஷெஷன் என்று என்னால் ஒருக்காலும் சொல்ல இயலாது, அப்படி ஒரு பெயரை சூட்டுவதாக இருந்தால் நாம் அன்றாடம் செய்கின்ற பல காரியங்களையும் இந்த அப்ஷெஷன் பட்டியலில் சேர்த்தாக வேண்டும். ஏதேனும் ஆதாயம் எதிர்பார்த்துதான் ஒவ்வொரு காரியத்தையும் செய்யவேண்டும் என்று நினைத்தால் நிறைய காரியங்களை நாம் செய்யவே இயலாது. நாம் எழுதுவதை பத்து பேர் படிக்க வேண்டும் என எதிர்பார்த்தால் டயரி எழுதும் பழக்கத்தை எதனுடன் சேர்ப்பது. என்னைப் பொறுத்த அளவில் எழுதுவது என்பது எனக்கு பிடித்திருக்கிறது, எனது கருத்துக்களை உணர்வுகளை நான் நினைக்கின்ற போது எழுத ஒரு இடம் ப்ளாக். இதற்க்கு மேல் வியாக்கியானம் செய்வதில் போட்டி போட்டுக்கொண்டு எழுதுவதில், லாப நோக்கில் எழுதுவது போன்ற எழுதுவதற்கென்று எவ்வித எதிர்பார்ப்பும் என்னை பொருத்தமட்டில் இல்லை.

விதைக்கின்ற விதைகள் அனைத்துமே முளைப்பதில்லை, முளைக்கின்ற அனைத்துமே வளர்ந்து மரமாவதில்லை, மரமான அத்தனையுமே காய் கனிகளை தருவதில்லை. அப்படியே காய் கனிகள் விளைந்தாலும் எல்லாமே தின்பதற்கு உகந்தவைகளாக இருப்பதில்லை. இது இயற்கையின் விதி.


********************************************************************************************

9/27/2011

வார்த்தை

வார்த்தைகள் எப்படி தோன்றியது, மனிதன் தோன்றுவதற்கு முன் தோன்றியவற்றுள் வார்த்தைகளும் ஒன்று என கூறப்படுகிறது. வார்த்தைகள் இல்லா உலகம் எவ்வாறு இருந்திருக்கும் அமைதியாகவா, ஓங்கார ஓசை மட்டுமே நிறைந்ததாகவா, ஆதி மனிதர்கள் எவ்வாறு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி இருப்பார்கள். இவற்றையெல்லாம் இன்றைய ஆராய்சிகள் மூலம் நாம் அறிந்தாலும் இன்றைய உலகில் காணப்படும் மொழிகளுள் பல மொழிகள் கால போக்கில் மாறி அல்லது மாற்றி புழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன, சில வார்த்தைகள் வழக்கத்திற்கு மாறானவைகளாக கருதப்படுவது நம்மை சற்று சிந்திக்கவும் செய்கிறது. ஆங்கிலமொழியினை எடுத்துக்கொண்டால் பிரிட்டிஷ்காரர்கள் புழங்குகின்ற ஆங்கில சொற்க்களுக்கும் அமெரிக்கர்கள் புழங்குகின்ற ஆங்கில சொற்க்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் காணப்படுவதை நாம் அறிவோம்.

இதற்க்கு காரணங்கள் பல இருப்பினும் மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுவது எளிய முறையில் வார்த்தைகளுக்குரிய சத்தத்தை வைத்து அவற்றை உச்சரிக்கின்ற வகையிலேயே எழுதுவது அமெரிக்கர்களின் ஆங்கிலம். ப்ரிடிஷ்காரர்களின் ஆங்கிலம் என்பது மிகவும் முதன்மையானதும் பழமை வாய்ந்ததுமாக இருப்பதால் அந்த ஆங்கில சொற்களுக்கு தனி தன்மைகள் நிறைய உண்டு. பிரிட்டிஷ்காரர்கள் உபயோகிக்கும் ஆங்கில வார்த்தைகள் பலவற்றில் உச்சரிப்பிற்க்கும் எழுத்திற்கும் பல மாற்றங்களை நம்மால் காண முடியும். இலக்கியமாக கருதப்படும் ஷேக்ஸ்பியரின் ஆங்கில வார்த்தைகள் முற்றிலும் வேறாக இருக்கும் இதனாலேயே அவற்றை ஷேக்ஸ்பியரின் ஆங்கிலம் என்று வழங்கப்படுகிறது. கிரேக்கு இலத்தீன் மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் வேதாகமத்தை [பைபிள்] மொழிபெயர்ப்பு செய்தபோது அதற்க்கு கையாளப்பட்ட ஆங்கிலச் சொற்கள் முற்றிலும் வித்தியாசமாக இருந்தன, இதற்க்கு காரணம் சாதாரணமாக புழக்கத்தில் இருந்த ஆங்கில வார்த்தைகளையே வேதாகம வார்த்தைகளாக்கும் பட்ச்சத்தில் அதன் முக்கியத்துவம் சாதரணாம கருதப்படக் கூடாது என்பதே.

தமிழ் மொழிக்கான வரலாறுகள் மிக அதிகம். பழங்காலத்தில் உபயோகிக்கப்பட்ட தமிழ் வார்த்தைகளும் எழுத்துக்களும் இன்றைய புழக்கத்தில் இல்லை என்பது தமிழ் மொழியின் வரலாற்றின் மிகவும் வருத்ததிற்குரிய செய்தி. இந்தியாவின் ஆட்சி மொழி தற்போது ஹிந்தியாக இருந்தாலும் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு மொழிகள் பேசவும் எழுதவும் உபயோகிக்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்தியாவில் ஆட்சி செய்து பல ஆண்டுகள் தங்கியிருந்த காரணத்தால் இந்திய மொழிகளில் பல அயல்நாட்டு வார்த்தைகளும் கலந்து அவை இன்றும் உபயோகிக்கப்பட்டு வருகின்றது. சென்னையின் பேச்சு மொழியில் பல வேற்று மொழி சொற்கள் கலந்து அவை இன்றுவரை புழக்கத்தில் இருந்து வருகிறது.

சென்னை துறைமுகம் மிகவும் பழமை வாய்ந்தது பழங்காலத்தில் சென்னை முக்கிய வியாபாரஸ்தலமாக விளங்கியது பல நாட்டைச் சேர்ந்தவர்களின் புகலிடமாக விளங்கியது. இதனால் பல மொழி சொற்கள் தமிழின் இடையே பேச்சு மொழியாக நுழைந்தது. அவ்வாறு நுழைந்த வேற்றுமொழிச் சொற்க்களை அதன் அர்த்தம் அறியாமலேயே பயன்படுத்தியதன் விளைவாக அவற்றின் உச்சரிப்பும் தவறாக உச்சரிக்கப்பட்டது. இவ்வாறு 'சென்னைத் தமிழ்' என்று இன்றைக்கு கேலி செய்யப்படும் பேச்சுத் தமிழ் உருவானது. வேற்று மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் வியாபார நோக்கிற்காக பெருமளவில் சென்னையில் குடி புகுந்ததன் விளைவு அவர்கள் தமிழ் வார்த்தைகளை உச்சரிக்கின்ற விதமும் வித்தியாசமானதாகிப் போனது. 'சென்னைத் தமிழ்' பலவிதங்களில் வித்தியாசப்படக் காரணம் சென்னை என்பது ஆதிகாலம் தொட்டே வியாபாரஸ்த்தலமும் பல வெளிநாட்டவர்களின் வருகையும் அவர்கள் பயன்படுத்திய தமிழ் உச்சரிப்பும் மிக முக்கிய காரணம்.

அர்த்தம் தெரியாமலேயே புழக்கத்தில் இன்றுவரையில் பேசப்படும் 'சென்னைத் தமிழ்' வார்த்தைகள் இவ்வாறு உண்டானவைதான்.

கசமாலம், கேப்மாரி, தூம, கலீஜ், கழிசாட, கம்மினாட்டி, கண்ட்ராவி, நாதாறு, லோலாயி, நாதாரி, நாஷ்டா, வஸ்தாதி, லவடிகபால், வண்ட வண்டையா, வவுறு, கயிலாத்து, இஸ்த்துகினு, கப்பு, கவுச்சி, கக்கூஸ், கக்கிசு, சாக்கடை, சாக்காட, எக்கா, தபா, ராவிக்கு, ரவூண்டு, கயித, இட்டாந்த, ரோதன, டாவு, டபாய்காத, லங்கடா, கைமாத்து, கச்சிட்ட, எரமாரம் கெட்டது, கலாப்பன, முச்சூடும், கபோதி, டமாரம், சிம்ட்டா, லொட்டு லொசுக்கு, தாம்பு கவுறு, செத்தை, பின்னாடி, முன்னாடி, மின்னாடி, ஓடியாந்து, கீத்து கொட்டா, சீண்டாத, கடாசு, சீவு, துண்ணு, சீக்காளி, ஜளிப்பு, வாராவதி, டப்பாங்குத்து, ஸ்கோலு, பாத்ரூம்பு, மேஜர், மஞ்சாசோறு, மாஞ்சா, மாமூல், சொச்சம், கொல்லிக்கி, பேணுடுச்சி, டிச்சி, கப்சா, மஜா, மாலு, லொள்ளு, அண்ணாத்த, அயித்த, தோட்டி, லச்சி, லம்ப்பா, லடாய், பன்னாட, பிசாத்து, ஏடாகோடம், பவுசு, மவுசு, நெசம், நெசமாலம், பூடு, கீது, ரவுண்டு கட்ற, மைனரு, கம்முன்னு, டவுசரு, இன்னாண்ட, அன்னாண்ட, உன்னாண்ட, என்னாண்ட, சொதப்பல், லேசா, ரொம்ப, கொஞ்சூண்டு, பச்சத்தண்ணி, தமாத்தூண்டு, காபந்து, மல்லாந்துகினு, வூட்டாண்ட, கவுத்துட்டான், மெதப்பு, மப்பு, பினாத்தல், சுதார்ச்சிகின, எகிறிப்புடும், காத்தால, தித்திப்பு, முட்டாய், கைக்குட்ட, நிக்கர், நெஜார், நிஜார், கில்லிதாண்டு, கிண்ணம், டவரா, லோட்டா, குண்டான், அண்டான், தவலை, போண்ச்சட்டி, டம்ளரு, ஸ்பூனு, யேனம், கரண்டி, நொண்டி, சாக்கு, ஜாட்டி, லாந்தர், ஜட்டி, நிஜம், கானா, பேஜார், டொப்பி, தொப்பி, ரவிக்க, வெசாய கெய்ம, வங்காயம், கரீப்பல, பாஞ்சு, ரொட்டி, வூடு, கொட்டாய், உசிரு, மசுரு, கஞ்ஜி, சளி, ஜொரம், ஜுரம், டுபுக்கு, டுபாக்கூர், பளார், டமால், புட்டி, பீட, டப்பா, டின்னு, பத்த, டோபி, டப்பி, கம்மி, ஜொள்ளு, பிகில், பளுவு, இஸ்துகினு, டக்கர், மாம்ஸ், கெலிச்சேன், கிராப்புத்தல, கேட்டுவாசல், இஸ்த்ரி, பாத்து, கோயி, டப்பாசு, பொத்தல், பெராக்கு, டவுறு, நோவு, எச்ச, வேர்வ, தண்ணி, போர்வ, ராத்திரி, கவுறு, டிமிக்கி, டமாசு, கொரட்டை, போங்கு, வாத்தியார், கசாப்புகட, ஜிம்பாத, சக்கர, பீ, மூஞ்சி, பத்தாது, குஜால், சால்ஜாப்பு, பங்க், உடான்சு, கவுந்துடுச்சி, ஏட்டா போட்டி, எடுபுடி, கொட்டாங்கச்சி, தொடப்பம், பிஞ்சுடும், பொம்மினாட்டி, பொம்பள, ஆம்படையான், ஆம்பள, தின்னு, கோந்து, ஒருவாட்டி, மைய, யம்,

கஞ்சன், ஜோல்னா, வஸ்த்ரம், பசங்க, ஜல்லி, தனியா, பிஸ்த்தா, லங்க்கோட்டா, ஜோட்டால அடி, பொம்மை, புளுகு, பையா, பிசினி, மைதா, விவஸ்த்த, அவஸ்த்த, சேதாரம், ஜக்கு, பீடா, பூந்தி, பாதாம், ஜோரா, சதுர்த்தி, சஞ்சலம், ஜலசஞ்சாரம், ஊஞ்சல், ஜன்மாஷ்டமி, குருஷேத்ரம், உஷ்ணம், குல்லா, திப்பு, கஞ்சா, குஞ்சலம், ஜம்பம், அலட்டல், மைதானம், விக்கல், நாக்கு, மூக்கு, மாமா, கரம், கரம் மசாலா, மசாலா, பினாமி, சுனாமி, சங்கிலி, மிட்டாய், ரசகுல்லா, ஜால்ரா, ஜாதகம், ஜல்தி, தபசு, இழுவ, பக்கா, தண்டால், பஜார், சூத்ரா, சாஸ்த்ரா, ஸ்த்ரி, ஸ்நானம், ஜனனம், ஜனம், ஜாஸ்த்தி, ஜாதி, உஷார், உபவாசம், ஸாது, விசில், தோச, பாராட்டா, பொரோட்டா, தோஷம், ஜலதோஷம், சூன்யம், பில்லிசூன்யம், கிஸ்த்தி, பிரஜை, பிரஜா, கெஞ்சி, லஞ்சம், பைசா, பிசாசு, சைத்தான், ஜிவ்வுன்னு, ஜவ்வு, ஜீரா, ப்ரேமம், பக்கிரி, பக்க, பக்கி, ஜடம், ஸ்த்தானம், ப்ரீத்தி, பிரவீன், பிரேமா, சங்கதி, துள்சி, கிராம்பு, சோம்பு, லேகியம், வெந்தியம், சக்கை, சீரகம், விசேஷம், விஷம், ஷேமம், தமாசு, தமாஷ், விஷமம், விஷயம், கஷாயம், ஜோடி, கைலி, பூஜா, பூஜை, நமஸ்த்தே, நமஸ்காரம், தர்பார், இஷ்டம், கஷ்டம், நஷ்ட்டம், தாலி, மங்கள் சூத்ரா, கிண்டல்,

வாபஸ், கேஸ், மொசேக்கு, லவ்ஸ், ஆட்டோ, லாரி, பஸ்சு, சைகிள், பைக், ரோடு, போலீசு, தொரை, பார்ட்டி, பாரா, தார், டபுள்ஸ், பஞ்சர், சைபர், நகர், தெரு, காலனி, ரோந்து, பேட்டை, டவுன் பஸ்ஸு, பிரேஸ்லெட், ஹெல்மெட், சோப்பு, சென்ட்டு, காலி, காலிப்பய, ஜாகெட், பாடி, ப்ரா, சாக்ஸ், மப்ளர், சொட்டர், பிளாட்டு, ப்ளேடு, பல்பு, டென்டு, சூப், கலர், கரன்ட், லாக், பிளைட்டு, செயினு, டிரங்கு, நெக்லேசு, டாலர், டிப்சு, பீடி, சிகரெட்டு, கேரம், டவுட்டு, பங்களா, காமெடி, ஜோக்கு, கலாட்டா, ரம்மி, மம்மி, ஜிம்மி, லூசு, ஜேப்படி, ஜோபி, ஆஸ்பத்திரி, நர்சம்மா, டாக்டரம்மா, ஆயாம்மா, டிப்பன், டவல், காலரா, காலிப்ளவர், ஸ்டூல், ஸ்டூல்சைடு, ரயிலுவண்டி, கூலி, போர்டர், டிப்பன் பாக்ஸ், காப்பி, ஜூட், லக், கஞ்சுக்கே லாட்டரி, லத்தி சார்ஜ், ஜெயிலு, முட்ட கோஸு, பிராடு, ஸ்லிப்பர், சப்பல், பர்சு, பாக்கெட், பனியன், ரவுடி, ஜாலி, பில்டர் காபி, சாத்தான், ஆப்பிள், ஆரஞ்சு, ரிக்க்ஷா

சாம்பார், பூஷணி, தர்பீஸ், சர்பத், சாத்துக்குடி, திராட்ச்சி, கிஸ்மிஸ், ஜானவாசம், குஷி, பிசினாரி, ஜடை, ஜாடை, சக்கரை, பிருந்தா, ஜில்லுன்னு, ஜாலம், ஜலம், மேஜை, பூஜ்யம், சங்கீதம், ஆலாப், ப்ரியா, ஸ்ருதி, லையா, வேஷ்டி, பரீட்சை, குஸ்த்தி, கஜானா, சந்தோஷம், வாத்தி, பேதி, ஜந்து, ஜன்னல், ஜகா, சந்து, செருப்பு, கம்மல், ஜிம்மிக்கி, லோலாக்கு, டோலாக்கு, வங்கி, தோடு, சீப்பு, குல்குந்து, சல்வார், சூடி, சூடிதார், துப்பட்டா, சாப், கசாப்பு, சாயபு, ஷால், ஜப்தி, கொரடா, கோரம், அகோரம், தவ்வா, கடாய், ஜல்லிக்கரண்டி, தண்டோரா, தண்டம், காத்தாடி, கெழடு, ஒசத்தி, ஜகா, எரா, துட்டு, கடிகாரம், சாயா, மணி, பைத்தியம், நகை நட்டு, ஜெயிச்சேன், கடுதாசி, தோத்துட்டேன், வெவரம், வாண்டு, சதுரவட்ட, ஜீரணம், பிக்கல், புடுங்கல், பாயா, பாயாசம், ஜம்முன்னு, கேவலம், மாப்பு, பாஷை, கத்து, சாப்பாடு, பேத்தல், பஜனை, கோஷ்டி, லட்சம், அதிஷ்டம், லக்க்ஷணம், ஷணம், பொக்கிஷம், ஜமா, வேசி, தாசி, லோலன், புருஷன், ஜிகினா, சவால், அபிலாஷ், பாபு, சொர்ணம், சோனா, பௌர்ணமி, கல்யாண், மந்த்ரா, ஸ்டூ, குருமா, ஹேமா, ஹோமம், ஜாடி, பந்த், ஜல்லடை, ஜெய், விஜயம், சபா, சங்கம், ஜமக்காளம்,

மொகரகட்ட, செரங்கு, சல்லி, பூரா, மருத, குருத, இங்கிட்டு, அங்கிட்டு, எங்கிட்டு, ராவடி, வர்க்கி, ராட்டி, செராய், ஆச்சி, ஆத்தா, மைனி, ரவைல, வெஞ்சனம், வெள்ளென, அவுக, அவிங்க, இவிங்க, குசும்பு, ரவுசு, சாமான், ஜாமான், சேட்டை, அந்தால, பொண்டாட்டி, கிட்ட, கிட்டக்க, தூரக்க, கொட்டாவி, கண்ணாலம், ரூவா நோட்டு, அம்புட்டு, இம்புட்டு, பொறவு, இத்துனூண்டு, இத்தாம்பெரிசு, காலம்பர, எந்திரி, மிஞ்சி, மெட்டி, கொலுசு, பூட்டு, சாவி, கொக்கி, ரிப்பன், பின்னு, பவுடரு, பட்டன், ஊக்கு, நாதியத்த,

இன்னும் ஏராளமான வார்த்தைகள் தமிழா அல்லது வேற்று மொழியா என்று பிரித்து அறியா வண்ணம் புழக்கத்தில் கலந்து விட்டது. தமிழ் வார்த்தைகள் உருக்குலைந்து அந்நிய மொழி போன்ற உச்சரிப்பை பெற்று உபயோகிக்கப்படுவதே 'சென்னை தமிழ்'.

**********************

9/26/2011

சொல்வதெல்லாம் உண்மை

குறையாத வெப்பம் வெயலின் சூடு தணியாத வானிலை, குளிர்சாதன பெட்டியினால் உண்டாகும் குளிர்ந்த அறையினுள் முடங்கி கொண்ட போதும் மனதினுள் நினைவலைகள் ஏற்படுத்திய வெப்ப காற்று உடலை மீண்டும் வியர்க்கச் செய்தது..............

அந்தச் சிறுவனுக்கு வயது பத்து, பசிக்கு உணவும் உறங்குவதற்கு வீடும் இல்லாத சிறுவன், அவனுக்குத் தெரிந்தது பசி எடுத்தால் காண்போரிடம் கை நீட்டுவது கிடைக்கும் காசில் ஏதேனும் வாங்கி தின்பது. உறக்கம் வந்தால் எங்கேயாவது படுத்துறங்குவது. அன்றைக்கு அவனது பசிக்கு தீனி ஏதும் கிடைக்கவில்லை. தான் எப்போதும் வாங்கும் கடைக்குச் சென்று தின்பதற்கு ஏதேனும் கொடு காசு கிடைத்தவுடன் கொடுத்துவிடுவேன் என்ற பாவனையில் தேநீர் ஆற்றிக்கொண்டிருந்த கடை முதலாளியை பார்த்தபடி நின்றிருந்தான். தேநீர் கடைக்காரன் 'போடா பிச்சை எடுத்து காசு கொண்டா, இப்போ இங்கிருந்து போடா' என்று கோபத்துடன் சிறுவனை திட்டினான், சிறுவனுக்கு வயிற்றுப் பசியில் கடைக்காரனது கோபக் குரல் கேட்கவில்லை, தேநீர் கடைக்காரன் தான் ஆற்றிக்கொண்டிருந்த சூடான தேநீரை அந்த சிறுவனின் முகத்தில் வீசினான், வாய்விட்டு கத்துவதற்க்குக் கூட உடலில் தெம்பில்லாமல் அந்த சிறுவன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.

பெருத்த ஒலியுடன் தேநீர் கடையில் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த சிறுவன் கண்ட காட்சி தேநீர் கடை முழுவதும் தீ, தேநீர் கடைக்காரனின் உடல் முழுவதும் தீ.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒருவழியாக படிப்பை முடித்து ஏழ்மைக்கு முற்றுபுள்ளி வைக்கும் நேரம் வந்தாகி விட்டது என்ற மன நிம்மதி, அன்றைய தபாலில் வந்திருந்த நேர்முக தேர்விற்கான கடிதங்களை படித்துவிட்டு மனதில் ஓடிய எண்ணச் சுமைகளை ஒருகணம் மறந்து, வயிற்றில் குடல்கள் உணவிற்காக கத்தும் சத்தம் காதை அடைக்க, குடத்திலிருந்த குடிநீரை பருகுவதற்கு குடத்தை திறந்த போது வண்டல் நீர் இருந்தது, அவளது தாய் வீட்டு வேலை செய்துவிட்டு வந்தால்தான் குடிநீர் முகர்ந்து வரவேண்டும். பாவம் தன் தாய், தனது பசியை பொறுத்துக் கொண்டு வேலை பார்க்கும் வீடுகளில் கிடைக்கும் உணவை தன் மகளுக்கு சேமித்து வைத்து எடுத்துவருவதற்குள் மணி மதியம் இரண்டை தாண்டிவிடும். குடத்தை எடுத்துக் கொண்டு குடிசையின் அருகிலிருந்த கிணற்றில் குடிநீர் எடுத்துவர சென்ற போது அந்த கிணற்றின் சொந்தக்கார அம்மாவின் வீட்டை கடந்து செல்ல, வீட்டினுள்ளிருந்த கிணற்றின் சொந்தக்கார அம்மாவிற்கு என்ன தோன்றியதோ வேகமாக வீட்டிலிருந்து வெளியே வந்து குடத்துடன் நீர் எடுக்க வந்த அந்த பெண்ணின் எதிரிலேயே வேகமாக கிணற்றில் போடபட்டிருந்த கயிற்றையும் வாளியையும் எடுத்துச்சென்று தனது வீட்டினுள் வைத்து விட்டாள்.

குடிநீர் எடுக்கச் சென்ற இளம் பெண்ணிற்கு அதற்கான காரணம் விளங்கவில்லை. காலி குடத்துடன் தன் குடிசைக்குத் திரும்பியவள் தன் தாய் களைப்புடன் வீட்டினுள் இருப்பதை கண்டு ஒன்றும் பேசாமல் காலி குடத்தை வாசலிலேயே வைத்துவிட்டு குடிசையினுள் சென்று அன்றைய தபாலில் தனக்கு வந்திருந்த நேர்முகத் தேர்வுகளுக்கான கடிதங்களைப்பற்றி தனது தாயிடம் கூறி தங்களது வறுமை ஒழியப்போகின்ற குதுகலத்தை பகிர்ந்து கொண்டாள், குடிநீர் எடுத்து வராததன் காரணத்தையும் தன் தாயிடம் சொல்கிறாள். அந்த ஏழைத் தாய் குடிநீர் எடுத்து வருவதற்காக அதே கிணற்றை நோக்கி செல்கிறாள், தங்களது தேவைக்கான நீரை கிணற்றிலிருந்து எடுத்துக்கொள்வதற்க்கு கைமாற்றாக அந்த ஏழை தாய் அவர்கள் வீட்டு வேலைகள் பலவற்றை இலவசமாக செய்வதுண்டு. அந்த ஏழைத் தாய் செய்த இலவச உதவிகளைப் போல அவளது மகள் இலவச உதவிகளை தங்களுக்கு செய்து தருவதில்லை என்பதே அந்த 'கிணற்று'அம்மாளின் கோபம்.

சம்பவம் நடந்த அடுத்தநாள் இரண்டு ரவுடிகளும் அவர்களது குழுக்களும் அங்கு எதிர்பாராமல் திடீரென்று மோதிக் கொண்டது, அவ்வாறு மோதிக்கொண்ட போது ஒருவரையொருவர் கூறிய ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதை அறியாமல் வேடிக்கை பார்க்க வீட்டை விட்டு வெளியே வந்த அந்த 'கிணற்று'அம்மாவின் கைகளில் யாரோ ஒருவன் எறிந்த ஆயுதம் வேகமாக விழுந்ததில் வலதுகை பழுதடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அந்த 'கிணற்று'அம்மாவுக்கு பின்னர் பாதி கையை முற்றிலுமாக அகற்றும் நிலை ஏற்பட்டது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அந்த பையனுக்கு சுமார் பதினெட்டு வயதிருக்கும் அந்த பெண்ணிற்கு இருபது வயதிருக்கும், இருவரும் அடுத்த வீட்டில் வசிப்பவர்கள், இருவரும் வெவ்வேறு பள்ளியில் படித்து வந்தனர். பையனின் வீட்டில் பணவசதி அதிகம் இருந்ததால் அதிகம் பணம் கட்டி ஆங்கிலப்பளியில் படிக்க வைத்தனர். பையனுக்கு படிப்பைத் தவிர மற்ற எல்லாம் எளிதில் கைவந்த கலையாக இருந்தது, ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு முறை படித்து வந்ததினால் பதினெட்டு வயது முடியும் வரை பள்ளியிறுதி வகுப்பை அடைய இயலவில்லை. இரவில் படிக்கிறேன் என்று கூறிவிட்டு அடுத்த வீடுகளின் தென்னை மரங்களில் காய்த்திருக்கும் தேங்காய், இளநீர் போன்றவற்றை வெட்டி எடுத்து வந்து வெட்டித் தின்பது வழக்கம். தெருவில் குலைக்கும் நாய்களை அடித்துக் கொன்று பாழடைந்த கிணறுகளிலும் வாய்க்கால்களில் எறிவது போன்ற பல அக்கிரம செயல்களுக்கு சொந்தக்காரன்.

அடுத்த வீட்டு இருபது வயது பெண்ணை நோட்டமிடுவது தனது தாயின் தங்கை மகளை, தங்கையுடன் உடலுறவுகொள்வது போன்ற அகிரமங்கள் செய்வதில் வல்லவன், அதைவிட கொடுமை அவன் வீட்டில் இருந்த கன்று குட்டிகளுடன் உடலுறவு கொள்வது. இவனது இந்த வீர தீர சாகசங்கள் அந்த பகுதியில் பிரசித்தம். அடுத்த வீட்டு பெண்ணோ இவனை பார்ப்பது கூட கிடையாது, அந்த பெண் தன்னை கவனிப்பதே கிடையாது என்ற கோபம் அவனது நெஞ்சில் அதிக நாட்களாய் உறுத்தி வந்தது, ஏனெனில் ஏனைய பெண்கள் அவன் அணிந்து வரும் உடைகளையும் ஆடம்பரத்தையும் கவனிக்காமல் இருப்பதில்லை, சில பெண்கள் அவனிடம் இருக்கும் பண புழக்கத்திற்காக போலியான நட்ப்பும் வைத்திருந்தனர். அவனது கோபத்தின் உச்சமாக அடுத்த வீட்டு பெண்ணின் வெள்ளைச் சுவற்றின் மீது அப்பகுதியில் வசித்த வேறு ஒரு பையனுடன் கள்ள தொடர்பு உள்ளது என்று இல்லாதவற்றை எழுதி அசிங்கப்படுத்தினான். தன்னுடன் பிறந்த தம்பிகளைக் கூட விட்டு வைக்கவில்லை அவர்களை எழுத்தில் அடங்காத விதங்களில் கொடுமைபடுத்துவது போன்ற பல அரி காரியங்களை நடப்பித்து வந்தான், அந்த பையனின் அத்து மீறல்களையெல்லாம் அந்த பையனின் தாயார் கண்டுகொள்வதில்லை மாறாக தாயாரிடம் பையனைப் பற்றி குற்றம் சாட்டுபவரை 'உண்டு இல்லை' என்று வசைபாடுவாள். பையனின் தகப்பனாரிடம் யாரேனும் அவனைப்பற்றி புகார் செய்தால் தகப்பனார் தனது மகனை கண்டிப்பதற்கு விட்டுகொடுக்கமாட்டாள். மாறாக மகன் செய்த தவறுகளை கண்டிக்கும்போது தகப்பனிடம் சண்டையிடுவாள். இவ்வாறாக அந்த பையனின் அட்டுழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருந்தது. அந்தப்பையன் புதிய இரண்டு சக்கரவாகனம் ஒன்று வாங்கினான்.

முழு வேகத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணிப்பது அவனுக்கு அலாதி சுகம் ஆனால் இரண்டு சக்கர வாகனத்தை வாங்கிய அடுத்தநாள் பெருத்த விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கபட்டான். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபோது அவனது வலதுகை உபயோகிக்கும் நிலையை இழந்திருந்தது.

.............................................................................

9/12/2011

பாசபறவைகள்

உடன் படித்த அல்லது பணி செய்கின்ற பெண்ணையோ ஆணையோ காதலித்து திருமணம் செய்துகொள்வது என்பது மிகவும் சாதாரணமாகிப் போனாலும் இன்னும் பல குடும்பங்களில் காதலுக்கு எதிர்ப்பு இல்லை என்றாலும் மதம் ஜாதி மற்றும் அந்தஸ்த்து போன்றவற்றை கருத்தில் கொண்டு அல்லது முக்கியத்துவமாக கருதி அப்படிப்பட்ட திருமணங்களுக்கு சம்மதம் தெரிவிப்பது இல்லை. சமுதாயத்தில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் அடிப்படையில் பல குடும்பச் சூழல் இன்னும் பழமையான கருத்துக்களை பாதுகாக்கின்ற சமுதாயமாகத்தான் உள்ளது. என்னதான் காதல் வலிமை படைத்தது என்றாலும், காதலுக்காக பெற்றவர்கள் உறவுகள் எல்லாவற்றையும் எடுத்தெறிந்துவிட்டு தாங்கள் விரும்பியப்படியே திருமணம் செய்பவர்களும் சமூகத்தில் காணப்படுவதும் புதிதல்ல.

அவ்வாறு பெற்றோர் மற்றும் உறவினர்களின் பாசத்தை எல்லாம் மறக்கச் செய்து காதலை மட்டுமே கருத்தில் கொண்டு திருமணம் செய்து கொண்டாலும் சில காலம் சென்ற பின்னர் தங்களது உறவினர்களையும் பெற்றோரையும் காண வேண்டும் என்கின்ற தூண்டுதலை ஏற்ப்படுத்துவது தான் பாசம். எல்லாவித பாசங்களிலும் தாய்க்கும் மகளுக்குமான பாசம் என்பது மிகவும் விசாலமும் ஆழமுமானது. இதை ஒவ்வொரு பெண்ணும் தான் தாய்மை அடைகின்ற காலத்தில் உணருகிறாள். அதே போன்று ஒவ்வொரு ஆணும் ஒரு குழந்தைக்கு தகப்பனாகின்ற போது தனது பெற்றோரின் பாசத்தை முழுவதுமாய் விளங்கிக் கொள்ள முடிகிறது.

என்னதான் காதல் கண்ணை மறைத்தாலும் பெற்றோர் உறவினர்களின் பாசத்தை உதாசீனப்படுத்திவிட்டு காதலனுடனோ காதலியுடனோ முழு மன நிறைவோடு வாழ முடியுமா என்றால் நிச்சயம் முடியாது, 'ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் ' என்று சும்மாவா சொன்னார்கள். எனக்குத் தெரிந்த பெண் சுமார் இருபத்து ஐந்து வயதிருக்கும், அவளது தகப்பனார் அவள் சிறுமியாக இருந்த போது இறந்து விட்டார், அவளது தாய் அவளை வளர்த்து படிக்க வைத்தார், நன்றாக படித்து முடித்து வேலை வாய்ப்பும் கிடைத்தது, மூன்று அல்லது நான்கு வருடம் வேலை செய்தாள், அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார் அவளது தாயார். அவளுடன் கல்லூரியில் படித்து வந்த ஒரு ஆணுடன் அவள் அடிக்கடி கைபேசியில் பேசுவதுண்டு, அவனை தனது கல்லூரி நண்பர்களில் ஒருவன் என்று தனது தாய்க்கு ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தாள்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் துவங்கவிருந்த சமயத்தில் குறிப்பிட்ட பையனை திருமணம் செய்து கொள்ள தான் விரும்புவதாக தன் தாயிடம் தெரிவிக்க, அதை முழு மனதுடன் தன் தாய் ஏற்றுக்கொள்ளாதிருந்ததை மகள் அறிந்தும் தனது திருமண ஏற்பாடுகளை தானே செய்வதற்கு ஆரம்பித்துவிட்டாள். திருமணத்திற்கு ஒருவாரம் இருந்த சமயம் மாப்பிள்ளை வீட்டார் வட மாநிலத்திலிருந்து சென்னை வந்து வேறு இடத்தில் தங்கியிருந்தனர். திருமணத்திற்கு முந்தின இரவு சாப்பாடு சாப்பிடுவதற்காக மாடியிலிருந்த தங்களது அறையிலிருந்து வீட்டின் கீழே இருக்கும் சமயலறையிலிருந்த உணவை எடுத்து உண்பதற்காக மாடிப்படிகளில் இறங்கிக்கொண்டிருந்த மணமகளின் தாயார் கால் தவறி மாடிப்படிகளில் விழ அவரது மண்டையின் உள்ளே படுகாயம் ஏற்ப்பட்டு காதுகளின் வழியே ரத்த வெள்ளத்தில் அங்கேயே பிணமானார்.

அவர்
மாடி படியில் விழுந்து கிடந்த
தை அங்கிருந்த ஒருவரும் கவனிக்கவில்லை, சிறிது நேரம் சென்ற பின்னர் அதே மாடிப்படிகளில் இரவு உணவை உண்பதற்காக இறங்கி வந்த மணமகள் தன் அம்மா கீழே விழுந்து கிடப்பதை பார்த்தபோது அவர் கண்கள் மூடி கிடக்க காதுகளிலிருந்து வழிகின்ற ரத்தம் மட்டும் நிற்கவே இல்லை என்பதை அறிந்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது அவர் இறந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டிருந்த தகவல் சொல்லப்பட்டது. காதுகளிலிருந்து வழிந்த இரத்தத்தை நிறுத்த மருத்துவர்கள் மருத்துவம் செய்து உடல் அன்றிரவே அடக்கம் செய்யப்பட்டது.

ஏற்பாடுகள் செய்தபடி
அடுத்த நாள் திருமணம் நடந்தது, மணமகளும் மணமகனும் எப்போதும் போல மிகவும் சந்தோஷத்துடன் மேடையில் வந்த விருந்தினர்களிடம் பேசிக்கொண்டிருந்தனர். இந்த சம்பவத்தை பார்த்த என்னால் இன்றுவரையில் மறக்க இயலவில்லை. இத்தனை பெரிய அதிர்ச்சியை மறந்து இயல்பான சந்தோஷத்துடன் இந்த பெண்ணால் எப்படி அடுத்தநாள் மணவறையில் இருக்க முடிந்தது என்பதும் நான் கண்டது எல்லாம் நாடகமா அல்லது ஏதோ சினிமாவிற்காக பதிவு செய்யப்படும் காட்ச்சிகளா என்று சந்தேகமாக இருந்தது. நடந்த சம்பவத்திற்காக அழுது கொண்டே இருக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் சொல்லேன். ஏற்கனவே செய்திருந்த திருமண ஏற்பாடுகளை நிறுத்துவதால் ஏகப்பட்ட பணம் வீணாகும் என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் இயற்கையான வருத்தம் என்பதை, தன்னை வளர்த்து ஆளாக்கி (தனது தகப்பனில்லாமலேயே) தனது திருமணத்தை காண இயலாமல் திடீரென்று இறந்து போன தனது தாயின் நினைவு இல்லாமல் ஒரு பெண்ணால் இருக்க இயலுமா என்பதை என்னால் இன்றுவரையில் நினைத்து பார்க்க இயலவில்லை.

இன்றைய சமுதாயம் பாசம் அன்பு உறவு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காத சூழ்நிலை பெருகிவருகிறது. என்னதான் தனது திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத தாயாக இருப்பினும் திடீர் மரணம் என்பது மனதை வருந்த வைக்காதா என்ற கேள்வி என்னை துளைத்தெடுத்தது. என்னை மட்டுமல்ல அந்த பெண்ணின் ஏனைய உறவினர்களையும் நண்பர்களையும் கூடத்தான் ஆச்சரியப்பட வைத்தது.


^^^^^^

9/07/2011

மாற்றி யோசி

'அந்த ஏழு நாட்கள்' கே. பாக்கியராஜின் இயக்கத்தில் வெளியான வெற்றிதிரைப்படம், இந்த திரைப்படம் முழுவதுமே ஒவ்வொரு காட்சியும் மிக முக்கியம், இடையிலே வருகின்ற பாடலில் கூட கதையம்சத்தின் தொடர்ச்சி இடைவெளி கொடுக்காமல் காண்போரை இருக்கையிலேயே உட்காரச்செய்த திரைக்கதை. இவரது திரைப்படங்கள் எல்லாமே இதே வகையை சேர்ந்தவைதான். இயக்குநர் தான் இயக்கும் திரைப்படத்தில் ஒரு சிறப்பான கதாபாத்திரமேற்று நடித்து முத்திரை பதிப்பது என்பது இவரது தனி சிறப்பு.

மலயாளீயாக இவர் நடித்திருக்கும் கதாபாத்திரம், தான் காதலிக்கின்ற பெண்ணை வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுக்கவிருக்கின்ற செய்தி அறிந்த போது தன்னுடன் இருக்கின்ற சிறுவன் கேட்பது போன்ற வசனமொன்று அந்த பெண்ணை அவரது வீட்டிற்க்கு தெரியாமல் அழைத்துச் சென்று திருமணம் செய்துகொள்ளச் சொல்லி யோசனை கூறுவது போலவும் அதற்க்கு பாக்கியராஜ் அவ்வாறு அப்பெண்ணை கூட்டிச்சென்று திருமணம் செய்துகொள்வது தவறு என்று கூறிவிட்டு, ஒரு மலையாளி செய்கின்ற தவறால் எல்லா மலையாளிகளுக்கும் அவப்பெயர் ஏற்ப்படும் அதனால் அவ்வாறு செய்வதற்கு தனக்கு விருப்பமில்லை என்று விளக்குகின்ற காட்சி மிகவும் யதார்த்தமாகவும், நினைவில் நீங்கா இடம் பிடிக்கவும் செய்தது.

இந்த கருத்து மிகவும் யதார்த்தமான கருத்து என்றாலும் அவ்வாறு யாரோ ஒருவர் செய்கின்ற தவறு குறிப்பிட்ட சமுதாயத்தை குற்றப்படுத்தும் என்கின்ற உணர்வை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் பல பிரச்சினைகள் காணாமல் போய்விடும், டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பைப்பற்றிய தகவல்கள் செய்திகளில் வந்தவண்ணம் உள்ளது, குறிப்பிட்ட தீவிரவாத கும்பல் செய்திருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்காவிலும் மும்பையிலும் நடத்தப்பட்ட தீவிரவாத கொடூரங்களையும் டெல்லி உயர்நீதிமன்ற நுழைவு வாயிலில் நடந்த குண்டு வெடிப்புவரை செய்திகளில் இவற்றை காணுகின்ற உலக மக்கள் குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது கோபமும் வெறுப்பும் ஏற்ப்படுத்துவதாக உள்ளது, ஒரு மனிதனை (குற்றவாளியை) மீட்பதற்கு ஏறக்குறைய 11 அப்பாவிகள் பலியாவதும் எண்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் வேதனைக்குள்ளாக்குவதும் விவேகமற்ற செயல்.

ஆடு மாடு ஒட்டகங்களை உண்பதற்காக கொல்வது பழகிப்போனதாகவும் பாவமற்ற செயலாகவும் இருக்கலாம். ஆனால் மனித உயிர்களை எடுப்பது அதிலும் அப்பாவிகளின் உயிரை கொல்வது என்பது தீரா பாவம். கோரிக்கைகளை முன் வைப்பதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்க குண்டு வைத்து அப்பாவிகளை கொன்று தான் தங்களது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்பதை யாரும் ஏற்க்க மாட்டார்கள். இறந்தவர்களின் உறவினர்களுக்கு எத்தனை பணம் கொடுத்தாலும் இறந்து போன நபரின் இடத்தை ஈடு செய்ய இயலுமா. தீவிரவாதம் என்பது அப்பாவிகளின் உயிர்களை பலி வாங்குவது என்றால் அதற்க்கு முடிவே இராமல் போகும். அப்பாவிகளின் உயிரை பறிப்பதை கைவிட்டு வேறு நல்ல வழிமுறைகளை கையாள தீவிரவாதிகள் மாற்றி யோசிக்க வேண்டும்.

9/05/2011

மறக்க முடியுமா

மனித மூளைக்கு நல்லது கெட்டது என்பதை பிரித்து அறியும் சக்தி இருந்தாலும் தனது நினைவில் பதித்துக்கொள்வதற்க்கு அவற்றில் எதையும் பாரபட்சம் காட்டுவதே கிடையாது, 'மனமே நல்லவைகளையும் மகிழ்ச்சி தரும் நினைவுகளை மட்டுமே வைத்துக் கொள்' என்று அறிவு சொல்லிக்கொண்டே இருந்தாலும் அவற்றை மனம் கேட்பதே கிடையாது. இதனால் பலராலும் மன்னிப்பு என்பதை மனதிலிருந்து கூற இயலாத நிலை ஏற்படுகின்றது. மறந்தால் தானே மன்னித்ததாக அர்த்தம். வாய் ஒன்றை கூற மனம் வேறு ஒன்று கூறும் நிலையால் மனிதன் படுகின்ற வேதனைகளுக்கு அளவே கிடையாது. மனமும் அறிவும் ஒன்று சேருகின்ற பல நிகழ்வுகளும் உண்டு. அவை எல்லாமே மனிதர்களின் வாழ்க்கையில் அன்றாடம் நடக்க இயலாத சில சம்பவங்களாகி நினைவுகளை சுமந்து காலம் காலமாக இன்பம் துன்பம் இரண்டையும் மாறி மாறி நினைவுபடுத்துவதாக அமைந்து விடுகின்ற.

ஆசிரியர் தினம் என்பது மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் என்பது யாவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சந்தித்த ஆசிரியர்களின் நினைவுகளை பற்றிய மறக்க இயலாத அனுபவங்களை சிந்திக்க வைப்பதாக உள்ளது. ஒவ்வொருவரும் தங்களது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றபோது 'தன்னை பெற்றெடுக்க தன் தாய் அந்த சமயத்தில் எத்தனை துன்பங்களை அனுபவித்திருக்க கூடும்' என்று சிந்திப்பதில்லை என்றாலும் கடுமையான துன்பத்திற்கு பிறகு தான் பெற்ற குழந்தையை காணுகின்றபோது தான் பட்ட துன்பங்கள் அத்தனையையும் மறந்து ஏற்படுகின்ற இன்பமே அவளுக்கு போதுமானதாக இருப்பது போல நம்மை துன்புருத்திய ஆசிரியர்களைப் பற்றிய நினைவுகள் மிகவும் கொடூரமானதாக இருந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து வந்து தன்னை பற்றிய கவுகளை சுமந்து கொண்டிருக்கும் தனது பெற்றோருக்கும் தனது லட்சிய பாதைக்கும் தொய்வு வராமல் மனம் தளராமல் இலக்கை நோக்கி பயணித்த அனுபவங்கள் என்றும் மறக்க இயலாத அனுபவங்களாகி மனதை விட்டு மறையாமல் இருக்கும்.

அவ்வை கூறியது போன்று 'இளமையில் வறுமை கொடியது', கொடிய வறுமை ஒருபுறம் மறுபுறம் வறுமையை விட கொடுமையான உறவினர்களின் சதித்திட்டங்களும் அவற்றை அவர்கள் செயல்படுத்துகின்ற விதமும், இவற்றையெல்லாம் வென்றுவிடுவதற்க்கு 'பிச்சை புகினும் கற்கை' என்று அரசாங்க பள்ளியாக இருந்தால் என்ன, எங்கிருந்து படித்தாலும் 'எமது லட்ச்சியம் வறுமையை வெல்வது' என்கின்ற நோக்கில் 'பட்டினி கிடந்தாலும் படிப்பது ஒன்றே' என்று படித்துக் கொண்டிருந்த போது, அப்போதெல்லாம் எஸ் எஸ் எல் சி தான் பள்ளி கல்விக்கு இறுதி, பதினோராம் வகுப்பு. எனது விருப்ப பாடமான உயிரியல் வகுப்பாசிரியர் பெயர் சாந்தி சாந்தினி, திருமணமாகாத கிறிஸ்துவ ஆசிரியர். ரெகார்ட் நோட் ஒன்றை வாங்கி அதில் படங்களும் அதனைப்பற்றிய விரிவுரைகளையும் எழுதி வரச் சொன்னார், வகுப்புகள் துவங்கிய ஒரு மாதத்திற்குள் என்பதால் அதிக விலை கொடுத்து அந்த நோட்டு புத்தகத்தை வாங்கிவருகின்ற அளவிற்கு எங்கள் வீட்டில் பொருளாதாரம் இல்லை.

இரண்டாவது மாதம் எப்படியோ அந்த நோட்டு புத்தகத்தை வாங்கி கொடுத்தார் என் தந்தை, அந்த நோட்டு புத்தகம் வாங்குவதற்கு எந்த விதமான சிரமம் இருந்தது என்பதை விவரிக்க இயலாது, அத்தனை கொடுமையான நிலைமை. வாங்கியவுடன் இரண்டு மாதங்களாக விடுபட்டு போனவற்றைஎல்லாம் வரைந்து விரிவுரைகளை எழுதி (பள்ளியிலேயே வரைவதில் முதலிடம் எனக்கு) அடுத்தநாள் நோட்டு புத்தகத்தை அந்த ஆசிரியர் வருவதற்கு முன்பு மேசையில் வைத்துவிட்டேன், ஏற்கனவே மேசையின் மீது இரண்டு நோட்டு புத்தகங்கள் இருந்தன அவற்றின் மீது என்னுடைய நோட்டு புத்தகம் வைக்கபட்டிருந்தது, ஆசிரியர் வழக்கம் போல வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் பாடம் நடத்தி முடித்து பின்னர் மேசையின் மீது வைக்கப்படிருந்த நோட்டு புத்தகங்களை பார்வையிட்டார், மற்ற இரண்டு நோட்டு புத்தகங்களை அங்கேயே வைத்துவிட்டு என்னுடைய நோட்டு புத்தகத்தை கையில் எடுத்து கோபத்துடன் அதை அறைக்கு வெளியே வேகமாக வீசி எறிந்தார், அந்த புத்தகம் அங்கிருந்த சகதியில் விழுந்தது, என்னை எழுந்து அறைக்கு வெளியே நிற்கும்படி கூறினார், அன்றைக்கு மட்டுமல்ல அந்த ஆண்டு முடியும் வரையில், இன்றுவரையில் அந்த ஆசிரியரின் செய்கைக்கும் கோபத்திற்க்குமான காரணம் எனக்கு விளங்கவேயில்லை, ஏனென்றால் எனது வகுப்பில் பலர் நோட்டு புத்தகம் வாங்கியிருந்தும் அவர் கூறுவதற்கிணங்க வரைந்து விரிவுரை எழுதிக்கொண்டு வருவதே கிடையாது. ஆனால் சில வருடங்களுக்குப் பின்னர் எனது உறவினர் ஒருவர் என் குடும்பத்தை பழி வாங்குவதற்காக மற்றொரு ஆசிரியையின் உதவியுடன் அவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறப்பட்டது, எந்த அளவிற்கு இந்த யுகம் உண்மை என்பது எனக்கு தெரியாது. ஆனால் அந்த ஆசிரியை வகுப்பிலிருந்த 60 மாணவிகளின் எதிரில் என்னை அவமானப்படுத்தியதை இன்றுவரை மறக்க இயலாது.

எனது பள்ளியில் மொத்தம் 5000 மாணவ மாணவிகள் அப்போது படித்து வந்தனர் மாநிலத்திலேயே இரண்டாவது அதிக மாணவ மாணவிகளை கொண்ட அரசு பள்ளியாக எங்கள் பள்ளி அப்போது இருந்தது. சில வருடங்களுக்குப் பின்னர் சென்னையில் தனியார் நிறுவனமொன்றில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது தினமும் தொடர்வண்டியில் பயணம் செய்வது வழக்கம், அப்போது ஒருநாள் எங்கள் பள்ளியில் பணியாற்றி வந்த வேறு ஒரு ஆசிரியை சந்திக்க நேர்ந்தது, அவர் என்னிடம் பேசிக்கொண்டு வந்த போது எனது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதை அவரிடம் தெரிவித்தேன், எனது கைப்பையிலிருந்த எனது கணவரின் முழு புகைப்படத்தை அவரிடம் காண்பித்தேன், அப்போது அந்த ஆசிரியை என்னிடம் கூறிய வார்த்தைகளை இன்றும் என்னால் மறக்க இயலாது, 'நீ பட்ட கஷ்டத்திற்கு நிச்சயம் நீ நல்லா இருப்ப' என்றார்.

நாங்கள் பட்ட கஷ்டம் அந்த ஆசிரியைக்கு எப்படி தெரிந்தது என்பதற்கு வேறு சில சம்பவங்களும் உண்டு, ஆனாலும் அப்படியும் ஆசியர்களும் உண்டு. மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பதற்கு உரிமை உண்டு என்கின்ற காலமாக அக்காலம் இருந்தாலும் இளம் நெஞ்சில் மாறாத வடுக்களை உண்டாக்குகிறோம் என்கின்ற நினைப்பே இல்லாமல் செயல்படுகின்ற ஆசிரியர்களை நான் எப்போதுமே மன்னிக்கத்தயாராக இல்லை. நல்லாசிரியர் விருது வாங்குகின்ற அத்துணை ஆசிரியர்களும் அவர்களிடம் படித்த எல்லா மாணவ மாணவியருக்கும் முழு மனசாட்சியுடன் நேர்மையாக தங்கள் பணியை செய்திருப்பார்களா, மனித நேயம் என்பது காணக்கிடைக்காத அரும்பொருளாக மாறி வந்திருக்கும் இந்த காலகட்டத்தில் ஆசிரியர்தினம் கொண்டாடப்படுவது என்பது டாக்டர் ராதாகிருஷ்ணனை நினைவு கூறுவதாகவும் இல்லை நல்ல ஆசிரியர்களை உருவாக்குவதும் இல்லை. டாக்டர் ராதா கிருஷ்ணனையும் மறந்துவிட்டோம், மன சாட்சி, நேர்மை, நாணயம், மனிதநேயம் போன்றவற்றையும் மறந்துவிட்டோம், ஆனால் குழந்தைகள் தினம், ஆசிரியர்தினம் என்று தலைவர்களது பிறந்தநாளை மட்டும் 'பெயர்சூட்டி' சொல்லிக்கொள்கிறோம்.


9/03/2011

மொழி

இந்தியாவில் பேசப்படும் மொழிகளிலேயே ஹிந்தியும் தமிழும் சர்ச்சைகளுக்கு உட்பட்டது, வட மாநிலங்களில் ஒவ்வொரு மாநில மொழி வெவ்வேறாக இருப்பினும் ஹிந்தி இரண்டாவது மொழியாக பயிற்றுவிக்கப்படுவதால் பேசவும் எழுதவும் படிக்கவும் பலருக்கு சுலபமாக உள்ளது, பெரும்பாலான வட மாநில பள்ளிகளில் ஆங்கிலம் என்பது அரிச்சுவடி அளவில் கூட இல்லாமல் இருப்பது தமிழர்களை கிள்ளுவது போன்ற செய்தி. மாநில அளவில் கேரளா, ஆந்திரா கர்நாடகாவிலும் ஹிந்தி பலராலும் பேசப்படுகிறது, தமிழகத்திற்கும் ஹிந்தி மொழிக்கும் சம்பந்தமே இல்லை. ஹிந்தியை மொத்தமாக வேற்று மொழி போன்று மட்டுமே நம்மால் கவனிக்க முடிகிறது, இதற்க்கு காரணம் பள்ளிகளில் ஹிந்தி மொழி என்பது அறவே இல்லை, அதற்க்கு பதிலாக ஆங்கிலம் முழுவதுமாக உபயோகிக்கப்படுகிறது. வட மாநில மக்கள் தங்களது மாநிலத்து மொழி பேசுபவரை தரக்குறைவாக எண்ணுவதே கிடையாது. ஆனால் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தமிழ் பேசுகின்ற தமிழர்களை தரக்குறைவாக எண்ணுவது சாதரணமாகிப் போனது என்பதால் அரைகுறை ஆங்கிலத்திலாவது பேசுவதென்பது வழக்கமாகிவிட்டது,

இந்தியாவிலேயே ஆங்கிலத்தை தங்களது தாய் மொழிக்கு அடுத்ததாக அதிகமாக படிக்கின்ற பேசுகின்ற மாநிலம் தமிழகமாகத்தான் இருக்க முடியும். தற்காலத்தில் வெளிநாடுகளில் பணி செய்வதற்கும் பன்னாட்டு நிறுவனங்களில் பணி செய்வதற்கும் ஆங்கிலம் அத்தியாவசியம் என்கின்ற நிலை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பெற்றோர் தங்களது பிள்ளைகளை ஆங்கிலம் தரமாக பேச எழுத பயிற்றுவிக்கும் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தினாலும் பரவாயில்லை என்கின்ற எண்ணத்தில் சேர்த்து படிக்க வைக்கின்றனர். அவ்வாறு ஆங்கில மொழி பிரதானமான மொழியாக எண்ணப்படுவதால், பலரது வீடுகளில் தங்களது தாய் மொழியில் பேசுவதை அறவே விட்டுவிட்டு ஆங்கிலத்திலேயே முழுவதுமாக உரையாடுகின்றனர். ஆங்கில மொழி பேசுபவர்களெல்லாம் அதிகம் படித்தவர் அல்லது உயர்ந்தவர்கள் என்பது போன்றும் தமிழ் பேசுபவர்களெல்லாம் படிப்பறிவில்லாதவர்கள் அல்லது தாழ்ந்தவர்கள் என்பது போன்ற பாவனை நிலவி வருகிறது.

'நாங்கள் தமிழர்கள்', 'தமிழுக்கு முதன்மையான இடத்தை கொடுங்கள்' என்று யாராவது அழுத்தமான குரல் கொடுத்தால், ஆங்கிலமும் ஹிந்தியும் மட்டுமே தங்களது அந்தஸ்த்தை உயர்த்திய 'நன்றி கடன் பட்ட நெஞ்சங்கள்' எல்லாம் ஒன்று திரண்டு 'தமிழை மட்டுமே படித்து பேசிக்கொண்டு தமிழுக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் எங்களுக்கு என்ன கிடைத்துவிடப்போகிறது' என்று ஓவென்று ஓலமும் ஒப்பாரியும் வைக்கும் கூட்டம் ஒன்று உண்டு, 'என்னோட பையன் ஸ்டேட்ஸ்ல வேல பாக்கறான்', 'என்னோட அண்ணா மன்னி ஸ்டேட்ஸ்ல இருக்கா' என்று அலட்டிக்கொள்ளும் பேர்வழிகள் நிறைய பேர் தமிழகத்தில் உண்டு. கச்சேரி பண்ணாலும் ஸ்டேட்சுக்கு (USA) போய் பண்ணாத்தான் பெருமை, நடனம் பண்ணாலும் ஸ்டேட்சுக்கு(USA) போய் பண்ணிட்டு வந்தாதான் 'அவாளுக்கு' பெருமை. அப்படி ஒரு கும்பல் இந்த தமிழகத்தின் ஒட்டு மொத்த பெருமைக்கும் தங்களது ஜாதி மட்டுமே காரணம் என்று பெருமை பட்டுக்கொள்வதோடு நில்லாமல், ஆங்கிலேயனுக்கே ஆங்கிலம் கற்று கொடுக்கும் திறமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்கின்ற ஆணவமும் கொண்டவர்கள்.

தப்பி தவறி தமிழை பற்றி மட்டும் உயர்த்தி பேசிவிட அவர்கள் மனம் ஒரு போதும் இடம் கொடுக்காது ஆனால் தங்களை தமிழர்கள் என்று இடத்திற்கு ஏற்றார் போல காண்பித்துக்கொள்ளும் நடிப்பாற்றலுக்கும் பஞ்சமிருக்காது. இவர்கள் பேசும் தமிழுக்கென்றே ஒரு புதிய அகராதி தேவைப்படும். தமிழர்களே இப்படி என்றால், பகுதி ஆங்கிலேயனும் பகுதி இந்தியனுமாக இந்தியாவில் வாழுகின்ற ஒரு கூட்டமுண்டு. இவர்கள் பேசும் தமிழை புரிந்து கொள்ள தனி அறிவு தேவை, இவர்கள் மூதாதையார்கள் முதல் இன்றுவரையில் உள்ள அனைவருமே தமிழகத்திலும் இந்தியாவிலுள்ள மாநிலங்களில் பிறந்து வளர்ந்திருந்தாலும் இந்திய மாநில மொழிகளை இவர்கள் பேசுகின்ற விதமே அலாதி, இவர்களுக்கு இந்தியர்கள் என்றால் 'ஆப்பக்கடை', 'ஆயா' என்ற அந்தஸ்த்தை மட்டுமே கொடுக்க முடிந்த மனதுள்ளவர்கள். இந்தியாவினுள் பிறந்து வளரும் ஆங்கிலேயர்கள் என்கின்ற நினைப்பு இவர்களுக்கு.

இவர்களில் பலரும் ஆங்கிலேயர்களின் நாகரீகத்தை கடைபிடிக்கின்ற காரணத்தால் இந்தியாவை விட்டு ஆஸ்திரேலியா, ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்து விட வேண்டும் என்கின்ற ஒரே லட்சியமும் கனவையும் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக கொண்டுள்ளவர்கள், இவர்களுக்கு தமிழ் பேசுபவர்கள் 'அடிமைகள்' என்கின்ற நினைப்பு, ஆங்கிலம் படித்த தமிழர்களை மதிக்கின்றனரா என்றால் சமயத்திற்க்கேற்றார் போல, இவர்களுக்கு எந்த மாநில மொழியையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் கிடையாது, இதனால் இவர்கள் பேசுகின்ற மாநில மொழிகள் இவர்களது பற்களுக்கு இடையிலும் இவர்களது நாவிலும் மாட்டிக்கொண்டு வெளியேறுவதற்கு மிகவும் வருந்துவதை நம்மால் காணமுடியும். பல சமயங்களில் இவர்கள் தாங்கள் இந்தியாவில் உள்ள மாநிலத்தில் பிறந்து வாழ்கின்றோம் என்கின்ற நினைவு அற்றவர்களாய் மாநில மொழிகளையும் மாநிலத்தவர்களையும் கிண்டல் கேலி செய்வதை பார்க்கும் போது அங்கே தமிழுணர்வு நமது ரத்தத்தை சூடாக்காமல் இருப்பதில்லை.

'தமிழகத்திற்கு குடியேறி ஏறக்குறைய 45 ஆண்டுகள் கழிந்து விட்டது ஆனாலும் எனக்கு தமிழ் பேசவும் எழுதவும் படிக்கவும் தெரியாது' என்று கூறுகின்ற வேற்று மாநிலத்து மக்களை நான் சந்தித்ததுண்டு, அதிலும் தெனிந்திய மக்களை பெருமளவில் சந்தித்ததுண்டு, அவ்வாறு சாத்தியமே இல்லை என்ற போதும் தமிழகத்தின் அத்தனை நலன்களையும் அனுபவித்துக் கொண்டு தமிழ் மொழியை மட்டும் கற்றுக் கொள்வதற்கு விருப்பமின்றி பல ஆண்டுகளாக ஒரே மாநிலத்திலே வாழுகின்ற மனப்பான்மையை என்னவென்று சொல்வது, இவர்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரிகளா அல்லது 'நாங்கள் இந்திய பிரஜைகள் என்பதால் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் வாழுகின்ற தகுதி படைத்தவர்கள் அதனால் அம்மாநிலத்தின் மொழியை நாங்கள் கற்று கொண்டுதான் ஆக வேண்டுவதில்லை' என்று கூறுகின்ற உள்நாட்டு தீவிரவாதிகளா. இவ்வாறு ஒரு பெரிய கூட்டம் தமிழகத்தில் உண்டு.

தென் தமிழக மக்களில் பெரும்பாலோருக்கு சென்னை என்றால் சென்னையில் பேசப்படுகின்ற மொழிதான் முதலில் கேலி பொருளாகும், சென்னையில் பிறந்து சென்னைவாசிகளாக இருப்பவர்கள் என்றாலே தாழ்வான அபிப்பிராயம், ஆனால் பிழைப்பைத் தேடி வருகின்ற இடம் சென்னையும் அதனை சுற்றி உள்ள இடங்களும் தான். நாளுக்கு நாள் சென்னையில் பெருகி வருகின்ற கூட்டம் சென்னையின் வீடு நிலம் வாடகை என்று எல்லாவற்றையும் உயர்த்திக் கொண்டே செல்கிறது. நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் கூட்டம் வெளியே நடமாடுவதற்கு பெரும் சிரமத்தை, போக்குவரத்து நெரிசலை ஏற்ப்படுத்துவதால் சென்னை வீதிகளில் நடப்பதற்கு மன உளைச்சல் ஏற்ப்படுத்துகிறது. இதனால் சென்னையின் புறநகர்களில் வீடு மனைகள் பெருகி வந்தாலும் அதன் விலை விண்ணைத் தொடுகிறது.

[எப்படியோ ஒரு நிலத்தை வாங்கி வீடு கட்டி குடி புகுந்தால், கொலை கொள்ளை என்று தினம்தோறும் புற நகர்களில் பெருகிவருகின்ற சம்பவங்கள் நிலை குலையச் செய்கிறது, போக்குவரத்து வசதிகள், சாலை வசதிகள் ஏதும் இன்றி படுகின்ற கஷ்டங்கள் ஒருபுறம், மழை காலத்தில் படகு சவாரி செய்ய வைக்கும் வேதனைகள் இன்னொருபுறம் என சென்னை அதிக மக்களால் அவதியுறுகிறது].


8/30/2011

காலக் குதிரை


கடிகாரம் தனது வேலையை சீராகத்தான் செய்கிறது, இப்போதெல்லாம் கடிகாரத்தை பார்க்கும் போது மனதில் வெறுமை மிஞ்சுகிறது, 'நேரமாகிவிட்டது' என்று காலையில் அரக்க பறக்க எழுந்த காலங்களை நினைக்கும் போது 'அது ஒரு காலம்' என்று நம்மையும் அறியாமல் மனதை ஏக்கம் நிரப்புகிறது. 'அந்த ஒரு காலத்தில்' காலையில் வசரமாக கண் விழிக்கும் சமயங்களில், 'இன்னும் கொஞ்சம் நேரம் படுக்கையில் விருப்பம் போல உறங்க முடியாதா' என்று மனம் ஏங்கியது நினைவிற்கு வரும். காலமும் நேரமும் யாருக்கும் காத்திருப்பது இல்லை. நேற்றைக்குத்தான் நடந்தது போல இருக்கும் பல சம்பவங்களை நினைத்துப் பார்க்கையில் 'அதற்குள் இருபத்து ஐந்து வருடங்கள் கழிந்து விட்டதா' என்று ஒரு கணம் அசர வைக்கிறது. ஆனால் அன்றோ, 'எப்போதுதான் இந்த அவசரகதியான இயக்கத்திலிருந்து ஓய்வு கிடைக்குமோ' என்று ஏங்க வைத்த நினைவுகள் வரும், இன்று நினைத்தாலும் காலம் செய்யும் மாற்றங்களையும் அது ஓடி மறைந்த அவசரங்களையும் வார்த்தைகளில் அடக்கிவிட இயலாது.

அன்று இருந்தவர் யாரும் இன்றில்லை, அவ்வாறே இன்றிருக்கும் நானும் நாளை இருக்கப்போவதில்லை, அதற்குள்ளாகவா இத்தனை மாற்றங்கள், அன்றைக்கு இருந்தவர்களும் என்னைப் போன்றே நினைத்திருக்க கூடும் அதனால்தானோ என்னவோ அவர்களின் முகங்களில் ஏதோ ஒரு ஏக்கமும் வேதனையும் அப்போது காண முடிந்தது. அந்த ஏக்கமும் வேதனைகளும் என்னவென்பதை அப்போது என்னால் விளங்கிக் கொள்ள இயலாமல் போனது. இன்றைக்கு என் முகத்தில் இருக்கும் வேதனைகளும் ஏக்கமும் என்னவென்பதை [இளம் வயதினர் என்னுடன் வாழ்வோரும்] என்னை சுற்றியுள்ளவர்களாலும் புரிந்து கொள்வதற்கு இயலாதது. எது மரணத்தின் முதற் படி?, நினைவுகளா, வயதா, நோயா.எதுவென்று நாம் அறிந்தால் அதை நிறுத்திவிடும் வழி அறிய முயலுவோமா, மரணத்தை ஒத்திப் போடும் வழி வகை நாம் அறிந்து இருக்கிறோமா. காலம் என்பது முன்னோக்கி ஓடும் ஓட்டக்குதிரையல்லவா, ஒவ்வொருவர் வாழ்விலும் அந்த குதிரை முன்னோக்கி மட்டும் நம்மை இழுத்துச் செல்லுமே தவிர பின்னோக்கி இழுப்பதில்லை. எங்கே, எதுவரை ஓடும் என்கின்ற அளவை குதிரை எப்படி அறிந்திருக்க முடியும், ஆனால் எங்கோ ஒருநாள் அந்த குதிரை நம்மை விட்டுவிடும் என்பது நிச்சயம் அல்லவா. இந்த ஓட்டத்தில் அதிக வேகம் ஓடும் குதிரைகளும் உண்டு ஆனால் மிக குறைந்த வேகத்தில் ஓடுகின்ற குதிரை என்பதே கிடையாது.

பல சமயங்களில், எல்லோரையும் இழுத்துச் செல்கின்ற குதிரைகள் வெவேறு வழிகளில் ஓடினாலும் அவைகள் கொண்டு போய் சேர்க்கின்ற இடம் (மரணம்) ஒன்றாகவே இருக்கின்றதல்லவா. பணக்காரன் ஏழை, உயர்ந்தோன் தாழ்ந்தோன், என்கின்ற பேதங்கள் இன்றி எல்லோரையும் ஒரே விதமாகவே இழுத்துச் சென்று சேர்க்குமிடம் நோக்கி ஓடிக்கொண்டே இருக்கும் 'காலம்' என்கின்ற குதிரையின் பிடியிலிருந்து விடுபடும் ஞானம் மனிதனாக பிறந்த எவர்க்கேனும் உள்ளதா. எல்லாவற்றிற்கும் மரணம் மட்டுமே முடிவாக்கப்படவில்லை என்றால் மனிதன் மமதை கொண்டவனாக இருந்திருப்பானோ என்னவோ. வாழ்க்கைக்கு முடிவு என்று ஒன்று இல்லாதிருந்தால் வாழ்க்கை என்பதே போராட்டமாகவும் போர்களமாகவும் இருந்திருக்குமோ, நினைத்துப் பார்க்கவே இயலாத உணர்வுகளை கொண்டவனாக மனித இனம் உலகில் வாழ்ந்திருக்குமோ.மரணம் என்பது இருந்திருந்தும் அதனைப் பற்றிய மறதிமட்டுமே மனிதனின் எல்லாவித செயல்பாடுகளுக்கும் போராட்டங்களுக்கும் காரணமாகி விட்டதோ, மரண பயம் என்பது மரணம் தன்னை நெருங்கி வருகின்ற வரையில் ஏற்ப்படுவதே இல்லை, எந்த ஒரு மனிதனும் தான் இறக்கின்ற கடைசி நிமிடத்திலாவது (நினைவு இருந்தால்) அதை கண்டு அஞ்சாமல் இறப்பதில்லை. எத்தனை பெரிய வீரனாக அஞ்சா நெஞ்சனாக இருந்தாலும் கூட மரணம் தன் எதிரில் நிற்கும் போது அதை கண்டு அஞ்சுவது என்பது இயற்க்கையானதொன்று. வயது முதிர்வடைகின்ற முதியவர்களும் கொடிய நோய்களின் பிடியில் நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவர்களும் மரண திகில் சூழ ஒவ்வொரு நொடிப் பொழுதையும் கழிக்கின்ற வேதனைகளில் வாழ்வதும் தவிர்க்க இயலாத அனுபவம். ஒவ்வொரு மனிதனுக்கும் மரணம் முடிவாக இருந்த போதிலும் அதனை பற்றிய மறதி அதைவிட அதிகமாக இருப்பதே வாழ்க்கையின் அதிசயம்.