Translate

11/22/2010

வருமுன் காப்போம்

உணவு என்பது மனிதனின் முக்கிய தேவை. உணவு உண்பதால் நாம் ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்கின்றோம், உணவை விரும்பி உண்பதற்காக, சுவையாக சமைக்க, பலவிதங்களில் உணவில் சுவையை உண்டாக்குவதற்க்கென பல பொருட்களின் துணையுடன் உணவை தயாரித்து உண்கின்றோம். ஆனால் அப்படி உணவின் சுவையை அதிகரிப்பதற்காக நாம் கண்டுபிடித்த பல பொருட்களினால் உடலுக்கு ஏதேனும் நன்மைகள் உண்டா என்பதை நாம் சிந்தித்தோமா. காரம் புளிப்பு உப்பு கரம்மசாலா எண்ணெய் என இவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதால் நமது உடலுக்கு நன்மை என்ன தீமை என்ன என்பதை நாம் எப்போதாவது சிந்தித்து அதன்படி சமைப்பதற்கு முயலுவதுண்டா.

மனைவியோ அல்லது வீட்டில் வேறு யாரோ சமைக்கும் உணவு சுவையாக இல்லாவிட்டால் அவர்களை திட்டுவதும் உணவகத்திற்குச் சென்று நாவின் சுவைகேர்ப்ப உண்பதும் நமது வழக்கம். நாவின் சுவைக்காக உணவை பக்குவப்படுத்தி சமைத்து உண்ணுகின்ற அதே சமயத்தில் சுவைக்காக சேர்க்கப்படும் பொருட்கள் உடலுக்கு எந்த விதத்தில் தீமை செய்கிறது என்பதைப்பற்றி நாம் அறிய முயன்றிருக்கின்றோமா. சுவைக்காக அதிகப்படியான உணவை உண்பதால் உடலுக்கு ஏற்ப்படும் தீமைகளைப் பற்றி நாம் அறிந்திருக்கின்றோமா. உடலுக்கும் பசிக்கும் உணவு முக்கியம் என்பதைத்தவிர அதை எவ்வாறு உண்ணவேண்டும் என்பதை நாம் சிந்தித்து செயல்படுவது உண்டா.

உடலுக்கு ஏதேனும் நோய்கள் உண்டான பின்பு மருத்துவர் குறிப்பிட்ட உணவு வகைகளை சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தினாலும் பலரால் பலவகையான ருசிகளை சாப்பிடாமல் இருப்பதற்கு முடிவதில்லை. இதற்க்கு காரணம் பழக்கம், பழக்கம் என்பது மனிதன் தனது சிறுவயது முதலே கைப்பற்றி வருவது. அவ்வாறு சாப்பிட்டு பழகியதால் அவ்வித சுவைகளை நாக்கு பழகி விடுகிறது. பின்னர் அத்தகைய சுவைகளுடன் கூடிய உணவைத் தவிர வேறு வகையான சுவை குறைவான உணவை ஏற்க்க மறுக்கிறது. உடல் நோய்வாய்பட்டு படுக்கையில் அல்லது மருத்துவரின் ஆலோசனையின்படி உணவை உண்ணும் கட்டாயம் ஏற்படுகின்ற வரையில் அத்தகைய உணவுகளை உண்பதையே தங்களுக்கு திருப்தியளிப்பதாக கருதுகின்றனர்.

வாய்க்கு ருசியாக சமைத்து உண்போம் பிறகு நோய்வாய்பட்டு கிடக்கின்ற போது மருத்துவர் கூறும் உணவுகளை சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று சிலர் கூறுவதும் உண்டு. ஆனால் பலரது உடல்நிலை தங்கள் சாப்பிட்ட ருசியான உணவு வகைகளால் முற்றிலுமாக பாதிப்பிற்கு உள்ளான பின்பு மருத்துவர் கூறும் உணவு முறைகளை கைபற்றுவதினால் காலம் கடந்தநிலையால் உடல்நிலையில் ஏற்படுகின்ற பாதிப்புகளிலிருந்து குணமாக இயலாமலே போவதை காண முடிகிறது. அதிக காரம், உப்பு, சர்க்கரை, புளி, கரம் மசாலா போன்ற பலவகையான பொருட்களால் உடலுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படுவதில்லை மாறாக தீமைகளே அதிகம் உண்டாகும், சிலர் இவற்றை அறிந்தும் சிலர் அறியாமலும் அதிகப்படியாக உட்கொண்டு தங்களது நாவை பழக்கப்படுத்திகொண்டு பின்னர் அவதியுறும் நிலைக்கு தள்ளப்படுவதை காண முடிகிறது.

உணவை அதிக சுவையுடன் சமைப்பதால் அதிகம் உண்பதற்கு ஆவலைத் தூண்டுவதனால் அதிகம் உண்பதால் ஏற்படுகின்ற உபாதைகளும் உடலில் ஏற்படுவதை நம்மால் தவிர்க்க இயலாமல் போகிறது. பசிக்கு உணவா ருசிக்கு உணவா என்பதையும் உணவே மருந்து மருந்தே உணவு என்பதையும் கைகொள்ள பழகுவதே வருமுன் நம் உடலை காக்கும் சிறந்த வழிகளாகும்.&&&&&&&&&&&

11/17/2010

செய்திகள்

முதன்மை செய்திகளில் சில பரபரப்பான தகவல்கள் கடந்த சில நாட்களாக எல்லோரையும் கவர்ந்திருக்கிறது. பொது மக்கள் எப்போதிலிருந்து ஒற்றுமையாக மாறிப்போனார்கள், நல்ல விஷயம்தான், இதே ஒற்றுமை எல்லாவிதங்களிலும் இருந்து விட்டால் இந்திய தேசம் நிச்சயம் சிறப்பான எதிர்காலத்தை கொண்டுள்ளது என்றே சொல்லலாம். என்ன எடுத்த எடுப்பிலேயே தலையும் வாலும் இல்லாமல் எதையோ குறிப்பிடுகிறேன் என்று முனகுவது புரிகிறது, கோவையில் கடத்தி கொலை செய்யப்பட்ட இரு குழந்தைகளுக்காக மக்கள் கொதித்து எழுந்ததும், காவல்துறையின் அபாரமான என்கவுன்டரும் SIMPLY SUPERB !! அட்ரா சக்கை என்று சொல்ல வைத்தது. போலீஸ் இலாகாவின் மீது மக்களுக்கு நிச்சயம் மதிப்பு கூடும் என்பதில் ஐயமில்லை.

சென்னையில் கடத்தப்பட்ட மாணவனை மீட்டு கடத்திய பொறியாளர் இருவரை கைது செய்ததும் 'இதுதாண்ட போலீஸ்' என்று உவகை கொள்ளச்செய்தது. காவல்துறைக்கு நிறைய புதியவர்களை சேர்ப்பதற்கும் புதிய திறமைகளை வெளிக்கொணரவும் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் வேலைவாய்புகள் பெருகவும் காவல்துறையில் இருக்கும் பற்றாக்குறையை ஓரளவாவது நிவிர்த்தி செய்யவும் தமிழக முதலமைச்சர் அறிவிப்பும் செயல்பாடுகளும் நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்து என் கவனத்தை ஈர்த்த செய்தி ஜெயலலிதா அவர்கள் சோனியா காந்தியுடன் அதாவது காங்கிரசுடன் தங்களது கட்சியை இணைக்க வலிய சென்று கேட்டதாகவும் அதற்க்கு காங்கிரஸ் கட்சி ஒத்துக்கொள்ளவில்லை என்பது. திடீரென ஜெயலலிதா எதற்காக காங்கிரசுடன் கூட்டணி சேர எண்ணினார் என்பதும், அதுவும் மத்தியில் உள்ள காங்கிரசுடன் ஏற்கனவே தி. மு. க. கூட்டணியில் இருப்பதை அறிந்திருந்தும் எதற்காக இந்த திடீர் முடிவு என்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய செய்திகளில் மிகவும் முக்கியமானது.

அடுத்து என் கவனத்தை ஈர்த்த செய்தி மத்திய அமைச்சர் திரு ராசாவின் மீது ஏற்கனவே சொல்லபட்டிருந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பதைப் பற்றியது, இந்த ஊழலை முன் வைத்து தி. மு.காவை காங்ரசுடனிருந்து பிரிக்க ஆலோசனையில் துரிதமாக செயல்பட்டு வருகின்ற எதிர்கட்சிகளின் நடவடிக்கை, நாடாளுமன்ற அவைகளை நடத்த விடாமல் புறக்கணித்த செய்தி. அமைச்சரது ராஜினமாவிற்கு பின்னரும் தொடருகின்ற எதிர்கட்சிகளின் புறக்கணிப்பு என்பது ஊழலற்ற ஒழுக்கம் நாட்டில் நிலவ வேண்டும் என்கின்ற நல்ல எண்ணத்துடன் செயல்படுவதாக மக்கள் நினைக்க வேண்டுமா அல்லது கூட்டணியை சிதைக்க கையில் கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் திட்டமா என்பது விளங்கவில்லை.

அடுத்த செய்தி கொஞ்சம் பழைய செய்தியாக இருந்தாலும் என் நினைவில் இன்னும் இருந்து கொண்டு இருக்கின்ற செய்தி, அமெரிக்க அதிபர் ஒபாமாவைப்பற்றியது. ஒபாமாவிற்கும் ஒசாமாவிற்க்கும் என்ன வித்தியாசங்கள் என்று என்னிடம் கேட்டால் ஒசாமா மலை காடு என்று ஒளிந்து கொண்டு தங்கள் மதத்திற்கு ஏதோ பெரிய நல்ல காரியம் செய்வதாக நினைத்துக் கொண்டு தீவிரவாதியாக வாழ்கிறான்(?), ஒசாமா தனது பேச்சின் மூலம் அமெரிக்கர்களை மயக்கிவிட்டு பெருவாரியான ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியை ஏற்று வாழ்கிறார் (இவரது பதவிகாலம் முடிவடைவதற்கு முன்பே அமெரிக்க மக்களின் புத்திசாலித்தனம் ஒபாமாவின் புத்திசாலிதனத்தை என்னவென்பதை அறிந்துகொண்டுவிட்டது), மதவாதியான ஒசாமா தீவிரவாதி என்றால், மத கருத்துக்களின் தீவிரத்தை தன் மனதினுள் மறைத்திருக்கும் ஒசாமா அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி.

ஒசாமா ஆயுதங்களை நம்பி காடு மலைகளில் கஷ்டப்படுபவர், ஒபாமா தனது பேச்சுத் திறமையால் வெள்ளைமாளிகையில் சுகவாசத்தை அனுபவிக்கிறார். இருவரில் யார் புத்திசாலி என்பது நான் சொல்லாமலேயே தெரிந்திருக்கும். ஒபாமா பிழைக்கத்தெரிந்தவர், ஒசாமா மதத்தின் பெயரால் தன்னை கடினமான வாழ்க்கைக்கு புகுத்திக்கொண்டவர். ஒபாமாவிற்கு அமெரிக்கா டாலர்களை சம்பளமாக அள்ளிக் கொடுக்கிறது, ஒசாமாவை பிடிக்கவும் அழிக்கவும் அமெரிக்கா டாலர்களை அள்ளிக்கொடுக்கிறது. ஒசாமாவில் 'சா'வும் ஒபாமாவில் 'பா'வும் ஒளிந்துகொண்டுள்ளது.


அடுத்த செய்தி தமிழகத்தின் பள்ளிக்கூடங்களுக்கு என்னதான் ஏற்பட்டதோ தெரியவில்லை, அடிக்கடி செய்திகளில் பள்ளிகூடங்கள் பலவித செய்திகளை கொடுத்து வருகிறது. பள்ளிக்கூடத்தில் ஆசிரியரைப்போல வந்து மாணவிகளின் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற ஆசிரியர் வேடத்தில் திருடன். பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வண்டி கவிழ்ந்து குழந்தைகள் பலி. அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம். கோவிந்தராஜன் கமிட்டியின் தலைவர் மாற்றம், பள்ளி மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது. இன்னும் விதவிதமான செய்திகள் தினம் தொகுப்பில் இடம்பெற தவறுவதில்லை.

இதற்கிடையே நெய்வேலியில் வேலை நிறுத்தம் முதல் நாள் இரண்டாம்நாள் மூன்றாம்நாள் என தொடரும் போராட்டத்தினால் மின்சார உற்பத்தி பாதிப்பு. லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம், லாரி ஓட்டுனர் வேலை நிறுத்தம், இதனால் பல கோடி பெறுமான பொருட்கள் தேக்கம், பல கோடி நஷ்டம். ஜல் புயலினால் தமிழகம் முழுவதும் பலத்தமழை, மழை தொடரும் என வானிலை அறிவிப்பு. சென்னையில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பெரும் பாதிப்பிர்க்குள்ளானது. தென் மாநிலங்களில் பலத்தமழை, பயிர்கள் அழுகும் நிலை, வீடுகளில் மழை நீர் புகுந்தது, சுவர்கள் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி.
@@@@@@@@@

11/10/2010

அடடா இது என்ன விந்தை .....!!

விவாதம் என்பது மனிதனுள் தினம் நடக்கும் போராட்டங்கள், அவற்றில் எது எதை மேற்கொள்ளுகிறது என்பதில் முடிவு கிடைக்கிறது அதன்படி செயல்படுகிறோம். மனமும் அறிவும் அதிகமாக மனிதனுக்குள் போராட்டம் செய்பவை என்பதை பலரும் அறிவர், ஆனால் நம் இதயமும் - மூளையும், நரம்புகளும் - மூளையும், எலும்புகளுடன் சதையும், ரத்த நாளங்களுடன் ரத்தமும், ரத்தத்தில் உள்ள வெள்ளை மற்றும் சிகப்பணுக்களும், உணவுடன் குடல்களும், உணவின்றி தவிக்கும்போது என்சைமுடன் குடல்களும் குடலினுள் உள்ள சிறு உறிஞ்சிகளும் என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தினம் தினம் நிமிடம்தோறும் போராடி வெற்றிக் கொள்கின்றன.

இவற்றில் ஏதேனும் ஒன்று வலுவிழந்து அதன் போராட்டம் குறையும் போது நோய்வாய்படுவதுடன், வலுவிழந்து செயலிழந்தும் விடுகின்றது. தூக்கம் சமயத்திற்கு வராமல் கண்களும் அதன் சம்பந்தப்பட்ட உறுப்புகளும் நாளடைவில் அதன் செயலில் குறைபட்டு அதனால் நோய்கள் அந்த உறுப்புகளுக்கு ஏற்படுகிறது, தினம் தினம் டென்ஷன் எனப்படும் வேலைப்பழு குடும்பத்தில் அல்லது மற்ற பிரச்சினைகளால் ஏற்படுகின்ற அழுத்தம் ரத்த அழுத்தத்தை அதிகரித்து இதயத்தின் செயல்பாட்டில் மிகவும் தீவிரமான குறைகளை ஏற்ப்படுத்தி செயலிழக்கச் செய்வதை நாம் அறிவோம், இதையே ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய்க்கு அடிப்படை காரணம் என்று மருத்துவம் கூறுகிறது. மனிதன் பிறந்தது முதல் அவனது உறுப்புகள் செயல்பட துவங்கிய காலம் முதல் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு தேவைக்காக போராடத்தான் வேண்டியுள்ளது.

இதில் சிறுவர் பெரியவர் என்ற பாகுபாடுகள் இல்லையென்றாலும் சில பிரச்சினைகள் குழந்தைப்பருவத்திலேயே உடலில் தோன்றிவிடுவதும் மிகவும் வருத்தமான விளைவே. இத்தகைய குறைகள் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படாமல் தடுக்கவே குழந்தை கர்பத்தில் இருக்கின்ற ஒவ்வொரு மாதமும் மருத்துவரிடம் சென்று தாயின் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த காலத்து இளம் பெண்கள் இவ்வித பொறுப்புகளை ஏற்க்க விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து திருமண பந்தத்திற்குள் நுழைவதற்கு தயக்கம் காட்டுவதால், வேறு பிரச்சினைகளை தானே தேடிக்கொள்ளுகின்றனர்.

ஒரு பெண் பூப்பெய்திய பின்னர் அவளது உடல் குழந்தையை உற்பத்தி செய்வதற்கு தயாராக்கப்படுகிறது, ஒரு குழந்தையாவது குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்றுக்கொள்ளாமல் உடலை பேணி காக்கும் பெண்டிருக்கு மார்பக புற்று நோய், கர்பபை புற்று நோய், போன்ற நோய்கள் உருவாக காரணமாகிறது என்று மருத்துவ செய்திகள் தெரிவிக்கின்றது. ஆணிற்கு இதை போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது கிடையாது ஏனென்றால் குறிப்பிட்ட பருவம் வந்த பின்னர் உடலில் உண்டாக்கப்படும் விந்துக்கள் தானாகவே குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியேற்றிவிடுகின்ற உடலமைப்பை ஆடவர்க்கு இயற்க்கை வரபிரசாதமாக வழங்கியுள்ளதே இதற்க்கு காரணம் என்கிறது மருத்துவம். பெண்கள் குறிப்பிட்ட வயதில் திருமணம் செய்யாமல் இருப்பதால் மனநிலை பாதிப்புகள் ஏற்ப்படும் வாய்புகள் உண்டென்கிறது மருத்துவம்.

போராட்டம் என்பது எல்லா உறுப்புகளிலும் ஏற்பட்டாலும் அடிக்கடி நம்மை குழப்பி நமக்கு அதன் ஆதிக்கத்தை வெளிகாட்டுவது மூளையும் அதன் நரம்புகளும்தான். இங்கிருந்தே மனம் என்கின்ற பேரரசன் தனது செங்கோலை நீட்டி தனது ஆட்சியை நிலைநாட்டுகிறான். இதனால் பிரச்சினை மற்ற உறுப்புகளுக்கு ஏற்படுவதை விட, மனிதனின் சமூகத்தோற்றத்தை வெளிப்படையாக காட்டவும் முடிகிறது. தனக்குத்தானே எதிரியாக இருக்கின்ற இரு வேறு நிலைகள் மனித உடலில் மனமும் சிந்தனைகளும் அதன் தொடர்ச்சியான செய்கைகளும். மனம் ஒன்றும் அறிவு ஒன்றும் சொல்லுவது பின்னர் வேறு செயல்களை செய்வதும் இவற்றின் காரணமே. இந்த இரு உறுப்புகள் மனித உடலில் பெரும் போராட்டத்தை நடத்தி வருவது மிகவும் வியப்பான ஒன்று. "நான்" என்கின்ற ஒற்றை வார்த்தைக்கு இரு வேறு பிரதிபலிப்புகளை உள்ளடக்கியது இந்த [மூளையும்] மனமும் செயல்களும், இது இயற்கையின் அபூர்வ அமைப்பென்றே சொல்லலாம். தோற்ற அமைப்பிற்கும் அல்லது உருவத்திற்கும் செய்கைக்கும் எதிர் மாறான காரியங்களை நம்முடலில் நடத்துவதும் இவைதான். என்ன விந்தை.++++++++++++++++

11/02/2010

தீபாவளி நல் வாழத்துகள்


தீப ஒளித்திருநாள் தீபாவளி நெருங்கி விட்டது, அசுரனை கொன்ற கதையை மறந்து தீபங்களை ஏற்றி வைத்து புத்தாடை அணிந்து இனிப்புகள் சாப்பிட்டு, ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு, உறவினர் வீடுகளுக்கு திரைப்படங்களுக்கு, கடற்கரைக்கு என எல்லா இடங்களுக்கும் குடும்பத்தினருடன் சென்று வயிறார ருசியாக உண்டு பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்படும் தீபாவளிக்கு, ஜாதி மதங்கள் அவசியமில்லை. கையில் பணமும் அதை செலவாக்கும் வழிகளும் மட்டுமே தெரிந்திருந்தால் போதும். அசுரனை கொன்ற தினம் தீபாவளி என்றால் அதில் உடன்பாடு இல்லாதவர்களும் உண்டு, ஆனால் குடும்பத்துடன் கொண்டாடுகின்ற ஒளித்திருநாள் என்ற பெயரில் பட்டாசுகளை வெடிக்கும் சந்தர்ப்பத்தில் பங்குகொள்வதற்கு ஜாதிகளோ மதங்களோ அவசியமற்றதாகிவிடுகிறது.

இவ்வருடம் சிவகாசியில் நிறைய பட்டாசு தயாரிக்கின்ற இடங்கள் எரிந்து சாம்பலான காரணமோ என்னவோ தெரியவில்லை, ஊரே ஊரடங்கு தீபாவளியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக டமால் டமால் என்று திடீர் அதிர்வுகளை ஏற்படுத்துகின்ற பட்டாசு வெடிகளின் சத்தம் கேட்கவில்லை. சமூக விரோதிகளின் அத்து மீறல்களும் குழந்தை தொழிலார்களை பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுத்தி அதிக லாபம் சம்பாதித்துவந்த, பதிவு செய்யப்படாத பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்கள் காணாம் போனதாலும், இவ்வருடம் எங்கே பார்த்தாலும் கேட்கின்ற வெடி சத்தம் கேட்கவில்லை. உழைத்து சம்பாதிக்கின்ற காசை நல்ல முறையில் உபயோகித்து சந்தோசம் காண்பதே சிறந்த வழி, அதை விடுத்து நொடியில் வெளிச்சத்தையும் சப்தத்தையும் எழுப்பி விட்டு விட்டு உடனே அடங்கி போகின்ற விலை உயர்ந்த பட்டாசுகளை வாங்கி காசை கரியாக்குவது குறைந்தால் எத்தனையோ வீடுகளில் குழந்தை தொழிளாலர்கள் விடுதலை பெற்று படிக்க அல்லது வேறு தொழில் கற்பதற்கு செல்ல நேரும்.

தீபாவளி என்றாலே வெடியும் இனிப்பும்தான் முக்கியம் என்று சிலர் கூறுவார், நான் வசித்த பகுதியில் தீபாவளியன்று விடியற்காலை சரியாக மூன்று மணி முதல் ஊரே ஒரே நேரத்தில் நான்கு மணி வரையில் இடைவிடாது பட்டாசு கொளுத்தி வெடிப்பார்கள், அப்போது கேட்கின்ற அந்த சப்தம் மிகவும் வித்தியாசமானது. இந்த வருடம் தலை தீபாவளி கொண்டாடுகின்ற பலரும் மிகவும் உற்சாகமாக தீபாவளியை எதிர்நோக்கி உள்ளனர். எல்லோருக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.VVVVVVVVVV