Translate

9/18/2010

காமனை வென்றாக வேண்டும்....

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் எல்லாவித உறவுகளிலும் உதவிக்கரம் கொடுப்பதற்குதான் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் திருமணம் செய்து கொள்கின்றனர். மனைவி என்கின்ற உறவு முறையிலே கூட, ஆரம்ப காலத்தில் காதலியைப் போல உறவாடுதல், படுக்கையறையில் தாசியைப்போல், நோயுறும் காலத்தில் தாதியைப் போலவும் தாயைப் போலவும் கனிந்து ஆதரவுடன் உதவி செய்து, பொருளாதார சிக்கல் வரும்போது சிறந்த சாணக்கிய யோசனைகள் வழங்கி, பிள்ளை வளர்ப்பில் இருவரும் ஆசிரியராய், செவிலியாய், தங்கள் தோளுக்கு உயர்ந்து பிள்ளைகளானதும் அவர்களது உற்ற நண்பர்களாய், தேவைப்படும் சமயங்களில் ஆலோசனை வழங்கி,

முதுமையில் ஒருவருக்கொருவர் உதவியாக காலமெல்லாம் அன்பு செய்து, திருமணத்தில் இணைத்த உறவை மரணம் பிரிக்கும்வரை, தோள் கொடுத்து வாழ்வதே நல்லறம். இடையிடையே வந்து போகும் சூறாவளி சுனாமியால் பிடுங்கி எடுக்க இயலாத கற்ப்பாறைகளாய் நிற்க அடிப்படை தேவை நம்பிக்கை அன்பு விட்டு கொடுத்தல். ஆரம்பத்தில் சுமக்க இயலாத கடும் சுமையாக நம் தோளின் மீது வைத்திருக்கும் இரும்பு குண்டுகளாக சுமை தாங்க இயலாமல் தோளிலிருந்து ரத்தம் வழிந்து, ஏன் தோள் எலும்புகள் கூட நொறுங்கி போய் வாழ்க்கைச் சுமையை இறக்கி வைக்கவும் முடியாமல் சுமக்கவும் இயலாமல் தவிப்புகளும் சஞ்சலங்களும் சூழ்ந்து வாழ்க்கையின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது போன்ற மரண நிழல் சூழ்ந்தாலும், வாழ்க்கை என்கின்ற பயணத்தில் நம்பிக்கைகளும் முயற்ச்சிகளும் அதனுடன் சேர்ந்த மாயமற்ற மனைவியின் அல்லது கணவனின் அன்பும் நிச்சயம் மீண்டும் வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொடுக்கும்,

கணவன் + மனைவி + பிள்ளைகள் + பிரச்சினைகள் + பொருளாதாரச்சிக்கல் + நோய்கள் = வாழ்க்கை - அன்பு + நம்பிக்கை + உழைப்பு + நேர்மை + விடா முயற்ச்சிகள் = நிறைவான சந்தோசம்.

கணவன் மனைவி என்று ஆன பின்னர் மனைவி என்பவள் வெறும் மனைவியாகவே இருந்தால் கணவனுக்கு திருமண வாழ்வில் திருப்தி ஏற்ப்படுவதில்லை, வேறு பெண்ணை தேடி மனம் பறக்க துவங்கும், மதுவின் போதையில் நிம்மதியை தேடி அலையும், மனைவி என்பவள் படுக்கையில் கணவனை முழு சந்தோஷப்படுத்தும் வேசியாக மாறித்தான் ஆக வேண்டும், கணவன் வேறு பெண்ணை தேடி போகும் வாய்ப்புகளை ஏற்படுத்தக் கூடாது. கணவனும் மனைவியை எல்லாவிதத்திலும் திருப்திபடுத்த வேண்டும், குழந்தை பெற்றாகி விட்டது இனி குழந்தையை வளர்ப்பதில் மனைவி கவனமாக இருந்தால் போதும் வே
ளைக்கு ஒழுங்காய் சமைத்து போட்டால் போதும் என்று அலட்சியம் காட்டி வந்தால், மனைவிக்கு தொடர்ந்து ஏற்ப்படும் ஏமாற்றங்கள் ஏக்கங்கள் என்னவென்று அறிந்து கொள்ளும் விருப்பமின்றி வாழ்க்கை தொடருமானால் மனைவி வேறு ஆணின் வசம் ஈர்க்கப்படும் சூழலை நாமே ஏற்படுத்திக் கொடுத்துவிட நேரிடும்.

வெளிநாடுகளில் வருடம் முழுவதும் வேலை பார்க்க செல்லும் கணவர்கள் வேலையினிமித்தம் மனைவியை பிரிந்து வாழும் நிலை ஏற்ப்படும் போது கணவனும் மனைவியும் விடுமுறையின் போது மட்டுமே ஒருவரையொருவர் சந்திக்க இயலும் என்பதால் சூழ்நிலையை அறிந்து, குடும்பத்திற்காக, பொருளாதார முன்னேற்றத்திற்காக கணவனோ மனைவியோ சம்பாதிக்க சென்றிருக்கும் சமயத்தில் வேறு ஆடவருடனோ வேறு பெண்ணுடனோ உறவு வைத்துக் கொள்வதென்பது தவறு, இந்த சூழ்நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. கேரளாவில் இவ்வாறு வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்பவர்களின் மனைவிகள் பெரும்பாலும் வேறு ஆடவர்களுடன் உறவு வைத்துக்கொள்வது, பலர் அப்படி உறவு வைத்துக்கொள்ளும் ஆடவருடன் வாழ்க்கையை வாழ்வதும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அதை கேள்விப்பட்ட கணவன்மார்கள் பலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாக கேள்விப்பட்டதுண்டு. இத்தகைய நிலை தமிழகத்தில் கிடையாது, அதற்க்கு காரணம் சமூக அமைப்பு. சமூக கட்டுபாடுகள். தாம்பத்தியத்தில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சரியான விதத்தில் திருப்திபடுத்தவில்லை என்றால் வாழ்க்கையில் நிம்மதி இருக்க வாய்ப்பு இல்லை.
மன்மத லீலை என்ற பழைய திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதி கமல்ஹாசன் நடித்த பாடல் வரிகள் நினைவிற்கு வருகின்றது.

மனைவி (கணவன்) அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்தவரம்
மனது மயங்கியென்ன
உனக்கும் வாழ்வு வரும்

இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு
எனக்கது புரிந்தது இன்று

பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடுதானே
காமனை வென்றாக வேண்டும்

கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவர் கண்டாலே காதல்

அழகினை புரியாத பாவம்
அருகினில் இருந்தென்ன லாபம்