Translate

9/24/2010

காமன் வெல்த் விளையாட்டுகள்

விளையாட்டு என்றாலே இந்திய நாட்டை பொறுத்தவரையில் கிரிகெட்டுதான் சிறியவர் முதல் பெரியவர் வரையில் நினைவிற்கு வரக்கூடியது, கிரிகெட்டைப்பற்றிய செய்திகளை அறிந்துகொள்ளாதவர்கள் மூடர்கள் என்ற நிலை கூட வந்துவிடும் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதன் காரணம் என்ன, ஏன் கிரிகெட்டு மட்டும் நமது நாட்டில் இத்தனை முக்கிய பங்கு எடுத்துக்கொண்டு ஏகோபித்த வரவேற்ப்பை பெறுகிறது, சினிமாவிற்கு அடுத்தபடியாக நிறைய நட்சத்திரங்களையும் வில்லன்களையும் உள்ளடக்கி மக்களை கவருவதன் காரணம் என்ன, வாழ்க்கையில் சினிமாவும் கிரிகெட்டும் பொழுது போக்குவதற்கு பதிலாக பொழுதை வீணடித்து பலரது உயிராக எண்ணப்படுவது மக்களின் பொழுதுபோக்கு தேவைகள் என்பது அன்றாட தேவைகளையும் மிஞ்சி நிற்ப்பதை எடுத்துகாட்டுகிறது.

காமன் வெல்த் நாடுகளின் விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் முதன் முறையாக நடத்த ஒப்புக் கொண்டபோதும் அதற்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டபோதும் ஆட்சியில் இருந்தவர்கள் வேறு அவற்றை நடைமுறை அல்லது செயலாக்கப்படுத்தும்போது இருப்பவர்கள் வேறு, ஆனால் சேர்மன் சுரேஷ் கல்மாடியும், எம்.எஸ்.கில் என்பவர்கள் மட்டுமே அப்போதும் இப்போதும் நிரந்தரமாக பதவில் இருந்து இவற்றின் மொத்த பொறுப்புகளையும் அறிந்தவர்களாக உள்ளனர், காமன் வெல்த் விளையாட்டு ஏற்ப்படுகளுக்கான பணம் கடனாக கொடுக்கப்பட்டு பின்னர் விளையாட்டுகள் நடத்துகின்ற போது வசூலாகும் பணத்திலிருந்து கடன் திருப்பி கொடுக்கப்படும் என்பது ஒப்பந்தம் என்று கல்மாடி சமீபத்தில் விளக்கமளித்துள்ளார்.

ஆனால் இதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சட்டுகின்றவர்கள் ஒருபுறம் இருக்க அதன் கட்டுமான பணிகளை குறை சொல்லும் நாடுகள் தீவிரவாத அச்சுறுத்தல்களை காரணம் காண்பித்து விளையாட்டில் தங்கள் வீரர்களை கலந்து கொள்ள விடாமல் தடுக்கும் நாடுகள் என்று காமன் வெல்த் போட்டிகள் தடுமாறிக்கொண்டு இருக்கின்ற செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் போட்டிகள் துவங்குவதற்கான நாள் நெருங்கிக்கொண்டும் இருக்கிறது. நாட்டில் முதன் முதலாக நடக்கவிருக்கும் விளையாட்டு போட்டிகளை நடக்கவிடாமல் தடுப்பதற்கு இத்தனை சதியா என்பது பலரை வியப்பில் ஆழ்த்துகின்ற கேள்வி. இதற்கெல்லாம் யார் காரணம் என்று பார்த்தால் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலே என்று மொத்த பழியையும் வேறு யார் மீதோ போட்டுவிட இயலாதபடி உள் நாட்டு தீவிரவாதமும் எதிர்கட்சிகளின் கூட்டு சதிகள் கூட மிகவும் முக்கிய காரணம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆளும் கட்சியினர் நாட்டிற்கு எந்த காரியத்தை செய்தாலும் அதை தடுத்து நிறுத்துகின்ற முயற்ச்சிகளிலேயே எதிர் கட்சிகளும் உள்நாட்டு தீவிரவாதிகளும் தீவிர ஆலோசனை செய்துவருவதே இதற்கான மிக முக்கிய காரணம். பொதுமக்களுக்கு நன்மை செய்வதாக கூறிக்கொண்டு உள்நாட்டு தீவிரவாதிகளை உருவாக்கும் பலரும் இதற்க்கு மிகவும் முக்கிய காரணம், இந்தியாவை அந்நிய நாடுகளுக்கு தாரைவார்த்து கொடுக்கும் நடுவன் அரசை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு இந்திய மக்களை தங்கள் வசம் ஒன்று திரட்டி இந்தியாவை உள்நாட்டு தீவிரவாதத்தின் மூலம் நாசப்படுத்த திட்டம் வகுக்கும் கலவரக் கும்பல்களின் சதிநோக்கமும் இதற்க்கு காரணம்.

எது எப்படியாயினும் திட்டமிட்டபடி போட்டிகள் நடந்து முடியப்போவதும் அதற்கான அனைத்து ஏற்பாடுகள் நடந்து வருவதும் எதிர்ப்புகளின் மத்தியில் நிறைவேறிக்கொண்டு தான் இருக்கிறது.