Translate

8/23/2010

இனி தினமொரு கடிதம்


அந்த காலத்தில் உள்ளுராக இருந்தாலும் வெளியூராக இருந்தாலும், கடிதம் மூலம் மட்டுமே ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றங்கள் செய்தாகவேண்டும்,அப்போதைய தொலைபேசி என்பது ட்ரன்க் கால் புக் செய்துவிட்டு காத்து கிடக்கவேண்டும், தொலைபேசிகள் எங்கோ ஒரு வீட்டில்தான் இருக்கும், தொலைபேசித்தான் எங்கோ ஒருவரின் வீட்டில் இருக்கிறது என்றால், கார் கூட இரண்டு வகைகள்தான் ஒன்று அம்பாசிடர் மற்றொன்று பியட், ப்ளை மௌத் ஒருசிலர் மட்டுமே உபயோகிப்பார்கள், நிறம் கருப்பு இல்லையென்றால் வெள்ளை மட்டுமே, என் அப்பா சொல்லுவார் சென்னையில் மவுன்ட் ரோட்டில் எந்த கார் சென்றாலும் அதன் எண்ணை வைத்து இவர்தான் செல்லுகிறார் என்று சொல்லிவிட முடியுமாம், அந்த அளவிற்கு குறிப்பிட்ட பெரும் புள்ளிகள் மட்டுமே கார் உபயோகித்து வந்ததால், கடிதம் மட்டுமே தகவல் பரிமாற்றத்தின் மிக முக்கிய வெகுஜன உபயோகத்தில் இருந்தது, 1980களில் வளைகுடா நாடுகளுக்கு சென்னையிலிருந்து கடித போக்குவரத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து நாட்கள் முதல் ஒரு வாரம்வரை ஆகும்.

அவசரத்திற்கு தபால் இலாகாவின் தந்தி இருந்தது, தந்தி என்றாலே வயிற்றை கலக்கும் செய்தி என்றொரு பயம் எப்போதுமே மக்களுக்கு உண்டு. இன்றைக்கு முப்பது ஆண்டுகளில் தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி அசுர வளர்ச்சியைவிட மிஞ்சி நிற்கிறது. அடுத்த இருபது ஆண்டுகளில் இதன் வளர்ச்சி நிச்சயம் அடுத்த உலகத்தை எட்டிவிடுவது உறுதி. ஏனையத் துறைகளைவிட தகவல்துறை மட்டுமே இணையற்ற வளர்ச்சியடைந்துள்ளது, உலகமயமாக்கபட்டதன் விளைவாக வெளிநாடுகளில் உள்ள அத்தனை கார்களும் நமது
நாட்டிலேயே உற்பத்தியாகி குறைந்த விலை, விதவிதமான நிறம், அமைப்பு, வசதிகள் என்று போட்டி போட்டுக்கொண்டு இந்தியா வாகன உற்பத்தியிலும் வனப்படைந்துள்ளது, இதனால் சாதாரண மனிதனும் கார் வாங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது,

வளைகுடாநாடுகளுக்கு நான் சென்ற போது அங்கே ஓடுகின்ற விதவிதமான அழகிய வெளிநாட்டின் சொகுசு கார்களை கண்டு அதிலேறி பயணித்து அதிசயித்திருக்கிறேன், அப்போது 1982 நமது நாட்டி
ல் பெரும் போராட்டத்திற்குப் பின்னர் மாருதி 800 மட்டுமே தயாரிப்பு துவங்கி இருந்தது, மாருதி கார் நிருவனம் இந்தியாவில் உற்பத்தியை துவங்கவே முடியாதோ என்று முதலில் நினைக்கத்தோன்றியது, மாருதி கார் [SUZUKI] ஜப்பானிய நிறுவனத்துடனான மத்திய அரசின் ஒப்பந்தத்தில் அந்நிறுவனத்துடன் சஞ்சைகாந்திக்கு ஊழல் உள்ளது என்ற எதிர்கட்ச்சிகளின் குற்றச்சாட்டு தீர்க்கப்பட்டு மாருதி கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு குறைந்த விலைக்கு விற்ப்பனைக்கு வருவதற்கு பெரிய போராட்டமே நடத்தப்பட்டது, அதாவது பியட் கார் என்கின்ற இத்தாலி நிறுவனத்தின் கிளையாக மும்பையில் 1905 ஆம் ஆண்டு அறிமுகபடுத்தபட்டது, அதற்குப் பிறகு அதிக பல வருட இடைவெளிக்கு பின்னர், 1982 மாருதிகார் சேவை இந்தியாவில் தொடங்கியது.போக்குவரத்துத்துகும் தகவல் தொடர்புக்கும் மக்களுக்குமான தொடர்பு மிகவும் அதிகம், ஒன்றையொன்று சார்ந்திருப்பது தான் அதற்க்கு முக்கிய காரணம். இன்றைய காலத்தில் கடிதபோக்குவரத்து மக்களிடையே மிகவும் குறைந்திருந்தாலும் அதற்கு பதிலாக கைபேசிகள் மனிதர்களின் வாழ்க்கையை அபகரித்துவிட்டிருக்கிறது, அதிகமாக எது கிடைத்தாலும் அதன் மதிப்பை நம்மால் உணர முடியாது என்பதை இன்றைய கைபேசி புழக்கம் நமக்கு சொல்லும் பாடம், குரியர் சர்வீஸ் தபால்துறையைவிட துரிதமாக செயல்படுவதினால் தபால்களின் போக்குவரத்து மிகவும் எளிதாகிவிட்டது. இன்னும் கொஞ்சம் மேலே போனால் மெயில் வசதிகள் அயல்நாடுகளை மணித்துளிகளில் கைக்குள் கொண்டுவந்துவிடுகிறது இதன் உச்சகட்ட விரைவு சேவை.

கடிதம் எழுதும் முறைகள் எல்லாம் மறந்துவிடாமல் இருக்க, விலாசம் தெரியாத ஆனால் கடிதமெழுத விரும்பும் நபர்களுக்கு இனி தினம் ஒரு கடிதமாக எனது பதிவில் எழுத விரும்புகிறேன், நான் கடிதம் எழுதவிருக்கும் நபர்கள் என் நண்பர்கள், நண்பர்கள் அல்லாதோர், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், உலகத்தலைவர்கள், மறைந்த தலைவர்கள், மறைந்த நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இன்னும் நிறைய பேர் இந்த வரிசையில் உண்டு. இந்த வரிசைக்கு முடிவே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த வரிசையில் முதல் முதலாக நான் கடிதம் எழுதவிருக்கும் நபர், என் அப்பா, என் தகப்பனார்.