Translate

8/29/2010

மகிந்த ராஜபக்சவுக்கு - கடிதம் 3


ஸ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்சே அவர்களுக்கு,

நான் இந்திய நாட்டின் பிரஜை, உங்களைப்பற்றி அதிகமான விவரங்களை அறிந்துகொள்வதற்க்காக கூகிள் மூலம் இணையதளத்தில்
சில தகவல்களை அறிந்தேன், அதில் உங்களது அரசியல் பிரவேசம் என்பது உங்கள் தந்தையின் மூலம் ஏற்பட்டது என்பதை அறிந்தேன் அதுமட்டுமில்லாமல் நீங்கள் படித்தது சட்டப்பிரிவு என்பதையும், இணையதளம் தவிர உங்களது விவரங்களை நான் அறிந்தவரையில் ஊடகங்களில் பெரும்பாலான சமயங்களில் செய்திகள் மூலம் அறிய முடிந்தவைகளில் மிகவும் பிரசித்தமானது தமிழ் தீவிரவாதிகளை அழிப்பதில் உங்கள் முயற்ச்சிகளும் அதில் நீங்கள் அடைந்த வெ(ற்)றி மட்டுமே, உள்நாட்டு தீவிரவாதிகளை அழித்துவிட்ட பெருமை உங்களது அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாக நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் கருதினாலும், என்னைப் போன்ற மனிதாபிமானிகளுக்கெல்லாம் உங்கள் சாதனை பெரிதாக தெரியவும் அதை சாதனையாக ஏற்கவும் ஒருபோதும் இயலாத காரியம்.

தீவிரவாதிகளை உள்நாட்டில் உருவாக்கிய பெருமை உங்கள் நாட்டில் வாழ்ந்த முன்னோர்கள் உங்களுக்கு வைத்துவிட்டு போன சொத்துக்கள், அவற்றையெல்லாம் மறந்துவிட்டு போராளிகளை ஒடுக்கி உங்களது ஆயுதங்களால் பல லட்சக்கணக்கான அப்பாவி உயிர்களை பலியாக்கி இன்று இலங்கையை உங்களது நாடாக்கிகொள்ளும் நய வஞ்சக செயலுக்கு சாதனை என்ற பெயர் வைத்து தற்புகழ்ச்சியாக பெருமைபட்டுக் கொள்ளும் அரசியல் நாடகத்தை ஒரு போதும் சாதனையாக ஏற்க்க இயலாது. தீவிரவாதிகளை அழித்ததில் நீங்கள் பெருமைபட்டுக் கொண்டாலும் அப்பாவிகளை கொன்று குவித்து இன்றுவரை நியாயம் நீதிகளை மறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் உங்களது வெறிச் செயல்களை மனிதாபிமானிகள் ஒருபோதும் ஏற்க்கமாட்டார்கள்,

நீங்கள் வணங்கும் புத்தர் சொன்ன கருத்துக்களுக்கு எதிர்மாறான காரியங்களை செய்து வருகின்ற உங்களை புத்தர் மன்னிப்பாரா, நீங்கள் கோவில்களுக்குச்சென்று வணங்குவது எந்த கடவுளை என்பது விளங்கவில்லை, எந்த கடவுளாக இருந்தாலும் மனிதனை மனிதன் கொன்று குவிக்கும் நியாயமற்ற போக்கை எந்த கடவுளும் ஏற்க்க மாட்டார் என்பது உறுதி, உங்களது வெறி பிடித்த ராணுவம் கொன்று குவித்த அப்பாவிகளின் ஆன்மாக்கள் ஒன்று சேர்ந்து உங்கள் அத்தனைபேரையும் நரகத்தில் தள்ளும் என்பது நிச்சயம். தீவிரவாதிகளை கொன்று வெ
(ற்)றிக் கொடி கட்டி இருக்கும் உங்கள் ஆட்சியில் ஒருதலை பட்ச்சமான அரசியல் இன்னும் நடைபெற்று வருகிறதென்பது, மிச்சமிருக்கும் அப்பாவிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைத்திருக்கும் உதவிகளை செயல்படுத்த விடாமல் தடை செய்து வருகின்ற ஈன போக்கை எந்தநாட்டிலும் நல்லதொரு மக்களின் தலைவன் செய்யமாட்டான்.

தமிழர்களை ஒட்டு மொத்தமாக சிறிலங்காவை விட்டு வெளியேற்றி சிங்களநாடாக்கும் முயற்ச்சியில் உங்கள் ஆட்சி நடத்தப்படுகிறது என்பதற்கு இதை விட
சிறந்த ஆதாரம் தேவை இல்லை, மனிதர்களை ஈவு இரக்கமின்றி அழிக்கும் மிருகங்களாக உலவி வருகின்ற, ரத்தம் குடிக்கும் பூமியாகிப்போன சிறிலங்காவில் இனி மண்ணிற்கு கீழே இருந்து மேல் நோக்கி வளரப்போவது மரங்களும் செடிகளுமாக இருந்தாலும் அவற்றிலிருந்து காய்கனிகள் விளைவதற்கு பதிலாக மனிதர்கள் விளைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை அப்படி விளையப்போகிற மனிதர்கள் மூலம் சிறிலங்காவின் தலையெழுத்து கூட மாற்றப்படலாம் ஏனென்றால் அத்தனை மனிதர்களை அநியாயமாக கொன்று பூமியில் விதைக்கபட்டிருக்கிறது, இனி மண்ணுக்கடியில் நீரும் நெருப்பும் காண இயலாது, ரத்தமும் எலும்புகளுமே கிடைக்கும். கொடியவர் வாழ்ந்த பூமியில் இனி மானிடர் பிறப்பாரோ என்பது சந்தேகமே. இதயம் இல்லாமல் பிறந்து விட்டவரோ நீர் என்று சிந்திக்க வைக்கிறது,

மரணம் கூட கிட்டே வருவதற்கு உம்மை கண்டு அஞ்சும் போலும், அசுரர்களை பற்றி படித்ததுண்டு தற்போது ராஜபக்சேவின் உருவில் மனித உருக்கொண்டு சிறிலங்காவில் வாழ்கிறது என்பதை அறியும்போது உம்மை சிங்கம் புலிபோல கூண்டுக்குள் பூட்டிவைத்து வேடிக்கை பார்க்கத் தோன்றுகிறது, மரணத்தின் போது உமது ராணுவத்தால் அழிக்கப்பட்ட அத்தனை ஆத்மாக்களும் ஒன்று சேர கூடி வந்து உம்மை கொண்டு சென்று நரகத்தில் சேர்க்கும் என்பது உமக்கு தெரியாத உண்மை.

இப்படிக்கு இந்திய மனிதாபிமானி

ரத்னா