Translate

8/29/2010

பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களுக்கு - கடிதம் 2


இந்திய நாட்டின் பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களுக்கு,

இந்திய நாட்டின் கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒரு பிரஜை, வணக்கம், எனக்கு எப்போதுமே நமது நாட்டின் பிரதமர்களை பெரும்பாலும் மிகவும் பிடிக்கும், பிடிப்பதற்கு அவர்களிடம் இருந்த பல குணங்கள் காரணம், அது போலவே உங்களது பொறுமை, திறமை, முதுமை, எளிமை, சிறந்த நிர்வாகம், எதிர் கட்சிகளின் முரட்டாடங்களை சரிகட்டும் விதம், மேலைநாடுகளிடம் உறவு கொள்ளும் முறைகள், வெளிநாடுகளுடன் உறவுகளை சரியாக பயன்படுத்தும் சாதுர்யம், உள்நாட்டு தீவிரவாதங்களை சமாளிக்க எடுக்கும் முயற்ச்சிகள், மிகவும் முக்கியமாக பொருளாதாரத்தை சமன் செய்ய மேற்கொள்ளும் முயற்ச்சிகள், விலைவாசி ஏற்றத்தை கையாளும் திறமை என்று உங்கள் பெருமைகளால் நான் அசந்துபோகிறேன், இன்றைய இந்திய தேசத்தின் பிரச்சினைகளை கடவுளே வந்தாலும் சமாளிப்பது பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

உங்கள் தலையை காக்கும் உங்களது கவசம் உங்கள் திறமையை அதை அடக்கிய உங்களது அறிவையும் மூடி காத்து வருகிறதோ என்னவோ அமைதியாக நீங்கள் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனித்துப் பார்க்கும்போது உங்களது அணியில் உங்களுடன் ஈடுகொடுத்து உங்கள் திறமைக்கு ஏற்ற விதங்களில் உதவி வருகின்ற உங்களது அமைச்சரவை சகாக்களின் திறமைகளை குறிப்பாக திரு பிரணாப் முகர்ஜியின் திறமையை பாராட்டாமல் இருக்கவே முடியாது, திரு பிரணாப் முகர்ஜியின் அமைச்சராக பணியாற்றிய முன் அனுபவம் நிச்சயமாக நாட்டிற்கு மிகவும் அவசியம் என்பதை அவரது திறமைகள் மூலம் நாட்டு மக்களுக்கு குறிப்பாக விலைவாசி ஏற்றத்தில் எதிர்கட்சிகளை அவரது திறமையால் புள்ளிவிவரங்களையும் தற்போதைய நிலையையும் எடுத்துரைத்து சமாளித்த அவரது சிறப்பை நாடு நன்கு உணர்திருக்க வேண்டும்.

ஐயா, சமீபத்தில் செய்தியில் வெளியான முக்கிய செய்திகளில் ஒன்றாகிய அதிகபட்சமான பொறுப்புகளை அல்லது முடிவுகளை எடுக்கின்ற பொறுப்பு நடுவன் அரசு அல்லது மத்திய அரசின் அதிகாரத்திற்க்கு உட்பட்டதாக
மாற்றப்பட்டிருப்பதாக செய்தியில் கண்டேன், இத்தகைய வரைமுறைகள் நிச்சயம் மாநில அரசுகளின் தவறான போக்கிலிருந்தும், சில மாநிலங்களில் எதிர்பார்த்து போராடிவருகின்ற சுயமாநில ஆட்ச்சிக்கு இவ்வகையான சட்டங்களால் நிச்சயம் இடையூறுகள் ஏற்ப்படும், சுயமாநிலம் பெற்றாலும் பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த இயலாமல் போகவும் இத்தகைய நடுவன்அரசின் கொள்கைகளால் கட்டுக்குள் கொண்டுவர இயலும், ஆனால் இதர மாநிலங்களுக்கு இவ்வகையான சட்டங்களால் கால தாமதம் ஏற்ப்படுவதன் மூலம் இழப்புகளும் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளதே.

நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து மாநிலங்களையும் மக்களையும் காப்பது அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி என்றாலும் நடுவன் அரசு இப்பிரச்சினைகளை போர்கால அடிப்படையில் மும்முரமாக கட்டுக்குள் கொண்டுவரவேண்டும், இல்லையேல் சில மாநிலங்களில் ஊடுருவி இருக்கும் உள்நாட்டு தீவிரவாதம் அடுத்தடுத்துள்ள மாநிலங்களையும் வந்தடைய நேரும் என்பதை கருத்தில் கொள்வது அவசியம். சமீபத்தில் கடத்தப்பட்ட வெடிபொருட்கள் எங்கு யாரால் கடத்தப்பட்டது என்பதை உடனே கண்டுபிடிப்பதுடன் இனி அத்தகைய கவனக்குறைவுகள் ஏற்ப்படாமல் தடுக்கவும் வகை செய்யவேண்டும், அல்லது வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிடும். உங்களது விலாசம் அறியாத தபால் இலாகா இருக்க முடியாது என்றாலும் அத்தகைய தபால் உங்கள் கைக்கு வந்து சேருவது உறுதியா என்பதை என்னால் அறிய இயலாது அதனால் இங்கு பதிவு செய்கிறேன், உங்கள் கவனத்திற்கு மேற்கண்ட பிரச்சினைகளுக்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன் நீங்கள் ஆவன செய்வீர்கள் என்றும் நம்புகிறேன். நன்றி, வணக்கம்.

இவ்வண்ணம் கோரும்

ரத்னா
இந்திய பிரஜை.