Translate

8/29/2010

மகிந்த ராஜபக்சவுக்கு - கடிதம் 3


ஸ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்சே அவர்களுக்கு,

நான் இந்திய நாட்டின் பிரஜை, உங்களைப்பற்றி அதிகமான விவரங்களை அறிந்துகொள்வதற்க்காக கூகிள் மூலம் இணையதளத்தில்
சில தகவல்களை அறிந்தேன், அதில் உங்களது அரசியல் பிரவேசம் என்பது உங்கள் தந்தையின் மூலம் ஏற்பட்டது என்பதை அறிந்தேன் அதுமட்டுமில்லாமல் நீங்கள் படித்தது சட்டப்பிரிவு என்பதையும், இணையதளம் தவிர உங்களது விவரங்களை நான் அறிந்தவரையில் ஊடகங்களில் பெரும்பாலான சமயங்களில் செய்திகள் மூலம் அறிய முடிந்தவைகளில் மிகவும் பிரசித்தமானது தமிழ் தீவிரவாதிகளை அழிப்பதில் உங்கள் முயற்ச்சிகளும் அதில் நீங்கள் அடைந்த வெ(ற்)றி மட்டுமே, உள்நாட்டு தீவிரவாதிகளை அழித்துவிட்ட பெருமை உங்களது அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாக நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் கருதினாலும், என்னைப் போன்ற மனிதாபிமானிகளுக்கெல்லாம் உங்கள் சாதனை பெரிதாக தெரியவும் அதை சாதனையாக ஏற்கவும் ஒருபோதும் இயலாத காரியம்.

தீவிரவாதிகளை உள்நாட்டில் உருவாக்கிய பெருமை உங்கள் நாட்டில் வாழ்ந்த முன்னோர்கள் உங்களுக்கு வைத்துவிட்டு போன சொத்துக்கள், அவற்றையெல்லாம் மறந்துவிட்டு போராளிகளை ஒடுக்கி உங்களது ஆயுதங்களால் பல லட்சக்கணக்கான அப்பாவி உயிர்களை பலியாக்கி இன்று இலங்கையை உங்களது நாடாக்கிகொள்ளும் நய வஞ்சக செயலுக்கு சாதனை என்ற பெயர் வைத்து தற்புகழ்ச்சியாக பெருமைபட்டுக் கொள்ளும் அரசியல் நாடகத்தை ஒரு போதும் சாதனையாக ஏற்க்க இயலாது. தீவிரவாதிகளை அழித்ததில் நீங்கள் பெருமைபட்டுக் கொண்டாலும் அப்பாவிகளை கொன்று குவித்து இன்றுவரை நியாயம் நீதிகளை மறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் உங்களது வெறிச் செயல்களை மனிதாபிமானிகள் ஒருபோதும் ஏற்க்கமாட்டார்கள்,

நீங்கள் வணங்கும் புத்தர் சொன்ன கருத்துக்களுக்கு எதிர்மாறான காரியங்களை செய்து வருகின்ற உங்களை புத்தர் மன்னிப்பாரா, நீங்கள் கோவில்களுக்குச்சென்று வணங்குவது எந்த கடவுளை என்பது விளங்கவில்லை, எந்த கடவுளாக இருந்தாலும் மனிதனை மனிதன் கொன்று குவிக்கும் நியாயமற்ற போக்கை எந்த கடவுளும் ஏற்க்க மாட்டார் என்பது உறுதி, உங்களது வெறி பிடித்த ராணுவம் கொன்று குவித்த அப்பாவிகளின் ஆன்மாக்கள் ஒன்று சேர்ந்து உங்கள் அத்தனைபேரையும் நரகத்தில் தள்ளும் என்பது நிச்சயம். தீவிரவாதிகளை கொன்று வெ
(ற்)றிக் கொடி கட்டி இருக்கும் உங்கள் ஆட்சியில் ஒருதலை பட்ச்சமான அரசியல் இன்னும் நடைபெற்று வருகிறதென்பது, மிச்சமிருக்கும் அப்பாவிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைத்திருக்கும் உதவிகளை செயல்படுத்த விடாமல் தடை செய்து வருகின்ற ஈன போக்கை எந்தநாட்டிலும் நல்லதொரு மக்களின் தலைவன் செய்யமாட்டான்.

தமிழர்களை ஒட்டு மொத்தமாக சிறிலங்காவை விட்டு வெளியேற்றி சிங்களநாடாக்கும் முயற்ச்சியில் உங்கள் ஆட்சி நடத்தப்படுகிறது என்பதற்கு இதை விட
சிறந்த ஆதாரம் தேவை இல்லை, மனிதர்களை ஈவு இரக்கமின்றி அழிக்கும் மிருகங்களாக உலவி வருகின்ற, ரத்தம் குடிக்கும் பூமியாகிப்போன சிறிலங்காவில் இனி மண்ணிற்கு கீழே இருந்து மேல் நோக்கி வளரப்போவது மரங்களும் செடிகளுமாக இருந்தாலும் அவற்றிலிருந்து காய்கனிகள் விளைவதற்கு பதிலாக மனிதர்கள் விளைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை அப்படி விளையப்போகிற மனிதர்கள் மூலம் சிறிலங்காவின் தலையெழுத்து கூட மாற்றப்படலாம் ஏனென்றால் அத்தனை மனிதர்களை அநியாயமாக கொன்று பூமியில் விதைக்கபட்டிருக்கிறது, இனி மண்ணுக்கடியில் நீரும் நெருப்பும் காண இயலாது, ரத்தமும் எலும்புகளுமே கிடைக்கும். கொடியவர் வாழ்ந்த பூமியில் இனி மானிடர் பிறப்பாரோ என்பது சந்தேகமே. இதயம் இல்லாமல் பிறந்து விட்டவரோ நீர் என்று சிந்திக்க வைக்கிறது,

மரணம் கூட கிட்டே வருவதற்கு உம்மை கண்டு அஞ்சும் போலும், அசுரர்களை பற்றி படித்ததுண்டு தற்போது ராஜபக்சேவின் உருவில் மனித உருக்கொண்டு சிறிலங்காவில் வாழ்கிறது என்பதை அறியும்போது உம்மை சிங்கம் புலிபோல கூண்டுக்குள் பூட்டிவைத்து வேடிக்கை பார்க்கத் தோன்றுகிறது, மரணத்தின் போது உமது ராணுவத்தால் அழிக்கப்பட்ட அத்தனை ஆத்மாக்களும் ஒன்று சேர கூடி வந்து உம்மை கொண்டு சென்று நரகத்தில் சேர்க்கும் என்பது உமக்கு தெரியாத உண்மை.

இப்படிக்கு இந்திய மனிதாபிமானி

ரத்னா

பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களுக்கு - கடிதம் 2


இந்திய நாட்டின் பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களுக்கு,

இந்திய நாட்டின் கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒரு பிரஜை, வணக்கம், எனக்கு எப்போதுமே நமது நாட்டின் பிரதமர்களை பெரும்பாலும் மிகவும் பிடிக்கும், பிடிப்பதற்கு அவர்களிடம் இருந்த பல குணங்கள் காரணம், அது போலவே உங்களது பொறுமை, திறமை, முதுமை, எளிமை, சிறந்த நிர்வாகம், எதிர் கட்சிகளின் முரட்டாடங்களை சரிகட்டும் விதம், மேலைநாடுகளிடம் உறவு கொள்ளும் முறைகள், வெளிநாடுகளுடன் உறவுகளை சரியாக பயன்படுத்தும் சாதுர்யம், உள்நாட்டு தீவிரவாதங்களை சமாளிக்க எடுக்கும் முயற்ச்சிகள், மிகவும் முக்கியமாக பொருளாதாரத்தை சமன் செய்ய மேற்கொள்ளும் முயற்ச்சிகள், விலைவாசி ஏற்றத்தை கையாளும் திறமை என்று உங்கள் பெருமைகளால் நான் அசந்துபோகிறேன், இன்றைய இந்திய தேசத்தின் பிரச்சினைகளை கடவுளே வந்தாலும் சமாளிப்பது பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

உங்கள் தலையை காக்கும் உங்களது கவசம் உங்கள் திறமையை அதை அடக்கிய உங்களது அறிவையும் மூடி காத்து வருகிறதோ என்னவோ அமைதியாக நீங்கள் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனித்துப் பார்க்கும்போது உங்களது அணியில் உங்களுடன் ஈடுகொடுத்து உங்கள் திறமைக்கு ஏற்ற விதங்களில் உதவி வருகின்ற உங்களது அமைச்சரவை சகாக்களின் திறமைகளை குறிப்பாக திரு பிரணாப் முகர்ஜியின் திறமையை பாராட்டாமல் இருக்கவே முடியாது, திரு பிரணாப் முகர்ஜியின் அமைச்சராக பணியாற்றிய முன் அனுபவம் நிச்சயமாக நாட்டிற்கு மிகவும் அவசியம் என்பதை அவரது திறமைகள் மூலம் நாட்டு மக்களுக்கு குறிப்பாக விலைவாசி ஏற்றத்தில் எதிர்கட்சிகளை அவரது திறமையால் புள்ளிவிவரங்களையும் தற்போதைய நிலையையும் எடுத்துரைத்து சமாளித்த அவரது சிறப்பை நாடு நன்கு உணர்திருக்க வேண்டும்.

ஐயா, சமீபத்தில் செய்தியில் வெளியான முக்கிய செய்திகளில் ஒன்றாகிய அதிகபட்சமான பொறுப்புகளை அல்லது முடிவுகளை எடுக்கின்ற பொறுப்பு நடுவன் அரசு அல்லது மத்திய அரசின் அதிகாரத்திற்க்கு உட்பட்டதாக
மாற்றப்பட்டிருப்பதாக செய்தியில் கண்டேன், இத்தகைய வரைமுறைகள் நிச்சயம் மாநில அரசுகளின் தவறான போக்கிலிருந்தும், சில மாநிலங்களில் எதிர்பார்த்து போராடிவருகின்ற சுயமாநில ஆட்ச்சிக்கு இவ்வகையான சட்டங்களால் நிச்சயம் இடையூறுகள் ஏற்ப்படும், சுயமாநிலம் பெற்றாலும் பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த இயலாமல் போகவும் இத்தகைய நடுவன்அரசின் கொள்கைகளால் கட்டுக்குள் கொண்டுவர இயலும், ஆனால் இதர மாநிலங்களுக்கு இவ்வகையான சட்டங்களால் கால தாமதம் ஏற்ப்படுவதன் மூலம் இழப்புகளும் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளதே.

நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து மாநிலங்களையும் மக்களையும் காப்பது அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி என்றாலும் நடுவன் அரசு இப்பிரச்சினைகளை போர்கால அடிப்படையில் மும்முரமாக கட்டுக்குள் கொண்டுவரவேண்டும், இல்லையேல் சில மாநிலங்களில் ஊடுருவி இருக்கும் உள்நாட்டு தீவிரவாதம் அடுத்தடுத்துள்ள மாநிலங்களையும் வந்தடைய நேரும் என்பதை கருத்தில் கொள்வது அவசியம். சமீபத்தில் கடத்தப்பட்ட வெடிபொருட்கள் எங்கு யாரால் கடத்தப்பட்டது என்பதை உடனே கண்டுபிடிப்பதுடன் இனி அத்தகைய கவனக்குறைவுகள் ஏற்ப்படாமல் தடுக்கவும் வகை செய்யவேண்டும், அல்லது வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிடும். உங்களது விலாசம் அறியாத தபால் இலாகா இருக்க முடியாது என்றாலும் அத்தகைய தபால் உங்கள் கைக்கு வந்து சேருவது உறுதியா என்பதை என்னால் அறிய இயலாது அதனால் இங்கு பதிவு செய்கிறேன், உங்கள் கவனத்திற்கு மேற்கண்ட பிரச்சினைகளுக்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன் நீங்கள் ஆவன செய்வீர்கள் என்றும் நம்புகிறேன். நன்றி, வணக்கம்.

இவ்வண்ணம் கோரும்

ரத்னா
இந்திய பிரஜை.

8/27/2010

அன்புள்ள அப்பாவுக்கு - கடிதம் 1

அன்புள்ள அப்பாவிற்கு,

உங்கள் அன்பு மகள் எழுதும் கடிதம், நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன், நான் நலமா என்பதைப்பற்றி பிறகு தெரிவிக்கிறேன், கடந்த 11 வருடங்கள் தான் நாம் பிரிந்திருப்பதில் அதிக காலம் அல்லவா, இதற்க்கு முன் இத்தனை வருடங்களை நான் இல்லாமல் நீங்களும் நீங்கள் இல்லாமல் நானும் வாழ்ந்தது இல்லை, இத்தனை வருட காலமாக உங்களுக்கு கடிதம் எழுதாமல் இருந்துவிட்டதால் உங்களை மறந்திருந்தேனா என்று நீங்கள் கேட்பதும் நினைப்பதும் எனக்கு புரிகிறது, உங்களை நான் மறப்பதென்பது எனக்கு உடல் நலமில்லாமல் படுத்தப்படுக்கையில் சுய நினைவை இழந்து கிடக்கும்போதும் கூட உங்கள் நினைவும் அம்மாவின் நினைவு மட்டும்
இல்லாமல் நின்று விடாது என்பது உங்களுக்கே தெரியும், பிறகு ஏன் கடிதம் எழுதவில்லை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் அல்லவா, நியாயமான கேள்வி. இதற்க்கு நான் என்ன பதில் சொல்வேன் என்பது உங்களுக்கே தெரியும்.

தினம் தினம் என் நினைவுகளில் உங்களிடம் உறவுக்கொள்வதனால்தான் கடிதம் எழுத தனியாக நேரம் ஒதுக்கவில்லை. அப்பா உங்களுக்குத் தெரியுமா இப்போதெல்லாம் நான் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதுகிறேன், நீங்கள் என்னுடன் இருந்தபோது நான் இவற்றை எழுத துவங்கியிருந்தால் எனக்கு இவற்றின் நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்திருப்பீர்கள், ஆனால் உங்களையே என் மானசீக குருவாக எண்ணி தற்போது தப்பும் தவறுமாக எழுதுகிறேன், எனக்குப் பெரிய கதையாசிரியராக வேண்டுமென்பது எண்ணமில்லை, ஆனால் உங்கள் ரத்தம் என் உடம்பிலும் ஓடுவதாலோ என்னவோ உங்களது விட்ட குறை தொட்ட குறையோ, ஏதோ ஒன்று என்னை எழுத சொல்கிறது நான் என்னையும் அறியாமலேயே இவைகளை எழுதுகிறேன்.

உங்களைபோல இலக்கணம் அறிந்து எழுதும் கவிதைகளை நான் எழுதுவதே கிடையாது, நீங்கள் பாரதிதாசனின் கவித்துவத்தையும் கவிஞர் சுரதாவின் இனிய கவிதைகளையும் கம்பதாசனின் கவிதை நயத்தையும் நேரில் ரசித்து அவர்களிடமிருந்து நிறைய கற்றும் இருந்தீர்களே, உங்களுக்கு கிடைத்த அந்தஅறிய வாய்ப்புகளெல்லாம் எனக்கு கிடைத்துவிடுமா, ஆனாலும் என் அப்பாவைப்போல எனக்கும் தமிழின் மீது தீரா மோகம் ஏற்பட்டுள்ளதற்கு நீங்கள்தானே காரணம், திடீரென்று ஏற்பட்ட கருத்துப் பிரிவு நம் இருவரையும் சிலகாலம் நயவஞ்சகம் செய்துவிட்டது, அதுவும் கூட நன்மைக்குதான் போலும், இல்லையென்றால் உங்களது திடீர் மறைவு என்னை சிந்தம் கலங்க செய்திருக்கும். உங்களது உயிரற்ற உடல் கிடத்தப்பட்டு இருந்தபோது என் நிலை நீங்கள் அறிந்திருக்க முடியும், ஏனென்றால் அடிக்கடி அம்மாவிடம் நாம் இறந்துவிட்டால் நமது மகள் துயர் எல்லையற்றதாகிவிடும் என்று சொல்லுவதுண்டு என்று அம்மா என்னிடம் சொன்னார், அதே போன்ற நிலையில் தான் நான் பல காலம் துவண்டு கிடந்தேன், இபோது மட்டுமென்ன அடிக்கடி நாம் மூவரும் வாழ்ந்த காலங்களில் திரும்ப திரும்ப என்னையும் அறியாமல் நுழைந்துவிட்டு நேரம் போவதை அறியாமல் கண்கள் திறந்த நிலையில் அந்த உலகில் உங்களுடன் வாழுகிறேனே.

தீர்க்கதரிசியைப் போல நீங்கள் என்னைப்பற்றி இவ்வாறெல்லாம் நடக்குமென்று சொன்னவை
கள் நடந்து கொண்டிருக்கிறது, உங்கள் மறைவிற்குப் பின் நான் எப்படி வாழ்வேன் என்பதை நீங்கள் ஏற்கனவே சொன்னது போலத்தான் நடந்து கொண்டிருக்கிறது, என்ன இருந்தாலும் உங்களைப்போன்ற மன வலிமை எனக்கு கிடைக்கவில்லை, உங்கள் மனமும் அம்மாவின் மனமும் இந்த உலகைவிட மிகப் பெரிது என்பதை நம்மை அறிந்தவர்கள் அறிவார் அல்லவா, உங்கள் நண்பர்களில் இன்னும் இருவர் மட்டுமே இருக்கின்றனர் மற்ற அனைவரும் காலமாகிவிட்டனர். அம்மாவும் நீங்கள் காலமாகிய 1.1/2 ஆண்டில் காலமாகிவிட்டார். என் மனது எப்போதும் என்னிடம் 'நீங்கள் இருவரும் என்னுடன் இருந்து கொண்டே இருக்கிறீர்கள்' என்றுசொல்கிறது.

நீங்கள் எங்கே இருந்தாலும் நிச்சயம் சந்தோஷமாக இருப்பீர்கள் என்பதில் எனக்கு துளியேனும் சந்தேகமே கிடையாது. நானும் உங்களுடன் வந்து இணையும்வரை கடிதம் மூலம் நமது உறவு என்றென்றும் தொடரும்.

உங்களை என்றும் மறவாத
உங்கள் அன்பு மகள்,
ரத்னா .

8/23/2010

இனி தினமொரு கடிதம்


அந்த காலத்தில் உள்ளுராக இருந்தாலும் வெளியூராக இருந்தாலும், கடிதம் மூலம் மட்டுமே ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றங்கள் செய்தாகவேண்டும்,அப்போதைய தொலைபேசி என்பது ட்ரன்க் கால் புக் செய்துவிட்டு காத்து கிடக்கவேண்டும், தொலைபேசிகள் எங்கோ ஒரு வீட்டில்தான் இருக்கும், தொலைபேசித்தான் எங்கோ ஒருவரின் வீட்டில் இருக்கிறது என்றால், கார் கூட இரண்டு வகைகள்தான் ஒன்று அம்பாசிடர் மற்றொன்று பியட், ப்ளை மௌத் ஒருசிலர் மட்டுமே உபயோகிப்பார்கள், நிறம் கருப்பு இல்லையென்றால் வெள்ளை மட்டுமே, என் அப்பா சொல்லுவார் சென்னையில் மவுன்ட் ரோட்டில் எந்த கார் சென்றாலும் அதன் எண்ணை வைத்து இவர்தான் செல்லுகிறார் என்று சொல்லிவிட முடியுமாம், அந்த அளவிற்கு குறிப்பிட்ட பெரும் புள்ளிகள் மட்டுமே கார் உபயோகித்து வந்ததால், கடிதம் மட்டுமே தகவல் பரிமாற்றத்தின் மிக முக்கிய வெகுஜன உபயோகத்தில் இருந்தது, 1980களில் வளைகுடா நாடுகளுக்கு சென்னையிலிருந்து கடித போக்குவரத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து நாட்கள் முதல் ஒரு வாரம்வரை ஆகும்.

அவசரத்திற்கு தபால் இலாகாவின் தந்தி இருந்தது, தந்தி என்றாலே வயிற்றை கலக்கும் செய்தி என்றொரு பயம் எப்போதுமே மக்களுக்கு உண்டு. இன்றைக்கு முப்பது ஆண்டுகளில் தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி அசுர வளர்ச்சியைவிட மிஞ்சி நிற்கிறது. அடுத்த இருபது ஆண்டுகளில் இதன் வளர்ச்சி நிச்சயம் அடுத்த உலகத்தை எட்டிவிடுவது உறுதி. ஏனையத் துறைகளைவிட தகவல்துறை மட்டுமே இணையற்ற வளர்ச்சியடைந்துள்ளது, உலகமயமாக்கபட்டதன் விளைவாக வெளிநாடுகளில் உள்ள அத்தனை கார்களும் நமது
நாட்டிலேயே உற்பத்தியாகி குறைந்த விலை, விதவிதமான நிறம், அமைப்பு, வசதிகள் என்று போட்டி போட்டுக்கொண்டு இந்தியா வாகன உற்பத்தியிலும் வனப்படைந்துள்ளது, இதனால் சாதாரண மனிதனும் கார் வாங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது,

வளைகுடாநாடுகளுக்கு நான் சென்ற போது அங்கே ஓடுகின்ற விதவிதமான அழகிய வெளிநாட்டின் சொகுசு கார்களை கண்டு அதிலேறி பயணித்து அதிசயித்திருக்கிறேன், அப்போது 1982 நமது நாட்டி
ல் பெரும் போராட்டத்திற்குப் பின்னர் மாருதி 800 மட்டுமே தயாரிப்பு துவங்கி இருந்தது, மாருதி கார் நிருவனம் இந்தியாவில் உற்பத்தியை துவங்கவே முடியாதோ என்று முதலில் நினைக்கத்தோன்றியது, மாருதி கார் [SUZUKI] ஜப்பானிய நிறுவனத்துடனான மத்திய அரசின் ஒப்பந்தத்தில் அந்நிறுவனத்துடன் சஞ்சைகாந்திக்கு ஊழல் உள்ளது என்ற எதிர்கட்ச்சிகளின் குற்றச்சாட்டு தீர்க்கப்பட்டு மாருதி கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு குறைந்த விலைக்கு விற்ப்பனைக்கு வருவதற்கு பெரிய போராட்டமே நடத்தப்பட்டது, அதாவது பியட் கார் என்கின்ற இத்தாலி நிறுவனத்தின் கிளையாக மும்பையில் 1905 ஆம் ஆண்டு அறிமுகபடுத்தபட்டது, அதற்குப் பிறகு அதிக பல வருட இடைவெளிக்கு பின்னர், 1982 மாருதிகார் சேவை இந்தியாவில் தொடங்கியது.போக்குவரத்துத்துகும் தகவல் தொடர்புக்கும் மக்களுக்குமான தொடர்பு மிகவும் அதிகம், ஒன்றையொன்று சார்ந்திருப்பது தான் அதற்க்கு முக்கிய காரணம். இன்றைய காலத்தில் கடிதபோக்குவரத்து மக்களிடையே மிகவும் குறைந்திருந்தாலும் அதற்கு பதிலாக கைபேசிகள் மனிதர்களின் வாழ்க்கையை அபகரித்துவிட்டிருக்கிறது, அதிகமாக எது கிடைத்தாலும் அதன் மதிப்பை நம்மால் உணர முடியாது என்பதை இன்றைய கைபேசி புழக்கம் நமக்கு சொல்லும் பாடம், குரியர் சர்வீஸ் தபால்துறையைவிட துரிதமாக செயல்படுவதினால் தபால்களின் போக்குவரத்து மிகவும் எளிதாகிவிட்டது. இன்னும் கொஞ்சம் மேலே போனால் மெயில் வசதிகள் அயல்நாடுகளை மணித்துளிகளில் கைக்குள் கொண்டுவந்துவிடுகிறது இதன் உச்சகட்ட விரைவு சேவை.

கடிதம் எழுதும் முறைகள் எல்லாம் மறந்துவிடாமல் இருக்க, விலாசம் தெரியாத ஆனால் கடிதமெழுத விரும்பும் நபர்களுக்கு இனி தினம் ஒரு கடிதமாக எனது பதிவில் எழுத விரும்புகிறேன், நான் கடிதம் எழுதவிருக்கும் நபர்கள் என் நண்பர்கள், நண்பர்கள் அல்லாதோர், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், உலகத்தலைவர்கள், மறைந்த தலைவர்கள், மறைந்த நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இன்னும் நிறைய பேர் இந்த வரிசையில் உண்டு. இந்த வரிசைக்கு முடிவே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த வரிசையில் முதல் முதலாக நான் கடிதம் எழுதவிருக்கும் நபர், என் அப்பா, என் தகப்பனார்.

8/20/2010

ராஜுவின் கதை - இறுதி பாகம்

முதல் அண்ணன் காலமாகிவிட மீதம் ராஜுவையும் சேர்த்து நான்கு பேர் சகோதரர்கள் ஒருவருக்கும் அப்போது திருமணமாகவில்லை. அப்போது தொலைபேசி அலுவலகம் தனியார் நிருவனமாக்கப்படவில்லை, ராஜுவின் சகோதரரில் ராஜுவிற்கு மூத்த சகோதரர் சென்னை தொலைபேசி அலுவலகத்தில் அரசு பணியில் இருந்து வந்தார், ராஜுவின் மூத்த சகோதரர் வேலையை விட்டு விடாதே, திரைப்பட தயாரிப்பிலோ இயக்குனராகவோ கிருஷ்ணன் முன்னுக்கு கொண்டு வருவார் என்கின்ற உன் நம்பிக்கையை நம்பி அரசு பணியை விட்டு விடாதே என்று எடுத்துக் கூறியுள்ளார், ராஜுவின் இரண்டு தம்பிகளில் மூத்தவர் ரயில்வேயில் எழுத்தராக பணி செய்து வந்தார், [கடைசி தம்பியும் பிற்காலத்தில் ரயில்வே ஊழியராக பணிபுரிந்தார்]. அவருக்கு அப்போதைய தென்னிந்திய ரயில்வேயின் பொதுமேளாளர் மிகவும் நெருக்கம் என்பதால் ரயில்வேயில் பணியமர்த்திவிடுவதாக ராஜுவிடம் பல முறை சொல்லியும் இயக்குநர் கிரிஷ்ணரின் வாக்குறுதியின் மீதிருந்த நம்பிக்கையால் எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு மீண்டும் மீண்டும் திரைப்பட மோகத்தினால் இழுக்கப்பட்டு கிருஷ்ணனே கதி என்று நம்பிக்கிடந்தார் ராசு.

ஆனால் நம்பிக்கை எந்த அளவிற்கு உதவி செய்தது, கிருஷ்ணர் தனக்கிருந்த நண்பரும் தொழில் பார்ட்னருமான பஞ்சுவிடம் பீம்சிங்கை அறிமுகப்படுத்தினார், பீம்சிங் எங்கிருந்து திடீரென்று வந்தார், அவரும் அடுத்த தெருவில் வசித்தவர், பீம்சிங் ராசுவைப்போல இல்லை, தொழில் நுணுக்கத்தை பிடித்துக்கொண்டு கிருஷ்ணனின் உதவியுடன் திரைப்பட இயக்குனராகிவிட்டார், இயக்குனராவதற்கு உதவிய கிருஷ்ணன் பீம்சிங்கை தனது தங்கைக்கு திருமணம் முடித்து வைத்து சொந்தமாக்கிவிட்டார். ராஜுவின் நிலை என்ன, கேள்விக்குறிதான். பஞ்சுவும் பீம்சிங்கும் [பீம்சிங்கின் தாயார் தெலுங்கு பிராமணர்] பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள், கிருஷ்ணரின் தகப்பனாரும் பிராமணர், ஆக பிராமணர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு தங்களை முன்னேற்றிக்கொண்டு ஒருவருக்கொருவர் சொந்தமாக மாறிப் போயினர். ராசு அடிப்படையில் கிறிஸ்த்துவர், அவரை உயர்விற்கு கொண்டுவந்து அதனால்
அவர்களுக்கு ஆகப்போவது என்ன என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்திருக்கலாம்.

ஏமாளி ராசு, பிழைக்கத்தெரியாதவர், அப்பாவி அப்போதும் இவற்றையெல்லாம் உணரவில்லை, கிருஷ்ணர் தனக்கு நிச்சயம் உதவிவிடுவார் என்று அவரது வாக்கை நம்பி காலமெல்லாம் காத்திருந்தார், திரு வாசு அவர்களால் தயாரிக்கப்போகின்ற திரைப்படம் பெற்றால்தான் பிள்ளையா, அதில் நிச்சயம் நல்ல வசூல் கிடைக்கும் அதன் மூலம் அந்த தயாரிப்பாளரிடம் சொல்லி அடுத்த திரைப்பட வாய்ப்பை பெற்று தருவதாக இறுதியாக வாக்களித்தார்
ராஜுவிடம் கிருஷ்ணன், ஆனால் நடந்தது என்ன, யாரும் எதிர்பாராத வகையில் எம்.ஆர்.ராதா அவர்கள் திரு. எம்.ஜி.ஆரை சுட்டுவிட பெற்றால்தான் பிள்ளையா திரைப்படம் நன்றாக ஓடி வசூலைக்கொடுத்தாலும் தயாரிப்பாளர் திரைப்படம் தயாரிக்கும் வாய்ப்பை அத்துடன் இழந்துவிட்டார். இதற்கிடையில் ராசு வேறு அரசுபணிகளில் சேர்ந்தார், ஆனால் ஒவ்வொரு முறை கிருஷ்ணன் ஏதோ ஒருதிரைப்படத்தை இயக்குவதை அறிந்து அந்த வேலையை நிறுத்திவிட்டு கிருஷ்ணன் இயக்கும் இடத்திற்கு சென்றுவிடுவார்.

மனிதர்கள் மட்டும் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்தாலும் காலம்
எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, அரசு வேலை கிடைப்பது குதிரை கொம்பானது, சகோதரர்கள் எல்லோரும் குடும்பஸ்த்தர்களாகி விட்டனர், ராஜுவின் நிலைமையைப் கேட்கவா வேண்டும், ராசுவை நம்பி ஒரு பெண் வாழ்க்கை பட்டார், குழந்தையும் ஆனது, காப்பாற்ற இயலாமல் குடும்பத்தில் கஷ்டம், கிருஷ்ணன் என்ன செய்தார், எல்லா பொறுப்பையும் பஞ்சுவின் மேற்பார்வையில் வைத்துக் கொண்டார், கிருஷ்ணரின் குடும்பத்தினரின் பார்வையில் ராசு எடுபிடி, ராசு கிருஷ்ணருக்கு பெண்களைக் கூட கூட்டி வந்து கொடுப்பவன் என்கின்ற எண்ணம். ராஜுவும் கிருஷ்ணரும் சந்திப்பது அவரது (பஞ்சு உட்பட) குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பிடிப்பது இல்லை,

ஆனால் நடந்தது என்ன கிருஷ்ணன் தனக்கொரு வைப்பாட்டியை தானே தேடிக்கொண்டார், ஆனால் அவர்கள் நினைத்தது அந்த வைப்பாட்டியையும் ராஜுதான் கூட்டி வைத்தார் என்று, ஆனால் வைப்பாட்டி என்ன செய்தார் அந்த குடும்பம் ராசுவைப்பற்றி என்ன நினைக்கிறது என்பது அறியாதவர், உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு என்பதைப்போல, ராஜுவிற்கு கிருஷ்ணன் செய்யவிருந்த உதவிகளையெல்லாம் தன்வசம் திருப்பிக்கொண்டுவிட்டார், பிழைக்கத் தெரிந்த பெண். அப்போதும் ராஜுவிற்கு கிருஷ்ணரின் மீதிருந்த நம்பிக்கையும் அன்பும் எவ்விதத்திலும் குறையவே இல்லை என்பதுதான் ராஜுவின் குடும்பத்தாற்க்கு ஆச்சரியமான விஷயம், இப்படியும் ஒருவன் உலகில் இருப்பானா, என்று கேட்கின்ற அளவிற்கு உலகின் தில்லு முல்லுகளைப் பற்றி அக்கறை கொள்ளாதவராக இருந்தார் ராசு.

வாழ்க்கையில் கஷ்டங்களின் எல்லைக்கே வந்தாகிவிட்டது, இனியும் படுவதற்கும் சுமப்பதற்கும் உலகில் வேறொரு கஷ்டம் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார் ராசு, அவரைப்பற்றி அறிந்தவர்கள் கூறுவது, கலைஞரை உங்களுக்கு தெரியுமே சென்று பாருங்களேன் ஏதாவது உதவி செய்வார், (சிவாஜி) கணேசனை உங்களுக்கு தெரியுமே போய் பார்க்கக் கூடாதா ஏதாவது உதவி செய்வார், இப்படி ராஜுவைப் பற்றி நன்கு அறிந்த அவரது நண்பர்களும் மற்றவர்களும் பலமுறை கூறுவதுண்டு, எத்தனையோ அன்றைய பிரபலங்களை ராஜுவிற்கு தெரிந்திருந்தும் ராசு நம்பியது இயக்குநர் கிருஷ்ணரை மட்டுமே கடைசிவரையில், வாக்குறுதி கொடுப்பவர்கள் மறந்துவிடுவது வாடிக்கைதானே, கிருஷ்ணரும் அப்படித்தானோ அல்லது அவரை சுற்றி இருந்தவர்களின் தந்திரமோ, உண்மைகள் எப்போதும் மவுனம் சாதிக்கும் அல்லவா, ஆனால் கிருஷ்ணர் கடைசிவரையில் தனது வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட தன்னையே நம்பி காலமெல்லாம் காத்துக் கிடந்த ராஜுவிற்கு செய்யவேயில்லை என்பது வேதனை ஏற்ப்படுத்தும் செய்தி. ஆனால் ராஜுவின் நம்பிக்கை மட்டும் சற்றும் குறையவே இல்லை. வறுமை, வியாதி, பசி, பட்டினி, பிச்சை, குடிசை, வயோதிகம், மரணம் இவை எல்லாம் ராஜுவின் வாழ்க்கையை தலை கீழாய் மாற்றி போட்ட போதும் அந்த பாழாய்ப் போன 'நட்பு, நேர்மை, நம்பிக்கை, நண்பர்கள்' என்கின்றவைகளை ராசு கட்டிகாத்தவிதம், மதித்தவித
ம் என் கண்களில் என்றும் தீராத கண்ணீரையும் மனதினில் ஆறாத் துயரத்தை கொடுத்துவிட்டது.

ராஜுவிற்கு என் சிரம் தாழ்ந்த அன்பு என் உயிருள்ளவரை என்றென்றும் உண்டு, அவரது நேர்மை பண்பு, வறுமையிலும் உதவி என்று வலியோரை நம்பி போகாமல் வறுமையைக் கூட தன் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே எண்ணி ஏற்றுக்கொண்டு பொ
ருமையாய் வாழ்ந்த விதம் என் நெஞ்சை விட்டு என்றும் அகலாத ரணங்கள். அன்னாரின் ஆத்மாவிற்கு என் அஞ்சலிகள் என்றும் உரித்தாகுக.