Translate

6/23/2010

மழை படுக்கை

குன்னூரில் இருந்த கல்லூரியில் சேர்ந்த பின்பு அங்கிருந்த அவர்களுக்குச் சொந்தமான விருந்தினர் மாளிகையில் வசதி மிகுந்த அறையில் தங்கி இருந்தான் பிரபு, அவனது பெற்றோர் இருவரும் காலை உணவு சிங்கப்பூரில் என்றால் மதிய உணவு கெய்ரோவில், இரவு உணவு ஆஸ்திரேலியாவில் என்று வாழ்த்து வருபவர்கள். எங்கே எப்படி வாழ்ந்தாலும் மகனின் படிப்பும் வாழ்க்கையும் இந்திய கலாசாரத்தை பின்பற்றித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர்.

காலை ஒன்பது மணிக்கு கல்லூரி என்பதால் எட்டு மணிக்கு கிளம்பி நடப்பது அவனது வழக்கம், பெரும்பாலும் கல்லூரிக்குச் செல்லும் போது நடந்து செல்வதையே விரும்பினான், சுடாத வெய்யலும் திடீரென்று கொட்டும் சாரல் மழையும் பிரபுவிற்கு மிகவும் பிடித்தது, அன்றைக்கும் அப்படித்தான் இயற்க்கை வாரி இறைத்திருந்த அழகை கண் குளிர ரசித்த வண்ணம் இடையிடையே வரும் வாகனங்களுக்கு ஒதுங்கி வழிவிட்டு நடந்து கொண்டிருந்தவன்,பழங்குடியினர் ஒரு சிலரைத் தவிர வீதியில் நடந்து செல்பவர்கள் மிகவும் குறைவு, வீதியை ஒட்டி இருந்த அழகான பூஞ்செடிகளும் குரோட்டன் செடிகளும் அந்த இடத்தை நந்தவனமாக்கியது அந்த இடத்தை கடக்கும்போது லேசாக சாரல் மழை கொட்டத் துவங்கியது, குளிர்ந்த மேகம் லேசான காற்றில் மிதந்து வந்து முகத்தின் மீது உரசிச் சென்றது, சாரல் மழையில் நனைவதற்கு பிடிக்கும் என்றாலும் கல்லூரிக்குச் செல்லும் சமயத்தில் உடை நனைந்து விடக் கூடாது என்பதற்காக சற்று தூரத்தில் இருந்த சிறிய வீட்டின் முன் ஓடிச் சென்று நின்று கொண்டான் பிரபு.

சற்று தூரத்தில் தெரிந்த அழகிய பூங்காவிலிருந்த இரும்பு நாற்காலியில் யாரோ உட்கார்ந்திருப்பது தெரிந்தது, மழைச் சாரல் சற்று வேகமாக அடிக்கத் துவங்கியது, அங்கு உட்கார்ந்திருந்தவர் அங்கிருந்து நகராமல் அங்கேயே மழையில் நனைந்துகொண்டு உட்கார்ந்திருப்பது பிரபுவிற்கு சற்று ஆச்சரியத்தை கொடுத்தது, மழைச்சாரலின் வேகம் அதிகரித்தவுடன் அங்கு உட்கார்ந்திருந்தவர் எழுந்து மழை நீரை வீசி விளையாடிக்கொண்டு நானைந்து நிற்ப்பது தெரிந்தது , உற்று பார்த்தபோது அது ஒரு பெண், சாரல் ஓய்ந்தவுடன் கல்லூரிக்குச் சென்றுவிட்டான்.

காலை மாலை இரு வேளைகளிலும் வீதியில் போகும் சமயத்தில் அதே இடத்தில் அந்தப் பெண் உட்கார்ந்திருப்பதை பிரபு கவனிக்கத் தவறுவதில்லை, மழைக்காலம் துவங்கியது, பிரபு காரில் கல்லூரிக்குச் செல்லத் துவங்கினான். அப்போதும் கடும் மழையில் அந்தப் பெண் அதே இடத்தில் உட்கார்ந்து அல்லது நின்றுகொண்டிருந்தாள், ஒருநாள் மாலை இருட்ட ஆரம்பித்திருந்தது, மழை ஓயவில்லை, கல்லூரியிலிருந்து கிளம்புவதற்கு தாமதமாகியது, காரில் அதே வழியாக வந்துக் கொண்டிருந்த பிரபுவின் கண்களின் அந்த பெண் கிழே வீழ்ந்து கிடப்பது தெரிந்தது.

சிறிய வீட்டிலிருந்த நடுத்தர வயது பெண்ணை காரிலிருந்தவாறே கூப்பிட்டு அந்தப் பெண் மழை நீரில் விழுந்து கிடப்பதை காண்பித்போது பெண் விழுந்து கிடந்த இடத்திற்கு ஓடிச் சென்று தூக்கினாள், அவளுடன் சென்ற பிரபுவும் கைத் தாங்கலாக அந்த பெண்ணை பிடித்து வந்து காரில் பின்னால் படுக்க வைத்து உதவிய பெண்ணையும் உடன் அழைத்துக் கொண்டு அருகிலிருந்த மருத்துவமனையில் கொண்டு சேர்த்தான்,

பிரபு படிக்கும் கல்லூரியில் வேறு பாடப்பிரிவில் படித்து வந்த ஜமுனாவிற்கு மழை மிகவும் பிடித்தது, அதற்காகவே அங்கு இருந்த கல்லூரியில் சேர்ந்தாள், தொடர்ந்து மழையில் நனைவதால் நுரையீரல் நிமோனியாவால் தக்கபட்டிருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் இருந்த ஜமுனாவிற்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு சகஜ நிலைக்கு கொண்டுவருவதற்கு மருத்துவர்கள் போராடிக்கொண்டிருந்தனர். இடையே ஜமுனாவிற்கு பெற்றோர் இல்லை என்பதால், ஜமுனாவின் கார்டியன் அண்ணனுக்குத் தகவல் அனுப்பட்டு ஜமுனாவின் அண்ணன் ஒருவாரம் விடுப்பில் வந்து பார்த்துவிட்டு சென்றுவிட்டான். ஜமுனா சகஜநிலைக்குத் திரும்புவதற்கு ஒரு மாதத்திற்கும் மேலாகியது.

இனி மழையில் நனைந்தால் உடல்நிலையை தேற்ற வாய்ப்புகளே கிடையாது என்று கூறி மாத்திரைகளை கொடுத்து வீட்டிற்கு அனுப்பினர் அழகிய பெண் ஜமுனா இருபது வயது, படிப்பில் கெட்டிக்காரி, பாடுவதிலும் வீணை வாசிப்பிலும் திறமைசாலி, ஜமுனாவை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துவிடும் கவர்ச்சி, பிரபுவிற்கு ஜமுனாவை பிடித்துப் போனதில் ஆச்சரியம் இல்லை, பணம் மிகுந்திருந்தாலும் இரக்கமும் தன்னடக்கமும் நிறைந்திருந்த பிரபுவின் கருணையுள்ளம் ஜமுனாவிற்கு மிகவும் பிடித்துப் போனது.

அந்த அழகியப் பூங்காவில் இரும்பு நாற்காலியின் அருகில் கான்க்ரீட் போட்டு மூடாத மண் படுக்கையில் நிரந்தரமாக மழையில் நனைந்தனர் இருவரும்.