Translate

6/06/2010

கலைஞர்களின் வாழ்க்கை


நகைச்சுவை நடிகர் திரு கவுண்டமணி அவர்கள் காலமானதாக சொல்லப்படும் தகவல் உண்மைதானா என்பது தெரியவில்லை வலையில் தேடியபோது உர்ஜிதமாகாத செய்திகளைத்தான் காணமுடிகிறது, சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கபட்டார் என்றும் பின்னர் காலமானதாகவும் செய்திகளை கேள்விகளாக்கி உள்ளனர், அப்படி அவர் காலமாகவில்லை என்றால் மிகவும் நல்லது காலமானார் என்றால் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன், தனது அற்புதமான நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்து என்றும் வாழும் கலைஞனுக்கு மரணம் கிடையாது, காலம் கடந்து வாழும் அவர்களது திரைப்படங்களும் நடிப்பும் திரைப்பட வரலாறுகளில் நீங்கா இடம் பிடிக்கின்றது,

கவுண்டமணிக்கு
முன்பிருந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன், நகைச்சுவையில் இரண்டு அர்த்தமுள்ள வசனங்களை நகைச்சுவை என்ற பெயரில் பேசி நடித்தபோது திரைப்படத்தை பார்ப்பவர்களுக்கு அருவருப்பை மட்டுமே கொடுத்தது, அவருக்கு அடுத்து வந்த கவுண்டமணி செந்தில் ஜோடிகள் பல வெற்றித் திரைப்படங்களுக்கு காரணமாக இருந்தவர்கள், சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் வசனங்களை தங்களது நடிப்பின் மூலம் மக்களின் மனதில் ஆழமாக பதிய செய்தவர் கவுண்டமணி. வெகு விரைவிலேயே திரைப்படத்தில் நடிப்பதை குறைத்துக் கொண்ட போது சற்று ஏமாற்றமாகவே இருந்தது,

பல
நடிகர்கள் குறிப்பாக நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கையில் குடிப்பழக்கம் பல அரிய கலைஞர்களின் உயிருக்கும் வாழ்க்கைக்கும் எமனாக இருந்து வருவதை யாரும் மறுக்க முடியாது, நகைச்சுவை நடிகர்களின் சொந்த வாழ்க்கை பெரும்பாலும் சோகம் நிறைந்து இருப்பதாக கூறப்படுகிறது, காலம் சென்ற சந்திரபாபு, நாகேஷ், அசோகன், சுருளிராஜன், கண்ணதாசன் இன்னும் பல கலைஞர்களை சோகமும் குடியும் அழித்ததாக செய்தி உண்டு.

கலைஞர்களின்
வாழ்க்கையில் மது மாது இரண்டும் அவர்களது முன்னேற்றம், பணம், நிம்மதி ஆகியவற்றை அழித்துவிடுகிறது, ஒரு காலத்தில் புகழின் உச்சாணியில் இருந்தவர்களை இந்த இரண்டும் ஒட்டு மொத்தமாக சிதைத்துவிடுவதை நம்மால் கண்கூடாக காணமுடிகிறது. தங்களது தவற்றை உணர்ந்து சுதாரித்துக்கொண்டு விழிப்படைவதற்க்குள் மது அவர்களின் உடலின் முக்கிய பாகங்களை முற்றிலுமாக செயலிழக்கச் செய்துவிடுவதும் கண்கூடாக காணும் உண்மை.

கலைஞர்களின்
வாழ்க்கை என்பது கயிற்றின் மீது நடந்து செல்லுவது போன்றது, கரணம் தப்பினால் மரணம் என்பதே அதன் விதி. வாழ்க்கையை திட்டமிட்டு அதன்படி நடக்கத் தவறுவதனால் கூட இத்தகைய சோக முடிவுகள் ஏற்ப்படுவது உறுதி.