Translate

6/01/2010

தெரியாத பிரச்சினைகள்

பதிவு எழுத ஆரம்பிச்ச அப்புறம் எழுத நினைக்கும் எண்ணங்களையும் கருத்துக்களையும் எழுதுவதற்கு எதற்கு யோசிக்க வேண்டும், கூகிள் புண்ணியத்துல இந்த வாய்ப்பை இலவசமாக கொடுத்திருக்கும் பெரியமனசுக்குத்தான் முதலில் நன்றிகளை சொல்ல வேண்டும். தெரியாத அல்லது அரைகுறையாக கேட்டறிந்த செய்திகளை எழுதுவதற்கு தயங்குவது உண்டு, அதே போல என் கருத்தையும் எழுத்தையும் யாராவது ஆமோதித்தால் மட்டுமே திருப்தி அடைவதும், எல்லோருக்கும் திருப்தி ஏற்ப்படும் வகையில் மட்டுமே எழுதுவதும் நம்மை முடமாக்கும் உத்திகள். நமது இயல்பை வெளிக்கொணர வாய்ப்பளிக்காமல் போய்விடும் என்பதும் எனது உறுதியான நம்பிக்கை.

இத்தனை பெரிய விளக்கவுரை எதற்கு என்றால் எனக்கு ஈழம் பற்றிய சிலசெய்திகள், ஊடகத்தில் ஒளிபரப்பப்படும் செய்திகளை மட்டுமே பார்த்துவிட்டு கருத்துரை அல்லது பதிவு எழுதுவதை நான் விரும்புவதில்லை, ஈழம் பற்றிய முழுமையான ஆராய்ச்சியை செய்துவிட்டு பதிவு எழுதுவதும் தற்போதைக்கு இயலாத ஒன்று. ஈழத் தமிழர்களின் வேதனைகளை அறியாமல் இல்லை, நமது வருத்தத்தை தெரிவிக்க அனுதாபம் காண்பித்து எழுதுவதில் பிரயோசனம் இருப்பதாக நான் கருதவில்லை, என்றாலும் பதிவு எழுதும் அளவிற்கு அதனைப்பற்றிய முழு விவரங்களை சேகரித்து உணர்ந்து பின்னர் எதை நியாயப்படுத்த வேண்டும் எதைப்பற்றி எதிர்த்து எழுதவேண்டும் என்கின்ற முடிவை எடுக்க அதைப்பற்றி முழுமையாக நான் அறிந்திருக்கவில்லை.

எனது இந்நிலை ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளோடு நில்லாமல் இன்னும் பலவகையான பிரச்சினைகளைப்
பற்றியும் கூட எழுத இயலாமல் உள்ளது. என்னைப் பொறுத்தவரை எந்த பிரச்சினையையும் தீர அறிந்து கொண்ட பின்னரே பதிவு எழுதுவதில் திருப்தி காணமுடிகிறது. அரைகுறையாக பெயருக்கு எதையோ ஒன்றிரண்டு விஷயங்களை தெரிந்து கொண்டு பதிவு எழுதுவதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது. எதையாவது எழுதி நானும் பதிவு எழுதுகிறேன் என்று பெருமைபட்டுக்கொள்வதிலும் எனக்கு நிறைவு ஏற்ப்படுவது கிடையாது.

இந்தியாவில் நிலவும் அரசியலைப் பற்றி எழுத விருப்பமுண்டு, தற்போது நிலவும் அரசியல் என்பது வருணனைக்கு அப்பாற்பட்டது, எங்கோ நடந்த விபத்தை சுட்டிக்காட்டி அதற்க்கு மத்திய அமைச்சர் சரியான நடவடிக்கை எடுக்கத் தவறியதன் காரணமாகவே இத்தகைய விபத்துக்கள் நடைபெறுவதாக மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் அளவிற்கு இன்றைய அரசியலில் முதிர்ச்சி காணப்படவில்லை. ஆளும் கட்சி எதிர்கட்சி என்றாலே விரோதிகள் என்ற நிலை ஜனநாயக நாட்டில் மிகவும் கேவலமான ஒன்று.

மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பிரச்சினைகளைப்
பற்றி பேசி தீர்வு காண்பதற்கு பதில் அவைக்குள்ளேயே பிரச்சனைகளை உண்டாக்குமளவிற்கு அரசியலை வஞ்சகம் தீர்க்கும் கருவியாக பயன்படுத்துகின்றனர். காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்ச்சியில் இருந்த காலத்தில் மறைந்த திரு அண்ணாதுரை அவர்கள் எதிர்கட்சியில் இருந்த காலங்களை கவனிக்கும் போது ஆளும்கட்சியினரை எதிர்கட்சியினர் சாடும் விதங்களில் அதிகரித்திருக்கும் விரோத போக்கும் தரக்குறைவான விமர்சனங்கள், அறிக்கைகள் இதற்க்கு ஒரு எல்லையே இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் அசிங்கமும் அருவருப்பும் தான் எஞ்சியுள்ளது, அதை பின்பற்றி தொடர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் விரோதபோக்கு, வன்மம், பழிவாங்குதல் இன்னும் என்னவெல்லாமோ அரங்கேறிவருகிறது.

திரு காமராஜர் அண்ணாவை எதிரியாக எண்ணியது கிடையாது, அண்ணா எதிர்கட்ச்சியினரை ஒருபோதும் தரக்குறைவாக பேசியது கிடையாது, தொண்டர்களுக்கு அவர்கள் முன்மாதிரிகளாக வாழ்ந்து மறைந்தனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எந்த கட்சியினர் ஆட்சியிலிருந்துவிட்டு போனாலும் அவர்களை அடுத்து ஆட்ச்சியை கைப்பற்றுகின்ற அரசியல் கட்சி எதுவாக இருப்பினும் முன்னவர்கள் விட்டுப்போன வேலைகளை தொடர்ந்து செய்து முடிக்கின்ற அர்த்தமுள்ள அரசியலை காணமுடிகிறது, ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக உள்ளது, அதனால் தான் அமெரிக்காவின் முன்னேற்றம் அசுர வேகத்தில் உள்ளது, இநதியா ஒருகாலமும் அமெரிக்காவைப்போன்ற முன்னேற்றத்தை அடைவதற்கு வாய்ப்புகள் இல்லாமல் செய்வது அரசியல்வாதிகளின் விரோத போக்கும் அதனால் பாழாக்கப்படும் திட்டங்களும்கூட காரணங்கள் தான்.

தட்டிகேட்ப்பதற்க்கும் ஒட்டு போடுவதற்கு
ம் முன் யாரை தேர்வு செய்கிறோம் என்பதை நன்கு அறிந்த பின்னர் ஓட்டு போடவும் பொதுமக்கள் தயாராவதற்கு அடிப்படை படிப்பறிவு தேவைப்படுகிறது, படிப்பறிவை பெற்று பின்னர் எதையும் யோசித்து அறிந்து செயல்படும் நிலைக்கு என்றைக்கு பொதுமக்கள் உயரமுடிகிறதோ அன்றைக்குத்தான் ஒழுக்கமுள்ள அரசியலை எதிர்பார்க்க முடியும், அப்படிப்பட்டவர்கள் எதிர்காலத்தில் உருவாகும் வரை இந்தியாவை பிடித்திருக்கும் நிலை மாறாது.