Translate

5/09/2010

காமத்திற்கு உறவில்லை

கமலாவின் மூத்த பெண் அன்னபூர்ணாவிற்க்குத் திருமணம் முடிந்த பின் வீடுவெறிச்சோடி போனது, கமலாவிற்கும் ஏகாம்பரத்திற்க்கும் விளைச்சல் நிலங்கள் ஏராளம், குடும்ப வழக்கத்தின்படி கமலா பூபெய்திய அடுத்த வருடத்தில் திருமணம் முடிந்தது, கமலாவின் பதினைந்தாவது வயதில் அன்னபூர்ணா பிறந்தாள், அன்னபூர்ணாவிற்க்கு உறவுமுறையில் திருமணம் செய்துகொள்ள ஆட்களிருந்தும் வெளியிலிருந்து திருமணம் செய்து கொடுக்கவேண்டிய சூழல் உருவானது, கமலாவின் தகப்பனின் பரம்பரை சொத்துக்கள் பல வருடங்களாக வழக்கில் கிடப்பில் கிடந்தன, சென்னையின் மையப்பகுதி இருந்த பல ஏக்கர் நிலம் என்பதால் அந்த வழக்கு தங்களுக்கு சாதகமாக வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று நினைத்து பங்காளிகள் அனைவரும் வழக்கிலிருந்து விலகி இருந்தனர், ஆனால் ஏகாம்பரம் விடா முயற்ச்சியில் இருந்து வந்தார்.

கமலாவின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் உடன் பிறந்த சகோதரர்கள் யாவரும் கேசில் ஜெயித்தால் அதில் கிடைக்கின்ற பணத்தில் செலவழிந்த பணம் போக மீதியை பங்கு கேட்க்க திட்டம் தீட்டி இருந்தனர், ஏகாம்பரம் அதை அறிந்திருந்தாலும் ஏற்றுக் கொள்வதாக இல்லை, பல வருடங்களாக
கேசுக்கு செலவுகள் செய்து நீதிமன்றம் அழைத்த போதெல்லாம் தவறாமல் சென்று வந்ததால் வருமானத்தை மட்டும் பங்கு கேட்க்கும் பங்காளிகளிடம் பகை ஏற்பட்டது, இதனால் அன்ன பூர்ணாவிற்கு திருமணம் செய்து கொள்ளும் முறையிலிருந்த மாமன் மகனை வேறு இடத்தில் திருமணம் செய்து விட்டதால், பூபெய்திய சில வருடங்கள் திருமணம் செய்து வைக்காமல் நாட் கடத்தி வந்தனர்.

அன்ன பூர்ணா ஒரே மகள், ஏகாம்பரத்திற்கு செல்லப் பெண் வீட்டின் நிர்வாகம் அனைத்தையும் மிகவும் கவனமுடன் நிர்வகித்து வந்தவள், கறவை மாடுகள் ஐம்பதுக்கும் மேல் இருந்தது, எல்லா கணக்கு வழக்குகள் நில பத்திரங்கள் பணம் எல்லாவற்றையும் பத்திரபடுத்தி வைப்பது, மற்ற எல்லாவித குடும்ப பொறுப்பையும் பார்த்து நடத்தி வந்தவள் திருமணமாகியப் பின் கணவரின் வீட்டிற்க்குச் சென்றதும் வீட்டை நிர்வகிக்க சரியான ஆள் இன்றி இருந்தது. கமலாவின் ஒரே தங்கை கங்காவிற்கு ஆறு பெண் குழந்தைகள் ஒரே ஆண் குழந்தையுடன் போதிய வருமானமின்றி வறுமையில் வாழ்ந்து வந்தாள், கங்காவின் மூத்த மகள் தனத்தை தன் வீட்டிற்கு அழைத்துக் வந்து உதவிக்கு
வைத்துக் கொண்டாள் கமலா, அன்ன பூர்ணாவைப் போல சாமர்த்தியத்தை தனத்திடம் எதிர்பார்க்க முடியாது என்றாலும் ஒத்தாசை செய்வதற்கு பழக்கப்படுத்தி வந்தாள் கமலா.

கமலாவின் மூத்த மகன் ஜகன் தனத்தைக் காட்டிலும் வயதில் மூத்தவன் தனத்தை தங்கை என்ற முறையின்றி தவறான எண்ணத்தில்
நோட்டமிட்டு, தனத்துடன் உடலுறவு கொள்வதற்கு முயன்று சரியான தருணத்திற்காக காத்திருந்தான், ஒரு நாள் கமலாவும் ஏகாம்பரமும் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து இளநீரில் தூக்க மாத்திரைகளை கலந்து அருந்துவதற்கு கொடுத்து தனம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சமயம் அவளுடன் உடலுறவு கொண்டான்.

உறக்கம் விழித்து எழுந்த தனம் தனக்கு செய்யபட்டிருந்த பாதக செயலை உணர்ந்து அழ ஆரம்பித்தாள், இதை கண்ட ஜகன், தனத்திடம் தான் தான் இதை செய்ததாகவும் வேறு யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொல்லி பயமுறுத்தினான், தனத்தை பயமுறுத்தி
ஜகன் உடலுறவு கொள்வதை வீட்டில் வேலை பார்த்து வந்த சேகர் கவனித்தான். கமலாவிடம் தனக்கு தெரிந்ததை மற்றவரிடம் சொன்னால் குடும்பத்திற்கு கேவலம் என்று குத்தி காண்பித்து வந்தான் சேகர், கமலா சேகருக்கு நிறைய பணத்தை கொடுத்து வாயை திறவாதபடி அடைத்து வந்தாள்.

தனம் தன் தாய் வீட்டிற்கு போக வேண்டும் என்று கமலாவிடம் கேட்டு வந்தாள், அதனால் அவளுக்கு அளவிற்கு அதிகமான புடவைகள் ரவிக்கைகள் இன்னும் என்னவெல்லாம் வேண்டுமோ அவற்றையெல்லாம் வாங்கி குவித்து வந்தாள் கமலம். தனது அண்ணன் மகனை வற்புறுத்தி தனத்திற்கு திருமணம் செய்து வைத்தாள், கடைசி வரையில் தன் மகன் ஜெகனிடம் ஒரு வார்த்தை கூட நடந்தவற்றை பற்றி விசாரிக்காமலேயே இருந்து வந்தாள் கமலம், ஜெகனின் தவறான பழக்க வழக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தன, ஒரு கட்டத்தில் ஏகாம்பரத்திற்கு ஜெகனின் நடத்தை ஏதோ ஒன்று தெரிந்துவிட்டது, அதை பற்றி தன் மகன் ஜெகனிடம் விசாரிக்க விடாமல் கமலா தடுத்து விட்டாள், இதனால் தனது வீட்டில் இருக்க பிடிக்காத ஏகாம்பரம் வேறு வீட்டிற்கு சென்று தனியே சில காலம் வாழ்ந்து வந்தார்,

மேலும் மேலும் ஜெகனின் அட்டகாசம் எல்லை மீறி சென்று கொண்டிருந்தது ஏகாம்பரம் வீட்டைவிட்டு தூரத்தில் வாழ்ந்து வந்தாலும் அவரது காதுகளுக்கு வேறு ஆட்கள் மூலமாக ஜகனைப்பற்றிய செய்திகள் சென்ற வண்ணமிருந்தது,
ஏகாம்பரம் தனது எழுபத்தைந்தாவது வயதில் வயலுக்கு தெளிப்பதற்கு வாங்கிய பூச்சு கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்து இறந்து போனார் . ஜகன் இன்னும் மாறவே இல்லை.