Translate

5/02/2010

உறவு

கோழி இறகின் நுனியில் காதை குடைவது சுகம்தான், ஆனால் அதை கூட சுகமாக யாராவது குடைந்து விட்டால் எத்தனை சுகமாக இருக்கும், சற்று தொலைவில் அரிசியை உமியிலிருந்து தூற்றிக் கொண்டிருந்த பெண்களை பார்த்த போது மனசில் சிறிது காமமும் சேர்ந்து கொண்டது, மனசு கிடந்து ஆலாய் பறந்தாலும் மனதில் ஊர் பயம், தன் மானத்தை காப்பாற்றும் பயம் எல்லாம் ஒன்று சேர்ந்து கொள்ளவே காது குடைந்த சுகத்தில், வேப்பமர நிழலில் கயிற்றுகட்டிலில் சாய்ந்த போது, மதியம் சாப்பிட்ட கேப்பை கூழின் போதை கண்களை இறுக்கியதில் அயர்ந்து உறங்கியவன் யாரோ முதுகில் தட்டி கனத்த குரல் கொடுத்து எழுப்ப முயற்ச்சிப்பது நினைவிற்கு வந்துவிட அடித்து பிடித்து கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்தவனின் அருகே அவனது தாய் மாரியம்மாள் நின்றிருந்தாள், வேலை செய்து கொண்டிருந்த பெண்களை காணவில்லை, அதிக நேரம் கண் அசந்துவிடோமோ என்ற பதற்றத்தில்,

அரிசிய கெடங்குல போட்டுட்டானுன்களா, என்று கேட்டபடி கிடங்கிலிருந்த அரிசி குவியலை கண்காணிக்க எழுந்து வேகமாக கிடங்கை நோக்கி விரைந்தான் குப்பன், கெடங்கை நீ பார்த்தப்புறம் பூட்டிகிடலாம்முன்னுதான் உன்னைய வந்து எழுப்புனேன் என்றாள் அவன் தாய் மாரியம்மாள், கிடங்கில் கொட்டபட்டிருந்த அரிசியை மூட்டைகளில் நிரப்பிக்கொண்டிருந்தனர் சில வேலையாட்கள், எத்தன மூட்ட தேருச்சி என்று கேட்டபடி மூட்டைகளை எண்ண ஆரம்பித்தான் குப்பன், வயது சற்று முதிர்ந்த வேலையாள் ஒருவர் குப்பனின் அரிசி மில்லில் பரம்பரையாக வேலை செய்பவர், நூறு மூட்டதானுங்க தேருச்சி என்று சொல்லிக் கொண்டே தனது வேலையை செய்துகொண்டிருந்தார்.

குப்பனின் பரம்பரைத் தொழில் விவசாயம் அதிலும் குப்பனின் தந்தையிடம் மட்டுமே நெல்லிலிருந்து அரிசியை பிரிக்கும் மில் சொந்தமாக இருந்தது, அருகிலிருந்த பல கிராமங்களிலிருந்து நெல் வந்தபடி இருக்கும், அரிசி பிரித்தெடுக்கும் இயந்திரத்துடன் எள் தேங்காய் போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கும் இயந்திரத்தையும் வாங்கி சேர்த்திருந்தனர், குப்பனின் அப்பா காலத்தில் செக்கு மாடுகள் செய்த வேலையை நொடியில் இயந்திரங்களில் செய்துவிட நவீன ரக இயந்திரத்தை வாங்கியிருந்தனர். அரிசி மில் எப்போதுமே திறந்திருப்பது வழக்கமாக இருந்தது. இதனால் குப்பனையும் அவனது பரம்பரையையும் தெரியாதவர் என்று யாரும் இல்லை என்ற அளவிற்கு பிரபலம் ஏற்ப்பட்டு இருந்தது.

குப்பனுக்கு காலையில் கள் இறக்கியவுடன் குடிக்கச் சொல்லி வைத்தியர் சொல்லியிருந்ததால் தினமும் காலையில் மரத்திலிருந்து கள்ளை இறக்கியவுடன் குடித்துவிட்டு வருவது வழக்கம், சிலர் போதைக்காக கள்ளை குடித்து வழியோரங்களில் கிடப்பதை குப்பன் பார்ப்பது புதியது இல்லை என்றாலும் குப்பனின் பள்ளிகூட நண்பன் அடுத்த கிராமத்திலிருக்கும் வேலுவிற்க்கு கல்லூரி படிப்பிற்காக பட்டினம் சென்று படிக்கும் போது அங்கு ஏற்பட்ட நண்பர்களின் சகவாசத்தால் குடிப்பழக்கம் தொற்றிகொண்டது, கல்லூரி விடுமுறை சமயங்களில் வேலு குப்பனுடன் பொழுதை கழிப்பது வழக்கம் என்பதால் அவ்வூரில் கிடைத்த கள்ளை வாங்கி குடிக்கும் போது குப்பனுக்கும் அந்த பழக்கம் தொற்றிகொண்டது, நாளடைவில் குப்பனும் கள் குடித்து போதை ற்றிகொள்ளும் பழக்கத்திற்கு அடிமையானான்.

இந்நிலையில் குப்பனிடம் வேலை செய்து வந்த செண்பகத்திற்கு குப்பனிடம் பல காலமாக மையல் ஏற்பட்டிருந்தது, இதை கவனித்த குப்பன் கள் குடித்து போதை தலைகேறி இருக்கும் சமயத்தில் செண்பகத்துடன் உறவு கொள்ள ஆரம்பித்தான், சில மாதங்களாக இந்த உறவு தொடர ஆரம்பித்தது, இடையில் குப்பனுக்கு திருமணம் முடிக்க முடிவு செய்து பெண் பார்த்து திருமணமும் முடிந்தது. செண்பகத்திற்கு குப்பனால் ஏற்பட்ட கர்பத்தை சிதைக்கத் வழி அறியாத செண்பகம் அந்த ஊரைவிட்டு வேற்று ஊர் சென்று குழந்தை பெற்று அங்கேயே வாழ்ந்து வந்தாள்,

குப்பனின் நண்பன் வேலு கல்லூரியில் ப்ரொபசராக வேலை பார்த்து வந்தான், வருடங்கள் கடந்தன, செண்பகம் தனக்குப் பிறந் மகனை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று உறுதியுடன் படிக்க வைத்தாள், குப்பனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாதிருந்தது, தற்செயலாக தான் வேலைபார்க்கும் கல்லூரியில் படித்து வந்த செண்பகத்தின் மகன் சிவாவை பார்த்த போது வேலுவிற்க்கு ஆச்சரியம் தனது நண்பன் குப்பனின் மறு உருவமாக இருந்த சிவாவிடம் அவனுடைய விவரங்களை விசாரித்த போது வேலுவிற்கு ஆச்சரியம் மட்டுமே மிஞ்சியது.

ஒருநாள் வேலுவை பார்க்க கல்லூரிக்கு வந்திருந்த குப்பனிடம் சிவாவை நேரில் அழைத்து காண்பித்து தனது ஆச்சரியத்தை எடுத்து சொன்னான் வேலு, சிவாவை பார்த்த குப்பனுக்கும் ஆச்சரியம், அவனது தாயின் பெயரை விசாரித்தபோது அவன் செண்பகம் என்று சொன்னான், அவனது அப்பாவின் ஊர் பெயர் போன்றவற்றை விசாரித்த போது அவனது தாய் அவற்றை பற்றிய விவரங்களை தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று சொல்லி விட்டான் சிவா. வருடங்கள் கடந்த பிறகு, குப்பன் வேலுவிடம் தான் கள் போதையிலிருந்த போது செண்பகத்தை தனது உறவாக்கிகொண்ட கதையை சொல்லி அதன் பிறகு தனது திருமணம் நடந்ததும் செண்பகத்தை தேடிய போது அவள் அந்த ஊரை விட்டு வேறெங்கோ சென்றுவிட்ட செய்தி மட்டுமே தனக்கு கிடைத்ததைப் பற்றியும் சொல்லி வருந்தினான்.

வேலு செண்பகத்தை சென்று நேரில் பார்த்து அவளுக்கு தேவையான உதவிகளை குப்பனிடமிருந்து பெற்றுத் தருவதாக எடுத்து சொன்னான், தனக்கு குப்பனிடமிருந்து எந்தவித உதவியும் வேண்டாமென நிராகரித்துவிட்டு தனது மகன் சிவாவுடன் வேறு ஊர் மாற்றி சென்று விட்டாள் செண்பகம். பரம்பரையாக சுழன்று வந்த அரிசி மில்லும் எண்ணெய் இயந்திரங்களும் ஆள் நடமாட்டமின்றி காடு போல் செடி கொடிகள் வளர்ந்து மௌனக் கதைகளை உள்ளடக்கி கொண்டு நின்றது.