Translate

4/26/2010

மதத் தீவிரவாதிகளின் ஊளைச்சத்தம்

இந்திய நாட்டில் விலைவாசி ஏற்றத்தினால் ஏழை மக்களுக்கு ஏற்ப்படுகின்ற வேதனைகளை பொறுக்க இயலாத சில அரசியல் கட்ச்சிகள் காட்டும் அக்கறைக்கு கைமாறாக [ஆடுகள் நனைகிறதே என்று ஓநாய் வருந்திய கதை] ஏழை மக்கள் மீண்டும் 'சுயநலவாத அரசியல்வாதிகள்' ஆட்ச்சியை பிடிக்க ஓட்டு போடுவார்கள் என்று கனவு காண்கிறார்கள். ஒருமுறையாவது பிரதமராகி பார்த்துவிட வேண்டும் என்ற பதவியாசை பிடித்து ஆட்டுகிறது, போவதுதான் போகிறோம் நெடுநாளைய கனவுப்பதவியில் உட்கார்ந்துவிட்டு போவதற்கு பெரும்பான்மை இந்தியமக்களால் தேர்தெடுக்கபட்டிருக்கும் த்திய அரசை கவிழ்க்க என்ன சதிசெய்வது என புரியாமல், சகட்டுமேனிக்கு சொல்லப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மக்கள் கவனிகாமல் இல்லை. எது சரி எது தவறு என்ற அரசியலைக்கூட பொதுமக்கள் அறியாமல் இருக்கிறார்களா என்ன, பொதுமக்களை முட்டாள்கள் என்று நினைத்திருக்கும் சிலரை தாங்கள்தான் முட்டாள் என்பதை உணர்த்தத்தான் தேர்தல். ஆனாலும் ஆசை யாரைவிட்டது.

சாட்ச்சியில்லாத குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டு போகும் எதிர்கட்ச்சியின் அரைகுறை அரசியலை பார்த்து சிரிப்புத்தான் வருகிறது . மனிதநேயத்தை கொன்று குழி தோண்டி புதைத்துவிட்டு, மதத் தீவிரவாதத்தை பாரத மண்ணில் விதைத்து மதத் தீவிரவாதிகளை மட்டுமே நாட்டில் உருவாக்கி, மதவாதிகளை மட்டுமே ஒன்று திரட்டி இந்திய நாட்டை சுடுகாடாக்க திட்டம் வகுக்கும் இவர்களுக்கு ஏழைமக்களின் வயிற்றுப் பசி மீது அக்கறையாம், விலைவாசி ஏற்றத்தின் மீது வெஞ்சினமாம். மதத்தின் பெயரைச்சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்ச்சியை பிடிக்க நினைக்கும் அற்ப அரசியலை புரிந்துகொள்ள மக்களால் முடியாதா என்ன.

ஆட்ச்சியை கவிழ்ப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு வீண் பழி சுமத்தி நாடகமாடிவரும் அரசியல் ஓநாய்களின் ஊளையிடும் சத்தத்தை வெள்ளாடுகள் இனம் காணாமல் போகாது. மதமென்ற மனித வெள்ளாடுகளின் ரத்தம் குடிக்கும் அரசியல் கொள்ளிவாய் பேய்களைப்பற்றி கவனமுடன் செயல்படவேண்டும், அரசியல்வாதிகளின் உருவில் இந்தியாவில் வேரூன்றி வெள்ளைகா
னால் ஒடுக்கப்பட்ட மதவெறி பிடித்த தீவிரவாத கும்பலுக்கு மக்கள் விலை போகக் கூடாது. விலை போனால் இந்திய நாடு சுடுகாடு ஆகும் என்பதற்கு ஏற்கனவே சான்றுகள் உள்ளன.

மத்திய அரசே அடிபணியாதே அவர்களது தந்திரங்களுக்குச் செவிசாய்த்து நாட்டை ரத்தகாட்டேரிகளிடம் கொடுத்து விடாதே, நீரில்லாத குறையை தீர்த்து வைக்க மனித ரத்தம் ஆறாய் பெருகச் செய்து அதன் மீது தனது ஆட்சி சிங்காசனத்தை இட்டு பதவியாசையை, பதவி வெறியை தீர்த்துக் கொள்ள வகுக்கப்படும் சதி திட்டத்தை முறியடி. அவர்கள் கூறும் பொய்யான குற்றச் சாட்டுகளுக்குச் செவி சாய்த்து கட்ச்சியிலிருக்கும் உறுப்பினர்களை அனாவசியமாக வெளியேற்றாதே. மதவெறி பிடித்து நாட்டை அலைகழிக்க வைக்கும் மாயப் பிசாசுகளின் சீற்றத்தைக் கண்டு அஞ்சாதே.