Translate

4/21/2010

அரசியல் நாடகம்

சில அரசியல்வாதிகள் சிறிய பிரச்சினைகளைக் கூட மலைபோன்ற பிரச்சினையாக்கி பெரிதுபடுத்தி தங்கள் நிலையை உயர்த்திக்கொள்ளும் போக்கு தற்போதைய அரசியலில் வரம்பு மீறி கையாளப்படுகிறது. எத்தனையோ பிரச்சினைகள் நாட்டிலும் மாநிலங்களுக்கும் இருக்கும்போது சிறிய பிரச்சினைகளை ஆளும் கட்சி, மற்றும் முதல்வர் மீதும் பழிசொல்லி தங்களுக்கு மாத்திரம் தான் எல்லா பொறுப்புகளும் நிறைந்திருப்பது போன்ற பிரம்மையை ஏற்ப்படுத்தி குறிப்பிட்ட மக்களை திருப்பதிபடுத்த அரசியல்வாதிகள் சிலர் போடும் வேடம், புதியதொரு விதமாக தமிழக அரசியலை பீடித்திருக்கிறது.

'மக்கள்' என்று குறிப்பிடும்போது நிச்சயமாக ஒன்றை தெளிவுபடுத்தியே தீர வேண்டும், ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஏமாற்றிவிட முடியாது, யாரோ ஒரு கூட்டத்தை மட்டுமே திருப்த்திபடுத்த முயலும் இவ்விதமான அரசியல் சாகசங்களை அரசியல் உள்நோக்கம் அறிந்தவர்கள் யாரும் இவற்றை கண்டுகொள்ளபோவது கிடையாது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் யாரை மனம் குளிர வைக்க கோஷம் போடுகிறார்களோ அவர்கள் மட்டும் மனம் குளிர்ந்தால் போதும் எனபது அவர்களது திருப்தி.

இப்படிப்பட்ட அரசியல் திரு. கருணாநிதி ஆட்சியிலும், மத்தியில் திருமதி சோனியா, திரு மன்மோஹன்சிங் ஆட்ச்சியில் மட்டுமே செல்லுபடியாகும், சசி தரூரை ராஜினமா செய்வித்த பிரதமர் மன்மோகனை வலியுறுத்தும் எதிர்கட்சிகள் தாங்கள் ஆட்சிபீடத்திற்கு வரும்போது எத்தனை நேர்மையுடன் நியதியுடன் ஆட்சி செய்யபோகின்றார்கள் என்று காலம் வரும்வரை காத்திருந்து வேடிக்கை பார்க்கவேண்டும். தமிழக அரசியலில் ஏற்படப்போகும் மாற்றங்களை 'கலைஞர் கருணாதிக்கு முன்' என்றும் 'கலைஞர் கருணாநிதிக்குப் பின்' என்று பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய காலமும் வரத்தான் போகிறது. கலைஞர் ஆட்சியில் இருந்தநிலை திரும்ப வராதா என்று ஏங்கும் நாள் வராமல் போகாது, மனித நேயம் இல்லாத அரசியல்வாதிகளை மட்டுமே நிறைய சேமித்து வைத்துள்ளது இந்திய தேசம் அதன் விளைவுகளை நாடு சந்தித்தே தீரவேண்டிய நிலை வந்தால் ஆச்சரியப்படுவதற்க்கில்லை.

'செத்தா தெரியும் செட்டியார் வாழ்க்கை' என்பது போன்று நாடகமாடும் அரசியல் நடிகர்கள் எங்கேயாவது புற்றில் ஒளிந்து கொள்வார்களோ என்னவோ. ஆனால் ஒன்று மட்டும் உறுதி எதிர்கட்சிகாரர்களையும் மனிதர்களாக மதிக்கும் உண்மை அரசியல்வாதிகளின் கடைசித் தலைவனாக கடைசி அரசியல்வாதியாக இந்திய திருநாட்டில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சிலரில் கலைஞரும் ஒருவர் அவர்களுடன் உண்மை அரசியல்வாதிகளின் பட்டியல், சகாப்த்தங்கள் அழிந்துவிடுவது உறுதி.