Translate

2/14/2010

CHARLTON HESTON [சார்ல்டன் ஹெஸ்டன்]


சார்ட்ல்டன் ஹெஸ்டன் என்பவர் சினிமாவில் ஒரு சகாப்தத்தை உருவாக்கிய சிறந்த நடிகர், காலம் சென்ற ஹாலிவுட் நடிகர் பற்றி எனக்கு திடீரென்று எழுத விருப்பம் தோன்றியது, நான் முதன் முதலாக பார்த்த ஆங்கிலதிரைபடம் இரண்டு, 'Ten Commandments', 'Ben Hur', இரண்டையுமே மவுன்ட் ரோட்டில் அப்போது ஆனந்த் தியேட்டர் என்ற திரையரங்கம் ஒன்று இருந்தது, அதற்க்கு என் பெரியப்பா [என் அப்பாவின் அண்ணன்] அழைத்து சென்றார்.

எனக்கு அப்போது பதிமூன்று வயதிருக்கும் என்று நினைக்கிறேன். சுமரத்தாணியாக மனதிலும் நினைவிலும் பதிந்த காட்சிகளும் நடிப்பும் ஒப்பனையும் எனக்கு இன்றும் நினைவிலிருந்து நீங்காமலேயே இருக்கிறது.
இரண்டு
திரைப்படங்களுமே பிரமாண்டமானது, பைபிள் கதையை கருவாக கொண்டு வெளிவந்த நாவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அற்புத திரைப்படங்கள்.

திருமணத்திற்கு முன் என் அப்பாவும் என் பெரியப்பாவும் ஒன்றாக சேர்ந்து நண்பர்களுடன், அப்போதெல்லாம் மதராசில் ராக்சி, காசினோ இரண்டில் திரைக்கு வரும் திரைப்படங்கள் ஒன்றையும் விட்டு வைப்பதில்லையாம், காசினோவில் அதிக பட்ச ஆங்கில திரைப்படங்களை பார்ப்பது அவர்கள் வழக்கம்,

1923ஆம் ஆண்டு ஊமைபடமாக, கருப்பு வெள்ளை படமாக திரைக்கு வந்த இந்த திரைப்படம் அதே இயக்குனரும் அதே நடிகரும் 1956ஆம் ஆண்டு மீண்டும் பேசும் கலர் திரைப்படமாக தயாரித்து வெளியிட்டனர், இரண்டு திரைப்படங்களிலும் சார்ல்டன் ஹெஸ்டன் தான் கதாநாயகன், அந்த இரு திரைப்படங்களில் அவர் ஏற்படுத்திய ரெகார்டை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

ஒரு எகிப்திய இளவரசன் கதாபாத்திரம், அதே இளவரசன் ஒரு யூதகுல நடுவயது நாயகனாகி பின்னர் வயது முதிரும் கதாபாத்திரம், அற்புதமான கதாநாயகனை தேர்ந்தெடுத்து, உண்மையான கதாபாத்திரம் இப்படித்தான் இருந்திருக்க முடியும் என்ற உணர்வை ஏற்ப்படுத்தியது, இன்றும் நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது, 1956 ஆம் ஆண்டு தயாரித்து வெளிவந்த Ten Commandments, 1959 ஆம் ஆண்டு வெளி வந்த Ben Hur, இரண்டிலும் இருக்கும் காட்சிகளை காணும் போது மெய் சிலிர்க்க வைக்கும், இன்று இருப்பது போன்ற அனிமேஷன் வசதிகள் இல்லாத காலத்தில் சமுத்திரத்தை இரண்டாக பிரிய செய்து அதன் நடுவிலே யூத மக்கள் குடும்பம் குடும்பமாக சமுத்திரத்தை கடந்து செல்லும் காட்சி, இன்றுவரை பிரமிப்பை ஏற்ப்படுத்துகிறது.

சார்ல்டன்
ஹெஸ்டன் முதலில் இளமையின் தோற்றம் அப்போது எகிப்திய இளவரசன் வேடம், அதற்கேற்ற நடிப்பு, பின்னர் முதுமை அப்போது யூதகுல வேடம் வேறு வித நடிப்பு, மிகவும் இயல்பானதாகவும் பொருந்தினதாகவும் இருந்ததை மறக்க முடியவில்லை. இவரது அசாத்திய நடிப்புத் திறமைக்கு மிக முக்கிய காரணம் திரையில் நடிப்பதற்கு முன்பே நாடக உலகத்தில் ஏராளமான நாடகங்களில் நடித்து நடிப்பின் நுணுக்கங்களை நன்கு அறிந்திருந்தார். இன்றும் திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டுவதாக உள்ள இந்த திரைப்படங்கள், Ben Hur வாங்கி குவித்த ஆஸ்கார் விருதுகள் பதினொன்று. Ten Commandments வசூலித்த தொகை ரெகார்ட் பிரேக்.

சார்ல்டன் ஹெஸ்டன் சட்டம் படித்திருந்தாலும் நடிப்பின் மீது இவருக்கு ஏற்பட்ட எல்லையற்ற காதல் இவரை மிக சிறந்த நடிகன் என்ற உலகளாவிய புகழை எற்படுத்திகொடுத்ததுடன், வேறு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முதல் முதலாக இவருக்கு கிடைத்த புகழை என்றும் உலகு மறக்க இயலாத அளவிற்கு இன்றும் நிலைத்து நிற்க்கச் செய்தது. தன்னுடன் படித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அறுபத்து நான்கு ஆண்டுகள் ஒரே மனைவியுடன் வாழ்ந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. எண்பத்து மூன்று வருடங்கள் வாழ்ந்து, 2008 ஆம் ஆண்டு இயற்க்கை எய்தியவர் CHARLTON HESTON என்னும் அற்புத நடிகர்.