Translate

2/26/2010

ஓவியர் ஹுசேன்

ஹுசேனின் ஆபாச ஓவியத்தைப்பற்றிய விவாதமென்பது சற்று பழைய கதை என்றாலும் மருத்துவர் ருத்ரன் அவர்கள் பதிவை படித்தபின் அதைப் பற்றிய எனது அபிப்பிராயத்தையும் எழுத நினைத்தேன்,

அபிப்பிராயம்
என்பதனால் சற்று நீண்டதாக இருந்துவிடபோகிறது என்ற ஊகத்தில் எனது பதிவிலேயே எழுத எண்ணினேன், ஓவியர் ஹுசேன் அவர்களுக்கு தற்போது தொண்ணூற்று நான்கு வயது என்பதால் மூத்த குடிமகன் என்ற மரியாதையும், சிறந்த இந்திய ஓவியர் என்பதால் மதிப்பும் எப்போதுமே அவர் மீது உண்டு,

ஆனால்
சர்ச்சைக்குள்ளான போது அவருக்கு வயது எண்பத்து ஒன்று, 1970களில் வரையப்பட்ட சில ஓவியங்களைப் பற்றிய சர்ச்சைகளை அப்போது கண்டுகொள்ள ஒருவர் கூட இல்லாமல் போனதும், 6, டிசெம்பர் 1992ம் ஆண்டு பாபர் மசூதியை இடித்த பின்னர் 1996ம் ஆண்டு தான் ஹுசேனின் ஓவியத்தின் மீதான குற்றங்களை அவமதிப்பு வழக்குகளைப் பதிவு செய்கிறார்கள் மட்டுமில்லாது அவரது சில ஓவியங்கள் கடும் சர்ச்சைக்குள்ளாக்கப்படுகிறது,

1970களில் இல்லாத, ஏற்படாத புதிய சர்ச்சையை ஏறக்குறைய இருபத்து ஆறு ஆண்டுகள் கழித்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்ப்படுத்தி ஒற்றுமையை சிதைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதா? ஹுசேன் தனக்கு பிடிக்காதவர்களை ஆடையில்லாமல் ஆபாசமாக வரைந்து தனது கோபத்தை வெளிபடுத்திக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது, அதற்க்கு உதாரணமாக ஹிட்லரைக் கூட அவர் நிர்வாணமாக ஓவியம் வரைந்தார் என்றும் கூறப்படுகிறது,

பொதுவாக
ஓவியங்களை வரைவதில் சில ஓவியர்கள் 'நிஜங்களை' சித்தரிக்க அப்படி வரைவதாக கேள்விப்பட்டதுண்டு, இன்னொரு வகையில் பார்த்தால், கடவுளுக்கு உடை உடுத்தும் வழக்கம் இருந்திருக்க முடியுமா என்பது கேள்வியே. கோவிலில் உள்ள சிற்ப்பங்களும் பல செய்யுள்களிலும் கூட இந்த 'ஆபாசம்' நிறைந்துதான் கிடக்கிறது.

ஓவியர்
ஹுசேன் நிர்வாணமாக சித்தரித்தது பலரது மனதை புண்படுத்தியது என்றால், பாபர் மசூதியை இடித்து பழிக்குப்பழி வாங்கினார்கள் என்று அர்த்தம் கொள்ளலாமா? பாபர் மசூதியை இடித்ததினால் யாருடைய மனதும் புண்படவில்லையா? ஹுசேனை தண்டிக்க வேண்டுமென்றால் மசூதியை இடித்தவர்களை என்ன செய்ய வேண்டும்?

M.F ஹுசேனுக்கு இந்த ஆண்டு கத்தார் அரசு அந்நாட்டின் குடியுரிமை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உசேன் அவர்களின் வயதுக்கும் அவரது ஈடு இணையற்ற ஓவியத்திறமைக்கும் அருமையான விலைமதிப்பற்ற ஓவியங்களுக்கும் நான் என்றும் சிரம் தாழ்த்துகிறேன்.