Translate

2/23/2010

வித்தியாசமான நிகழ்ச்சிகள்

சின்னத்திரையில் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள் போட்டி போட்டுகொண்டு ஒளிபரப்பாகி வருகிறது, சிறந்த புதிய குரல் வளம் அல்லது பாடும் திறமை மிக்க குழந்தைகள், நடுத்தர வயதினர், சிறந்த நடனத்திறமை உள்ளவர்கள் என்று, இவை இரண்டில் மட்டுமே போட்டி போட்டுகொண்டு நிகழ்சிகளை ஒளிபரப்புவதை விட வேறு வித போட்டிகளையும் ஒளிபரப்புச் செய்யலாமே, உதாரணத்திற்கு பொது அறிவு பற்றிய வினாவிடை போட்டிகள், இசைக்கருவிகள் வாசிப்பதில் திறமை உள்ளவர்கள், கிளாசிகல் நடனங்களில் திறமை உள்ளவர்கள், நடிப்புத்திறமை மிக்கவர்கள், சிறந்த கதை சொல்லுவது எழுதுவது என்று வித்தியாசபடுத்தலாம்.

விஜய் தொலைகாட்சியில் தற்போது ஒளிபரப்பாகிவரும் 'குரல் தேடல்' போட்டியில் பாடிகொண்டிருக்கும் குழந்தைகள் அத்தனையுமே மிகச் சிறப்பாக பாடுவது மிகவும் அருமை, முதன் முதலில் குழந்தைகளுக்கான குரல் தேடல் என்றபோது இந்த நிகழ்ச்சி அத்தனை நன்றாக இருக்காது என்று நினைத்தது வீணாக்கியது குழந்தைகளின் பாடும் திறமை. அல்காஅஜித் என்கிற பெண்ணின் இனிமையான குரலும் பாடும் திறமையும் அவர்தான் முதல்பரிசை தட்டிச் செல்வார் என்று உர்ஜிதமாக சொல்ல வைக்கிறது.

இன்னும் பலவித வித்தியாசமான போட்டிகளை ஒளிபரப்பினால் பார்ப்பவர் ரசிக்கும்படியாக இருக்கும்.