Translate

2/17/2010

மேலே ஏற உதவிய ஏணியை எட்டி உதைக்காதீர்

மாணவப்பருவத்தில் நன்றாக படித்து அதிக மதிப்பெண் எடுத்து பள்ளியிலோ வகுப்பிலோ முடிந்தால் மாநிலத்திலேயே ஏன் இந்தியாவிலேயே கூட முதல் மாணவனாகவோ மாணவியாகவோ வந்துவிட எடுத்துக்கொள்ளும் முனைப்பிற்க்கே நேரம் போதவில்லை, அதை தவிர எதில் ஆர்வம் என்று கேட்டால், கிரிகெட்டு, காரோட்டுதல், ஒலிம்பிக்கில் ஓடி முதலாவதாக வருவதற்கு பயிற்சி.......' அடடே பரவாயில்லையே, ஸ்போர்ட்சில் இதனை விதமான பயிற்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதை பார்த்து சந்தோஷப்பட துவங்குவதற்கு முன் 'எப்படி படிப்பிலும் முதலிடம், ஸ்போர்ட்சிலும் பயிற்சிகள் எடுகின்றாயே' என்றால், 'கிரிகெட் தவறாமல் டிவியில் பார்த்துவிடுவேன், இல்லையென்றால் தவறாமல் ஸ்கோர் கேட்டு தெரிந்து கொள்வேன், கார் ஓட்டி பழகுவது கம்ப்யூட் டரில்', என்று கம்பீரமாக சொல்லிக் கொள்ளும் விடலைகள்.

பின்னர் தேர்ந்தெடுக்கும் கல்லூரி படிப்பு அதன் பின்னர் வேலை வாழ்க்கையில செட்டில், [செட்டில் ஆகறதுன்னா வங்கியில தன்னோட கணக்குல பல லட்சங்களை சேர்க்கதுன்னு அவங்க அகராதியில அர்த்தமாம்] அதன் பின் திருமணம், அதன் பின் குழந்தைகள், சொந்த வீடு, பிள்ளைகளின் படிப்பு, இப்படியே காலம் போகிறது, போகிற போக்கில் 'யார் ஆண்டால் என்ன, இவருக்கு பதில் அவர் ஜெயித்தால் நமக்கென்ன சோறு போடவா போகிறார்', நாலு பேர் அரசியல் பேசும் போது ஏதோ காதில் எங்கோ யாரோ பேசி கேட்ட சிலவற்றிலிருந்து எடுத்து விட்டால் போதும்.

இதில் நேருவையும் காந்தியையும் யார் நினைவில் வைத்து கொள்வது, பெற்றோரின் பெயரே மறந்துவிடுகிறது, பாட்டன் முப்பாட்டனா, 'டயத்த வீணாக்காதீங்க வேற ஏதாவது பேசுவோமே'. 'வயித்துக்கும் வாயிக்கும் தேடதுக்கே நேரம் இல்ல இதுல இதையெல்லாம் யார் ஞாபகம் வெச்சுக்கறது', நம்ம ஆசாமிகளின் நிலை இவ்வாறிருக்க, சோசியலிச கொள்கையை பற்றியும் காந்தியின் அஹிம்சையை பற்றியும் இப்போது தெரிஞ்சு என்ன ஆக போவுது, என்று கேட்கும் நாமும்.

நாம் எங்கே போகிறோம் என்ற உணர்வில்லாமல், சுதந்திர காற்றை பறிகொடுத்த பின் நேருவின் சோசியலிசமும் காந்தியின் அஹிம்சையும் நினைவிற்கு வருவதற்கு கூட வாய்ப்பில்லை, அப்படியொன்று இருந்ததென்பதை அறிந்திராதவர்க்கு ஞாபகம் அல்லது நினைவு எப்படி வரும். தெரிந்தென்ன ஆகபோகிறது என்று கேட்டவர் அதற்குரிய பதிலை பெரும்பொழுது கேள்வியை தேடிச் செல்வாரோ, பரிதாபத்திற்குரியவர்கள்.

நல்லவேளை நேருவை எந்த கரன்சியிலும் இன்னும் அச்சடிக்கவில்லை, அச்சடித்திருந்தால் அச்சடித்த கரன்சியை தீயிலிட்டு தங்கள் வெறுப்பை காண்பித்திருப்பார்களோ என்னவோ, நேருவை வெறுப்பவர், 'குழந்தைகள் தினம் கொண்டாட வேண்டாம், குழந்தைகளை கொண்டாடுங்கள்' என்று பிரசாரம் செய்து தங்களது ஆற்றாமையையும் அங்கலாய்ப்பையும் தீர்த்துக்கொள்ளுகிறார்கள் பாவப்பட்ட ...

இந்திராவின் மறைவான கம்யூனிச கொள்கையை காட்டிலும் நேருவின் சோசியலிசமும் காந்தியின் காந்தீயமும் நாட்டை பந்தாடவில்லை என்பதை வரலாறு சொல்கிறதே. போகட்டும், குறை சொல்வதைவிட்டால் சிறந்த பொழுது போக்கு நமக்கு வேறு என்ன இருக்க முடியும் இந்த வயசில்.....