Translate

2/16/2010

மாற்றுங்கள்

இந்தியாவில் இருக்கும் ஏறக்குறைய எல்லா மாநிலங்களின் தலைநகர்களிலும் தினம்தோறும் சென்று வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது, மும்பையில் எப்போதுமே டாக்ஸிகள் மிகவும் உதவிகரமானவை, அவர்கள் வசூலிக்கும் கட்டணமும் மிகவும் நியாயமானதாகவே இருக்கும், தினம் தினம் புதிய பயணிகள் டாசியில் ஏறினாலும் கட்டணம் வசூலிப்பதில் அவர்கள் நியாயத்தையே கடை பிடிக்கின்றனர், அவசரத்திற்கு டாக்ஸி அங்கு அதிகம்.

மும்பை
நகரின் பெரும்பாலான மக்கள் போக்குவரத்து சாதனங்களில் பேருந்தும் ஒன்று, பேருந்தில் பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும், இதற்க்கு முக்கிய காரணம், ஒவ்வொரு பேருந்தும் அட்டவணையில் குறிப்பிட்டிருக்கும் சரியான நேரத்தில் புறப்படும், புறப்படுவதற்கு முன்பே குறிப்பிட்ட பேருந்தில் ஏறுவதற்கு காத்திருப்போர் வரிசையாக நின்று கொண்டிருப்பார்கள், பேருந்தில் எத்தனை இருக்கைகள் உள்ளனவோ, அத்தனை நபர்கள் மட்டுமே வண்டியில் ஏற அனுமதிக்கப்படுகிறார்கள். பயணசீட்டுக்களை வரிசையில் நிற்கும்போதே வழங்கிவிடுகிறார்கள். அடுத்து அடுத்து சரியான நேரத்திற்கு பேருந்துகள் வந்துகொண்டே இருப்பதால் பயணிகள் அதிக நேரம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கவேண்டிய அவசியமும் இருப்பதில்லை. எத்தனை பயணிகள் இறங்குகின்றார்களோ அத்தனை பயணிகளை மீண்டும் ஏற்றி கொள்ளுகிறார்கள்

மும்பையில் டாக்ஸியில் தனியே ஏறிக்கொள்ளும் பெண்களுக்கு ஹிந்தி பேசுவதற்கு தெரியவில்லை என்பது ஓட்டுனருக்கு தெரிந்தால் ஆபத்து தான். எப்போதுமே டாக்ஸியில் தனியே பயணிக்கும் போது பெண்கள் மிகவும் கவனத்துடன் இருப்பது அவசியம். அது இந்தியாவிற்க்கு உள்ளே என்றாலும் இந்தியாவிற்கு வெளியே என்றாலும் டாக்ஸி என்றாலும் ஆட்டோ என்றாலும் டூரிஸ்ட் வண்டிகள் என்றாலும் ஜாக்கிரதை என்பது பெண்களுக்கு மிகவும் அவசியமானது.

பெங்களூருவில் ஆட்டோக்கள்தான் பயணிகளுக்கு உதவிக்கரம் கொடுப்பவை, சென்னையைபோல நினைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறிய முன்னோ பின்னோ மீட்டரை போடாமல் ஆட்டோக்காரர் கேட்கும் தொகையை கொடுக்க வேண்டிய அவலம் அங்கு இல்லை என்பது பெங்களூருவிற்கு சென்னையிலிருந்து முதன் முதலில் செல்வோர் அறிந்திருக்கவேண்டிய முக்கிய செய்தி. பெங்களூருவில் ஆட்டோ கட்டணம் பெரும்பாலும் மிகவும் நேர்மையானது, மீட்டர் மிகச் சரியானதும் அதில் காட்டும் தொகையை விட ஒரு பைசா கூட அதிகம் கொடுக்க வேண்டியது அவசியமில்லை என்பது சென்னையில் ஆட்டோக்களில் பயணம் செய்து நொந்து போனவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி.

மும்பை பேருந்து நடத்தும் முறையும் பெங்களூருவில் ஆட்டோ வசூலிக்கும் கட்டண முறையும் தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்பட வேண்டும். தமிழக பேருந்துகளில் வழங்கப்படும் பயனச்சீட்டுகளின் வசூலின் அடிப்படையில் நடத்துனருக்கும் ஓட்டுனருக்கும் 'அதிகப்படி' கொடுக்கபடுவதை நிறுத்தி விட்டாலே போதும் கூட்டம் நெருக்கியடித்துகொண்டு ஏற்றுவது குறைந்துவிடும்,

தமிழக
ஆட்டோக்காரர்களின் வசூலையும் பெங்களூருவைப் போல ஏன் கட்டுபடுத்தக் கூடாது, தமிழக ஆட்டோகாரர்கள் கூறும் காரணம் பெட்ரோல்விலை டீசல் விலை ஏறிவிட்டது என்பது, அவர்கள் நினைத்தபடி பயணிகளிடம் வசூலிப்பதை மாற்றியமைத்து பெங்களூருவைப்போல சரியான மீட்டர் பொருத்தப் பட்டு அதில் காண்பிக்கும் தொகையை மட்டும் வசூலிக்கச் செய்யவேண்டும்.