Translate

2/01/2010

சன் செய்திகள்

நான் சிறுவயதாக இருந்த போது என் பெற்றோர் இருவரும் தினமும் செய்திகளை அறிந்துகொள்ளும் ஆவலுடன் தினசரிகளை தவறாமல் படிப்பதும் வானொலிச் செய்திகளை நேரம் தவறாமல் கேட்பதும் அதற்குப்பின் அதைப் பற்றி கலந்துரையாடுவதும் எனக்கு வெறுப்புணர்ச்சியை தூண்டும், தினச்செய்திகள் கேட்பதிலும் அதைப் பற்றி பேசிக்கொண்டு இருப்பதிலும் அப்படி என்னதான் கிடைத்துவிடப் போகிறது என்று தோன்றும்.

அவர்களை
காலம் கூட்டிச்சென்ற வருடங்களுக்குப் பிறகு எனக்கு வயதின் மாற்றங்கள் ஏற்படத் துவங்கிய பின்னர் மிகவும் பிடித்த சுவாரசியமான தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது அன்றைய செய்திகள் தவறாமல் கேட்பது என்று தானாகவே மாறி இருந்தது, என் பெற்றோர்களின் காலத்தில் தொலைக்காட்சி என்றால் தூர்தர்ஷன் மட்டும் தான், அவர்களின் வழக்கப்படி தினசரிகளின் மூலம் செய்தி அறிவதே மிகுந்திருந்தது. என் காலத்தில் தொலைகாட்சிகளில் செய்திகளுக்கென்றே ஒரு தனியான அலைவரிசையும் வந்துவிட்டது, அது மட்டுமில்லாது பல செய்தி அலைவரிசைகளும் போட்டி போட்டுக்கொண்டு செய்திகளை வெளியிடுவதால் செய்தித்தாள் படிப்பது குறைவாகிவிட்டது [என்னை பொறுத்தவரையில்].

முதலில்
தனியார் சேவையாக தமிழில் சன் செய்திகளுக்கான அலைவரிசை வந்தது பொதுமக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது, அதிலே டாக்டர் சன் ந்யூஸ் என்று ஒரு நிகழ்ச்சியை இணைத்து மிகவும் பிரபலம் அடைந்தது, தற்போது கலைஞர் செய்திகள், ஜெயா செய்திகள் இன்னும் ஆங்கிலச் செய்திகளுக்கான தனி அலைவரிசைகள் வேறு அதிரடியாக வந்து குவிந்துவிட்டது, பார்ப்பதற்குத் தான் நேரம் ஒதுக்க இயலுவது இல்லை.

எனக்குப் பிடித்தது தொலைகாட்ச்சிகளின் அலைவரிசைகளிலேயே செய்திகளுக்கென்று தனியே செயல்படும் அலைவரிசைகள் தான். ஏனென்றால் இவற்றில் கட்டுகதையோ நடிப்போ பொழுதுபோக்கோ இருப்பதில்லை, அத்தியாவசியமான நிகழ்வுகளின் தொகுப்பாக இருப்பதால் இவற்றை காண்பதில் தான் முழு திருப்தி ஏற்படுகிறது. புதிதாக சன்செய்திகள் அலைவரிசையில் தம்பத்தத்தில் ஏற்ப்படும் சந்தேகங்களை குறித்தான கேள்விகளுக்கு மருத்துவரின் ஆலோசனைகள் என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது, இதில் மருத்துவர் அமர்ந்திருக்கும் மேசையின் பின்புல வர்ணம் கண்ணை பறிக்கும் சிவப்பு நிறத்தில் உள்ளது, இதற்கான அர்த்தம் என்னவோ சரியாக இருந்தாலும் நிகழ்ச்சியை உற்று பார்ப்பவர்களின் கண்ணை சற்று நேரத்திலேயே இருளடைய வைத்திடும் நிறம் என்பதால், மருத்துவர் பதில் சொல்லும் போது பார்ப்பதற்கு முடிவதில்லை, இதை சம்பந்தப்பட்டவர்கள் கவனித்ததாகவே தெரியவில்லை. சிகப்பு நிறத்திற்கு பதிலாக ஏதேனும் மங்கிய நிறத்தில் பின்புல வண்ணத்தை மாற்றி அமைத்தால் நிகழ்ச்சியை பார்ப்பவரின் கண்கள் சுகமாக உணர முடியும். குறிப்பிட்ட நிகழ்ச்சியை தொடர்ந்து நான் பார்ப்பது இல்லை என்றாலும் எனது favourite சானல்களில் ஒன்று சன் ந்யூஸ் என்பதால் இதை குறிப்பிடுகிறேன்.