Translate

1/21/2010

பரிதாபத்துக்குரிய மிருகங்கள்


சில நாய்கள் அனாதைகளாக தெருக்களில் சுற்றித் திரிவதை பார்க்க முடியும், நாய்படா பாடு என்பதற்கு சிறந்த உதாரணம் நம்ம ஊர் தெரு நாய்கள். தற்போது இந்த வரிசையில் சேர்ந்திருப்பது பசுக்கள். வாயில்லா ஜீவன்களை வளர்ப்பவர்கள் தீனி போடுவதும் குடிக்க தண்ணீர் கொடுப்பதும் கிடையாது இவைகள் பசியின் மிகுதியினால் குப்பைதொட்டிகளில் கிடக்கும் குப்பை காகிதங்களை தின்கின்றன, வயிற்றில் கோளாறு ஏற்பட்டு இறந்து விடும்போது மனிதர்கள் உண்ணும் உணவிற்கு அனுப்பப்பட்டு விடுகின்றன.

மனிதர்கள் மனிதர்களையே வாழவிடுவதில்லை இதில் வாயில்லா ஜீவராசிகளை எங்கு வாழ வைக்கப் போகிறார்கள். காளையை அடக்குவது வீர
விளையாட்டாக இருந்தது ஒரு காலம், அப்படி வீரனாக ஒருவன் இருப்பானேயானால் அவனை பெண்கள் விரும்பி திருமணம் செய்துகொள்ள முன்வருவது அந்த காலம், இந்த காலத்தில் வீரன் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை, வேறு தகுதிகளையே பெண்கள் எதிர்பார்க்கின்றனர் என்பது யாவரும் அறிந்ததே. இப்படியிருக்க தமிழரின் வீர விளையாட்டு என்ற பெயரில் மிருக வதைதான் ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது. இதை நிச்சயம் தடுக்க சட்டம்
கொண்டுவருவதுடன் அமலாக்க விடாமல் தடுப்பவர்களை கைது செய்ய வேண்டும்.
சட்டம் போட்டு தடுத்தால் கூட மிருகவதை மாறுவதாக காணோம், மனித வதைகளும் கூட.