Translate

1/17/2010

செவ்வாய் தோஷம் - 3

ஊட்டியில் ஜானுவிற்கு வேலை கிடைத்த அதே வங்கி கிளையில் நான்கு வருடத்திற்குமுன் வந்து வேலையில் சேர்ந்தவன் சேகர், ஆள் பார்ப்பதற்கு முப்பதுவயத்தை தாண்டியவனாக இருக்கும் என்று நினைக்க தோன்றும், வழுக்கைத் தலை, உடை உடுத்தும் விதமும் அதற்கேற்றாற்போல் தான் இருக்கும், வேலையில் சீனியர் என்பதால் சேகரிடம் கேட்டு கேட்டு பல வேலைகளை செய்து வந்தாள் ஜானு.

ஜானு சேகரை அண்ணா என்றே கூப்பிட தொடங்கினாள், இதற்க்கு மிக முக்கிய காரணம் சேகர் சீனியர் மாத்திரம் இல்லாமல் வங்கி உழியர்களின் யூனியனில் இணைந்து முக்கிய பங்குவகித்து வந்தான். ஜானு வேலையில் சேர்ந்த ஆறு மாதத்தில் சேகருடனான தொடர்பு பல ஆண்டுகள் பழகியவர்களைப்போல மிகவும் சகஜமாகியது. ஊட்டியில் மழை ஓயாது பெய்து ஊரெங்கும் வெள்ளம் இதனால் வங்கி மூடபட்டிருந்த நிலையில் ஜானு சேகரின் வீட்டில் வந்து தங்கி சாப்பாடு தாயார் செய்து சாப்பிட்டுவிட்டு போவது வழக்கமாகியது, சேகரின் வீட்டில் நடக்கும் பிறந்தநாள் கொண்டாட்டம் விடுமுறை தினங்களில் ஊரை சுற்றி காண்பிக்க இணைந்து போவது, என்று அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பது அதிகமாகி கொண்டே போனது.

ஜானுவின் திருமணத்தைப்பற்றிய பேச்சு வந்த போது தனக்கு செவ்வாய்தோஷம் இருப்பதால் வரன் அமைவதிலிருக்கும் சிக்கலைப் பற்றி சொன்னாள் ஜானு, சேகரின் குடும்பத்தில் ஜாதகம் பார்க்கும் வழக்கம் கிடையாது என்பதைப்பற்றி அவனும் தன் பங்கிற்கு தன்னைப்பற்றி சொன்னான். வங்கியில் உடன் வேலை பார்ப்பவர்கள் ஜானுவும் சேகரும் நெருங்கி பழகுவதை பார்த்து திருமணம் செய்துகொள்வார்கள் என்றே நினைத்திருந்தனர்.

இந்நிலையில் ஒருநாள் சேகர் ஜானுவிடம் பாலியல் தொடர்பு ஏற்படுத்த விரும்பி அழைக்க ஜானுவும் அதற்க்கு இடம் கொடுத்தாள், இதற்க்கு காரணம் வேண்டாம் என்று மறுத்தால் அங்கு தனியே வேலை பார்ப்பதால் தனக்கு சேகரால் வேறு பிரச்சினைகள் ஏற்ப்படும் என்று நினைத்தாள்.

சேகருக்கும் ஜானுவிற்க்கும் பாலியல் தொடர்பு ஏற்பட்ட பின் ஒரு சில மாதங்களில் இருவரும் தங்களது பெற்றோருக்கோ உறவினர்களுக்கோ தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். சேகரின் பிறந்த வருடம் தேதி முதலியவற்றை வாங்கி ஜாதகம் பார்த்த ஜானுவின் பெற்றோர் சேகருக்கு செவ்வாய்தோஷம் இல்லை என்பதை அறிந்த பின் சேகர் சில வருடங்களில் இறந்து விடுவான் என்று நம்பினர்.

மூன்று வருட இடைவெளியில் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோரானாகள் சேகரும் ஜானுவும், சில வருடங்களில் ஜானுவின் அப்பாவும் அதற்கடுத்த சில வருடங்களில் ஜானுவின் அம்மாவும் இயற்க்கை எய்த சேகர் ஜானு தம்பதிகள் ஒரு குறைவுமின்றி தொடர்ந்து வாழ்ந்தனர்.

முற்றும்