Translate

1/16/2010

செவ்வாய் தோஷம் - 2

இதற்கிடையில் தனியார் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் தெரிந்தவர் மூலம் கிடைக்கும் நிரந்தரமற்ற வேலையாக இருந்தால் கூட பெற்று ஜானுவை வேலைக்கு அனுப்புவார். இதனால் ஜானுவிற்கு திருமணத்திற்க்குத் தேவையான பணம் நகைகள் என அத்தனையும் தயாராகவே இருந்தது. ஒருபுறம் ஜானுவிற்கு வரன் பார்க்கும் படலமும் நடந்துகொண்டிருந்தது.

ஜானு தபால் மூலம் படிப்பை தொடர்தாலும் படிப்புடன் காதல் கதைகளும் தொடர்ந்தன, ஜானுவிற்கு ஜாதகத்தில் தோஷம் என்பதால் தனக்கு ஏற்ற வரன் கிடைக்கும் என்பது அவளுக்கு சந்தேகம், தவறாமல் சனிக்கிழமை செவ்வாய்கிழமை என கோவிலுக்குச் சென்று சனீஸ்வரனை சுற்றி வருவதும் எண்ணைவிளக்கு ஏற்றுவதும் தோஷம் தீர அல்லது அதன் உக்கிரம் குறைக்கும் வழிகள் யார் எது சொன்னாலும் அப்படியே செய்து வந்தனர்.

ஜானுவின் காதலும் ஏதாவது ஒருவிதத்தில் கை நழுவிக்கொண்டிருந்தது. காதலைக் கூட சீரியசாக ஜானு நினைக்கவே இல்லை. ஒன்று போனால் இன்னொன்று என்ற பார்முலாவைத்தான் பயன்படுத்தி வந்தாள். ஜானுவை காதலித்தவர்களின் எண்ணிக்கை அல்லது ஜானு காதலித்தவர்களின் எண்ணிக்கை சுமார் இருபத்தைந்தை கடந்துவிட்டாலும் மனம் தளாராத ஜானு மறுபடியும் காதல் வயப்படுவது சகஜமாகிபோனது.

பரீட்சைகள் எழுதி எழுதி பழகிப் போனதால் வங்கியில் வேலை கிடைத்து ஊட்டி கிளையில் சேர்வதற்கு கடிதம் வந்தது, அடுத்த வீட்டுகாரர் தோழிகள் தோழர்கள் என்று யாரிடமும் வேலை கிடைத்த செய்தியை ஒரு வார்த்தை கூட சொல்லாமல், ஊட்டிக்கு தன் மகளை அழைத்து சென்று இரண்டு நாள் அங்கு தங்கி மகள் வேலைக்கு போகும் புதிய இடத்தை பார்த்துவிட்டு ஊர் வந்து சேர்ந்தார் தாமோதர்.

தொடரும்.......