Translate

1/15/2010

செவ்வாய் தோஷம் - 1

நடுத்தர வர்க்கம் நிறைந்திருக்கும் இந்திய நாட்டில் ஒரே மகளாய் பிறந்தால் கூட படிக்கவைப்பது கனவாகவே இருக்கும், பெண்ணாக பிறப்பதிலிருக்கும் பிரச்சினைகளுடன் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் வேறு சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும் ஜானுவும் அப்படிப்பட்டவர்களில் ஒருத்தி.

இரண்டு அண்ணன், ஜானுவின் அப்பா தாமோதர் அரசு நிறுவனமொன்றில் பணிசெய்து ஓய்வுபெற்றவர், உடலும் மனமும் திடகாத்திரத்துடன் இருந்தார், இரண்டாவது அண்ணன் பிறந்ததிலிருந்தே இதயத்தில் தீராத வியாதி, மருத்துவச் செலவுகள் மாதம்தோறும் மளிகை சாமான்கள் வாங்குவதைப்போல மருந்துகள் வாங்கியாகவேண்டிய அவசியம். மறுபடியும் தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வந்தார்.

மகேஷ் ஜானுவின் பெரியண்ணா, மேல் படிப்பில் நாட்டமில்லை பள்ளியுடன் படிப்பை நிறுத்திவிட்டான், அதற்க்கு பின் எலெக்ட்ரீஷியன் பட்டயப்படிப்பை முடித்து வேலை பார்த்துவந்தான். பதினேழு வயதில் ஜானுவின் இரண்டாவது அண்ணா இறந்துவிட்டான். ஆனாலும் ஜானுவின் அப்பா தாமோதரன் தனியார் நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார்.

ஜானுவின் கல்லூரி படிப்பு தபால் மூலம் தொடர்ந்தது, இதற்கிடையில் தினசரிகளில் வெளியாகும் மாநில மத்திய அரசுகளின் சர்வீஸ் கமிஷன் பரீட்சைகள் வங்கிகளில் ரெக்ரூட்மென்ட் என்று வெளியாகும் வேலைக்கான விண்ணப்பங்களை வாங்கிவந்து ஜானுவிடம் பூர்த்திசெய்து தானே கொண்டு சென்று தபாலில் சேர்த்து, அதற்கான புத்தகங்கள் வாங்கி கொடுத்து ஜானுவை படிக்க சொல்லுவார் தாமோதர். நிரந்தர வேலை ஜானுவிற்கு அவசியம் என்று தாமோதர் நம்பினார், இதற்க்கு முதல் காரணம் ஜானுவிற்கு ஜாதகத்திலிருந்த செவ்வாய் தோஷம்.

தொடரும் .............