Translate

1/11/2010

தொலைகாட்சிகளில் முதன் முறையாக

புதிய திரைப்படங்கள், புதிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு என்று தொலைகாட்ச்சிகள் போட்டிப் போட்டுக்கொண்டு ஒளிபரப்பிவருகின்ற சமீபத்திய நாட்களில் சன் தொலைக்காட்சியில் இரவு பதினோருமணிக்கும் விஜய் தொலைக்காட்ச்சியில் இரவு பத்து மணிக்கும் ஒளிபரப்பாகும் நிஜங்களைப் பற்றிய நிகழ்ச்சிகள் மிகவும் அருமை, இதில் மூன்று தொலைகாட்ச்சிகளும் ஒரே சமயத்தில் சிறப்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்களை [ரசிகர்களை] எதை பார்ப்பது எதை தவிர்ப்பது என்கின்ற இக்கட்டான முடிவிற்கு விட்டுவிடுவது தான் தர்மசங்கடமான நிலைமை.

சில சமயங்களில் மூன்று தொலைகாட்ச்சிகளிலும் [சன், விஜய், கலைஞர்] பார்க்கவேண்டிய நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் போது தான் என்னைப் போன்றவர்களின் பாடு திண்டாட்டமாகி விடுகிறது. இதே போன்று பண்டிகை காலங்களிலும் இதே தத்தளிப்புதான். குடும்பத்தலைவிகள் பண்டிகை நாட்களில் பெரும்பாலும் சமையிலறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்ப்படும் போதும் நிகழ்ச்சிகளை பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் மேலோங்குவது தவிர்க்க முடியாதது.

விளம்பரதாரர் ஒருவரின் மிக சரியான குரல் ஒன்று பண்டிகைக்கு அல்லது வேறு சில நாட்களிலும் கூட 'தொலைகாட்சிகளில் முதல் முறையாக,' என்று கணீரென்று ஒலிக்கும் போது மனதில் ஆவலைத் தூண்டும், அந்த விளம்பரத்தின் குரலுக்குச் சொந்தகாரர் யாராக இருந்தாலும் மிகச் சரியான தேர்வுதான் அந்த குரல்.

ஆனால் நம்மை தூண்டும் ஆர்வம் 'திரைக்கு வந்து சில மாதங்களே [வாரங்களே] ஆன' என்று சொல்லுகின்ற போது பல கேள்விகள் தோன்றுகின்றன, திரைப்படத்தின் கதை நன்றாக இருக்காதோ, நடித்தவர்களும் இயக்குனரும் புதியவர்களாக இருக்குமோ என்றெல்லாம் நினைக்கத்தோன்றும் ஆனால் அதே சமயத்தில் இன்றைய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் மிகவும் கடினமான பண மற்றும் முன்னேற்றப் பாதைகளின் சோதனைகளை பற்றி சிறிது அறிந்திருப்பதால் என் நினைவிற்கு வருவது அவர்களின் நிலையைப் பற்றிதான்.

சிலருக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் சில சம்பவங்கள் அல்லது சில நிகழ்வுகள் சிலருக்கு தீராத வேதனைகள்.