Translate

1/10/2010

நான் ரசிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்ச்சியில் வெளிவந்துக் கொண்டிருக்கும் 'நாளைய இயக்குநர்' என்கின்ற புதிய நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி. திரைப்படத்துறைக்கு புதியவர்களாக வருகின்ற ஆர்வமும் திறமையும் மிக்க இளைஞர்களுக்கு இந்நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளது மட்டுமில்லாது அவர்களது திறமைகளை சோதிக்கும் வகையில் அவர்களுக்கு கொடுக்கப்படும் தலைப்புக்களும் அதில் அவர்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமும் மிகவும் அருமை.

விஜய் தொலைக்காட்ச்சியில் மட்டுமே தனிப்பட்ட மற்றும் வித்தியாசமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் கலைஞர் தொலைக்காட்ச்சியின் புதிய நிகழ்ச்சிகள் மிகவும் நன்றாகவும் சுவாரசியமாகவும் உள்ளது.

மானாட மயிலாட என்கின்ற நிகழ்ச்சியின் அரங்க அமைப்புக்களும் உடைகளும் திரைப்படங்களை மிஞ்சுகின்ற அளவிற்கு நாளுக்கு நாள் மிகவும் வண்ண மயமாகவும் அழகாகவும் உள்ளது, பூதக்கண்ணாடி நிகழ்ச்சியும் நடப்பில் உள்ள பல விவரங்களை வெளி உலகிற்கு தெளிவாக எடுத்துச் சொல்லுகிற நிகழ்ச்சியாகவும் சுவாரசியமான தகவல்களையும் கொண்டதாகவும் உள்ளது.

மாறுதலான நிகழ்ச்சிகள் மற்றும் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மக்களின் வரவேர்ப்பறைக்கே வருவது மிகவும் அருமை.