Translate

1/22/2010

நிஜமுகங்கள் - 1

தினசரி நாளேடுகளை வாசிப்பதில் அத்தனை சுவாரசியம் ஏறப்படுத்திகொள்வது கிடையாது, ஏனோதானோ என்று தலைப்பு செய்திகளை மட்டும் பார்த்துவிட்டு வைத்தபின் வேறு யாராவது படித்துவிட்டு ஒழுங்காக மடித்து வைக்காமல் அப்படியே போட்டு விட்டு போவதை பார்த்து என்னால் சும்மா இருக்க முடியாது எல்லா பக்கங்களையும் அடுக்கி வைக்கும் பழக்கம் உண்டு, அப்படி வைத்து கொண்டிருந்தபோது இருபத்து ஐந்து வயது பெண்ணின் ஆபிச்சுவரி என்னை திடுக்கிட வைத்தது,

சுமாரான உயரம் சிவந்த நிறம், நடுத்தரமான உடல் கட்டமைப்பு, அவள் பெயர் பத்மினி, என்னுடன் பள்ளியில் படித்தவள், எனது வகுப்பில் அவள் உடன் படிக்கவில்லை என்றாலும் அவரவர் தேர்ந்தெடுத்த விருப்பபாடங்களுக்கேற்றபடி வெவ்வேறு வகுப்பில் படித்து வந்தோம், அவளும் நானும் பேசியதே கிடையாது, பள்ளி முழுவதும் அப்படி தெரிந்தும் பேசி இராதவர்கள் நிறைய பேர் இருந்தனர், இவளும் அவர்களில் ஒருத்தியாக இருந்தவள்.

இன்று அவளது புகைப்படத்தின் கீழே பிறப்பும் இறப்பும் தேதி குறிப்பிடபட்டு இருந்ததை பார்க்கும்போது இத்தனை சீக்கிரம் இறந்துவிட்டாளா என்று ஒருகணம் மனது துடித்துப் போனது. பள்ளித்தோழிகளின் தொடர்பு இல்லாததால் யாரிடமும் விசாரித்து தெரிந்து கொள்ள முடியாமல் போனது.

ஒருநாள் எனது ஒருவயது நிரம்பிய குழந்தையை மருத்துவரிடம் தடுப்பூசி போடுவதற்காக எடுத்துச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் எனது பள்ளித் தோழி ஒருத்தியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது, அவளுக்கும் என்னிடம் நீண்ட நேரம் பேசுவதற்கு விருப்பமிருந்தாலும் அலுவலகம் சென்றுகொண்டிருந்த சமயம் என்பதால் அவளிடம் நீண்ட கதைகளை பேச முடியவில்லை, கிடைத்த சந்தர்ப்பத்தில் மறவாமல் பத்மினியின் புகைப்படம் பிரபல ஆங்கில தினசரியில் ஆபிச்சுவரி பகுதியில் வெளியாகி இருந்ததைப் பற்றி சொன்னேன்.

தொடரும்....