Translate

12/12/2009

கோடீஸ்வரன் - 5

நடிகை மெலிசாவுடன் நட்பு தொடர ஆரம்பித்தது, தான் எழுதிய கதைகள் கவிதைகளை நடிகை மெலிசாவிடம் காண்பித்தான், தனக்கு நன்றாக கவிதைகள் எழுத முடியும் என்பதால் சினிமாவில் எழுதுவதற்கு வாய்ப்பு பெற்று தருமாறு கேட்டிருந்தான். மெலிசாவிற்க்கு தெரிந்திருந்த சில திரைப்பட தயாரிப்பாளர்களிடம் சொல்லி திரைப்படத்தில் பாட்டுக்கள் எழுத வாய்ப்புகள் கிடைத்தது, கோடீஸ்வரனின் கதையொன்றை திரைப்படம் தயாரிக்க வாய்ப்பும் மெலிசாவின் மூலம் கிடைத்தது.

பெரிய பங்களா கார் என்று வசதிகளை பெருக்கிகொண்டான் கோடீஸ்வரன், திரைப்படங்களில் தனது இயர்ப்பெயரில் பாடல்கள் எழுதாமல் புனைப்பெயரில் எழுதி பிரபலம் அடைந்து வந்தான். தற்போதுள்ள வசதியான வாழ்க்கைக்கு ஏற்ப மிகவும் வசதியான வீட்டிலிருந்து பெண் கொடுக்க முன் வந்தனர், வசதியான வீட்டு பெண்ணை திருமணம் செய்துகொண்டு அதுநாள் வரையில் பத்திரப்படுத்தி வைத்திருந்த தங்க வைர நகைகளை தன் மனைவிக்கு கொடுத்து அலங்கரித்தான்.

தன் வாழ்க்கையில் நடந்த கதையை எழுதி பிரபல திரைப்பட கதாநாயகனிடம் கொடுத்த போது கதை சில சிறிய திருத்தங்களுக்குப் பின் திரைப்படமாக்கப்பட்டு திரையரங்கங்களில் அமோகமாக ஓடிக்கொண்டிருந்தது, திரைபடத் தயாரிப்பை கோடீஸ்வரன் சில கோடிகளை முதலீடு செய்து எடுத்திருந்தான். அந்த திரைப்படம் பல கோடிகளை சம்பாதித்து கொடுத்தது, கோடிகளை சம்பாதித்துக் கொடுத்த அந்த திரைப்படத்திற்குப் பின்னர் கோட்டி திரைப்படங்களை எடுப்பது இல்லை. கோடிகளை ஒளித்து வைக்க இனிமேல் நிலவறை தேவைபடாது என்பதால்.

முற்றும்