Translate

12/12/2009

கோடீஸ்வரன் - 4

மூன்று லட்சம் ரூபாயுடன் சொந்த கிராமத்திற்கு வந்து அக்காள் கௌரியின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடித்துவிட்டு மீண்டும் தான் தங்கி இருந்த பழையனூர் கிராமத்திற்கு வந்து சேர்ந்தான் கோட்டி, அடுத்திருந்த நெசவுத் தொழில்சாலையில் சில மாதங்களும் மற்றும் வேலை எங்கெல்லாம் கிடைக்கிறதோ அங்கேயெல்லாம் சென்று வேலை பார்த்து வந்தான். இதனால் கோட்டியின் மீது யாருக்கும் துளியும் சந்தேகம் ற்ப்படுவதற்க்கு வழியே இல்லாமல் போனது.

சில வருடங்கள் இப்படியே சென்றது, அடுத்திருந்த கிராமத்திலிருந்து பல மையில் தூரத்திலிருக்கும் இடத்தில் ஒரு தனி வீடு விலைக்கு வந்தது அதை சொற்ப விலைக்கு வாங்கி அந்த வீட்டிற்கு குடி பெயர்ந்தான் கோட்டி. அதற்க்கு முன்பதாக இத்தனை வருடம் வசித்து வந்த வீட்டில் வைத்திருந்த நிலவறையை மறக்காமல் மீண்டும் மூடிவிட்டு சென்றான்.

கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியது போன்ற நிலையை உருவாக்கி தனக்கு கிடைத்த பணத்தை மிகவும் ஜாக்கிரதையுடன் வைத்திருந்தான். கோட்டிக்கு அவனது வீட்டில் திருமணம் செய்வதற்கு பெண் பார்க்கத் துவங்கினர். பார்க்கும் ஒவ்வொரு பெண்ணையும் ஏதேனும் காரணங்கள் சொல்லி திருமணத்தை தவிர்த்து வந்தான்.

ஒரு நாள் அவன் வசித்துவந்த பகுதியில் திரைப்படம் எடுக்க ஒரு குழுவினர் வந்திருந்தனர். அந்த குழுவில் நடிக்க வந்திருந்த பிரபல நடிகை உடை மாற்றுவதற்கு அவனது வீட்டை கேட்ட போது அவனால் தடை சொல்ல முடியவில்லை. அந்த திரைப்படக் குழு ஒரு வாரம் அங்கு தங்கி பதிவு செய்து கொண்டு சென்றனர். அப்போது அந்த பிரபல நடிகையுடன் நட்பு ஏற்பட்டது.

தொடரும்...