Translate

12/04/2009

2012 - END OF THE WORLD - திரைப்படம்


வரலாற்றுத் திரைப்படங்கள், உண்மைச் சம்பவங்களை கொண்ட திரைப்படங்கள், பைபிளில் உள்ள சம்பவங்களைப்பற்றிய திரைப்படங்கள், அமெரிக்கா அழிந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை திரைப்படம் என எத்தனையோ திரைப்படங்களை ஹாலிவுட்டில் தயாரித்திருந்தாலும், சில திரைப்படங்களை பார்க்கும் போது நிஜமான சூழ்நிலைக்கே நம்மை கொண்டு செல்லும் சுவாரஸ்யம் மிகுந்த திரைப்படங்கள் மட்டும்தான் என்றும் நம் நினைவில் நிற்கின்றன, TEN COMMANDMENTS, BEN HUR, TITANIC (New), Steven Speilbergன் திரைப்படங்கள் போன்ற பல ஹாலிவுட் திரைப்படங்களை இதற்கு உதாரணம் கூறலாம்.

க்ராஹாம்
ஹான்காக் [ Graham Hancock] என்ற எழுத்தாளர் எழுதிய Fingerprints of the God என்ற ஆங்கில நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது இத்திரைப்படம் என்பதால், க்ராஹாம் மாயர்களின் காலண்டரில் 24, டிசம்பர் 2012 வருடத்திற்குப் பின் வேறு எண்கள் குறிப்பிடப்படவில்லை என்பதால், உலகம் அதற்குப் பின்னர் இருக்கப்போவதில்லை என்பதற்கு காரணம் என்று கூறுகிறார்.

அதுமட்டுமிலாமல் அறிவியல் ஆராய்ச்சிகளின் முடிவுகளும் இதற்க்கு காரணம் என்று சொல்லுகிறார், பூமியின் மேற்பகுதி வலுவிழந்து இருப்பதும் இதனால் உலகமுழுவதும் பல இடங்களில் பூமி பிளந்து அங்குள்ள ஊர்கள் பூமியினுள் புதைந்து போகும், நிலச்சரிவுகள் ஏற்ப்படும் இதனால் சமுத்திரத்தில் சுனாமி ஏற்பட்டு ஊர்கள் கடலுக்குள் போய்விடும் என்று எழுதியுள்ளார்.

உலகம்
அழிவதை படமாக்கி இருப்பது டைட்டானிக்கை உருவாக்கிய ஜேம்ஸ் காமரன்னாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக சித்தரித்திருப்பார் என்று நினைக்க வைக்கிறது, அல்லது Steven Speilberg எடுத்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும். இருந்தாலும், இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கும் மற்ற திரைப்படங்களை பார்ப்பதற்கும் உள்ள ஒரு மிகப்பெரிய வித்தியாசம், மற்ற திரைப்படங்கள் பார்க்கும் போது நம் மனதினுள் 'இப்படியெல்லாம் நடந்திருக்கிறதே' என்று தோன்றும், சில திரைப்படங்களை பார்க்கும் போது 'இது யாரோ ஒருவருடைய கற்ப்பனைத்தானே, உண்மை இல்லையே' என்று தோன்றும், இந்த திரைப்படத்தை பார்க்கும் போது இன்னும், 'இரண்டு வருடத்தில் உண்மையாக நடக்கப் போகிற, யாராலும் தவிர்க்க முடியாத ஒரு பேரழிவைப் பற்றிய உண்மையைக் கூறும் திரைப்படத்தை பார்க்கிறோமே' என்று வித்தியாசமாக சிந்திக்க வைக்கிறது.

திரைப்படம்
என்னைப் பொறுத்தவரையில் திகிலூட்டவில்லை, ஏனென்றால் எடுத்தவர் மற்றும் இயக்கியவர், நடித்தவர்கள் வேறாக இருந்திருந்தால் உண்மையிலேயே திகைப்படைய வைத்திருக்கும் என்று தோன்றுகிறது.