Translate

12/07/2009

கோடீஸ்வரன் - 1

கிளைகளுக்கிடையில் சூரியனின் கதிர்கள் புகுந்து வந்து மரத்தின் நிழலிலும் சூட்டை பரப்பிக் கொண்டிருந்தது, அந்த கிராமத்திலிருந்த ஒரே பள்ளிக்கூடம், பள்ளிக்கூடத்தின் மேற்க் கூரைகள் ஒன்றும் இல்லாமல் போனதன் விளைவு அருகிலிருந்த மரத்தினடியில் பள்ளிக்கூடம் மாற்றபட்டிருந்தது, மொத்தமே இருபது சிறுவர்கள் ஒரு வாத்தியார், இது தான் அந்த கிராமத்தின் பள்ளிக்கூடம், அரசு பள்ளிக்கூடம் ஒன்று அடுத்த கிராமத்தில் இருந்தது, அதற்க்கு சென்று படிக்கும் மாணவர்களும் அந்த கிராமத்தில் உண்டு.

கோட்டி அவனது பெற்றோருக்கு கடை குட்டி என்பதால் பள்ளிக்கு அனுப்பினர், மூத்த இருவரும் சகோதரிகள், விவசாய வேலைக்குச் செல்லுவதும் விவசாய வேலைகள் இல்லாத சமயங்களில் ஊரின் அருகே இருந்த நெசவு தொழில்சாலையில் சென்று வேலை செய்து வந்தனர். வாயிக்கும் வயிற்றிக்கும் எட்டாத பிழைப்பில் பெண்களுக்கு எதற்கு படிப்பு என்பது அவர்களது எண்ணம்.

கோட்டியின் முழு பெயர் கோடீஸ்வரன், பெயரிலாவது கோடிகள் இருந்துவிட்டு போகட்டுமே என்பதோ, அல்லது பையன் கோடீஸ்வரனாகி விடுவான் என்ற கனவோ தன் மகனுக்கு கோடீஸ்வரன் என்று பெயர் வைத்திருந்தனர். படிப்பில் ஆர்வம் இருந்தாலும் வறுமை படிப்பில் முழு கவனம் செலுத்தவிடவில்லை. தன் மகனை அரசு பள்ளியிலாவது படிக்க வைத்துவிடவேண்டும், தங்களைப் போல கூலித்தொழிலாளியாகி விடக் கூடாது என்பது பெற்றோரின் ஆசை.

கோடீஸ்வரனுக்கு பக்கத்து கிராமத்திலிருக்கும் பள்ளியில் சேர்ந்து படிக்க விருப்பம் தெரிவித்தவுடன் பக்கத்து கிராமத்திலிருக்கும் அரசு பள்ளியில் சேர்த்தனர். மதிய உணவிற்கு சிலநாள் தனக்கு கஞ்சி இல்லை என்றாலும் பழைய கஞ்சியை தூக்கு பாத்திரத்தில் ஊற்றித்தருவாள் மூத்த அக்காள் கௌரி.

கோடீஸ்வரன் மிகவும் போராடி ப்ளஸ் டூ முடித்து அடுத்திருந்த பட்டினத்தில் அரசு கல்லூரியில் படிக்க சேர்ந்தான்.

தொடரும்....