Translate

11/03/2009

சொல்ல முடியாத கதை 2

Tuesday 3 November 2009

கர்பமுற்ற
ஜானகி விக்டர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தாள், இதை ஏற்க மறுத்த விக்டரை விக்டரின் தாய் ஷீலாம்மாவிடம் நடந்ததை சொல்லி விடுவதாக பயமுறுத்தி வந்தாள். இந்நிலையில் தன் மனைவியின் தவறான உறவு சிங்காரத்திற்கு தெரிய வந்தது, மனைவி ஜானகியின் தாய் அண்ணன் என்று இருந்த அத்தனை பெரியவர்களிடம் முறையிட்டார், அவர்கள் ஜானகிக்கு பல வழிகளில் புத்திமதிகள் கூறியும் கேட்காத ஜானகி ஒரு ஆண் குழந்தைக்கு மறுபடியும் தாயானாள்.

தான் பெற்றிருக்கும் ஆண் குழந்தைக்கு தகப்பன் விக்டர் தான் என்று கூறி சிங்காரத்திடமிருந்து பிரிந்து வந்து தன் தாயுடன் வாழத் தொடங்கினாள் ஜானகி. சிங்காரத்துடனான உடலுறவை விக்டரிடம் தொடர்பு ஏற்படுவதற்கு முன்பே விட்டு விட்டதனால் சிங்காரத்திர்க்கும் பிறந்திருக்கும் குழந்தையின் தகப்பன் தான் இல்லை என்பது தெரிந்திருந்தது.

தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இந்த தவறான உறவுபற்றி தெரிந்து விட்டால் குடும்பத்தினருக்கு பெருத்த அவமானம் என்பதால் ஜானகிக்கு அவ்வப்போது கேட்க்கும் தொகையை கொடுத்து சரிகட்டி வந்தான் விக்டர். இந்நிலையில் விக்டர் இந்த பிரச்சினையிலிருந்து விடுபட ராணுவத்தில் சேர்ந்து காஷ்மீருக்கு அனுப்பபட்டான்.

விக்டருக்கு பெற்றெடுத்ததாக ஜானகி கூறிய ஆண் குழந்தைக்கு பாலன் என்று பெயர் வைத்தாள் ஜானகி, ஆண்டுகள் கடந்தன, விக்டர் விடுமுறையில் வரும்போதெல்லாம் ஜானகியுடனான தொடர்பு தொடர்ந்து வந்தது, இதற்கிடையில் விக்டரின் தாய் ஷீலாம்மாவும் காலமாகி விட்டார். விக்டரின் தந்தையும் ஷீலாம்மாவை தொடர்ந்து காலமாகி விட்டார். விக்டரின் அண்ணன்களான சந்துரு, சினேகன் மற்றும் விஜயனுக்கு விக்டர் ஜானகியின் ரகசிய தொடர்பும் அதனால் பிறந்த குழந்தையும் மற்றும் இந்த தொடர்பால் ஜானகி தான் திருமணம் செய்த கணவனை விட்டு பிரிந்து விக்டருடன் தொடர்பை தொடர்வதும் தெரிந்து விட்டது.

தொடரும் .....