Translate

10/22/2009

விடாகண்டன் கொடாகண்டன்

விடாகண்டன் என்பவர் காவிரி நீரை தமிழகத்திற்கு விடாதவர்கள், கொடாகண்டன் என்பவர்கள் முல்லைபெரியாரனையின் பிரச்சினைகளை பெரிதுபடுத்திவரும் அண்டை மாநிலத்தவர்.

தமிழகத்திற்கு தண்ணீர் காட்ட வேண்டும் என்பது அண்டை மாநிலங்களின் எண்ணமானால் தண்ணீர் மழையாக கிடைத்துவிட்டு போகிறது, தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கொடுக்காதவர்களை விடாகண்டர்கள் கொடாகண்டர்கள் என்று சொல்வதில் என்ன தவறு.

இருக்கவே இருக்கு கடல்நீர், உப்பு நீரை சுத்தநீராக மாற்றும் வசதிகளை மேம்படுத்திகொள்வோம் என்றால் மழை பொய்த்துப் போனாலும் தண்ணீர் கிடைக்க வழி பிறந்துவிடும்.

மக்களுக்கு விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தேவையான நீரை பருவ மழை நிச்சயம் கொடுத்துவிடும், கர்நாடகாவில் மழை பெய்தாலும் கூட நீர் வரத்து நதிகளில் கிடைத்துவிட்டு போகிறது. கர்நாடகாவிலும் மழை பெய்யவில்லை என்றால் கடல் நீர் போதாதா.

ஆளும் கட்சியின் சாதனைகளில் முல்லைபெரியார் அணை, சேதுசமுத்திர திட்டம், காவிரிநீர் போன்றவை இடம் பெற்றுவிடக்கூடாது என்பது இவர்களது நோக்கம் என்றால், அப்பாவி பொது மக்களின் நிலை என்ன, வயிற்றில் அடிப்பது பொதுமக்களைத்தானே தவிர ஆளும் கட்சியின் சாதனைகளை அல்லவே.