Translate

10/27/2009

குடியிருந்த கோவில்

அன்னை ஓர் ஆலயம், குடியிருந்த கோவில் என்றெல்லாம் அன்னையின் மகிமையைப் பற்றிய பழைய திரைப்படங்கள் வந்த காலங்கள் உண்டு, தற்ப்போது உறவுகளைப்பற்றிய சிந்தனை மிகவும் குறைந்து வருகின்ற காலமாக இருந்து வருகிறது, தாய்க்கும் பிள்ளைகளுக்குமான பாசப் பிணைப்பு குறைந்து கொண்டே வந்து நாளடைவில் இல்லாமலே போய்விடுமோ என்ற அச்சம் ஏறப்படுவதும் உண்டு.

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள பாசமானது இயற்கையிலேயே மிகப் பெரிய பாசம், மற்ற உறவுகளிடத்து இருக்கும் பாசத்தைவிட மிகவும் சக்திவாய்ந்தது, காலம் எதையெல்லாம் மாற்றும் என்பதற்கு உதாரணம் தாய் பிள்ளைகளுக்கு இடையே பாச பிரிவு வலுத்து வருவது ஓர் உதாரணம், குழந்தைகளை பெற்றெடுத்த தாய் அந்த குழந்தைகளுக்காகவே வாழ்ந்த காலம் மாறி குழந்தையை விற்று அதில் கிடைக்கும் பணத்திற்காக வாழும் அதிசயங்களும் நடந்து வருவது காலத்தின் கொடுமை என்றே சொல்ல முடிகிறது.

வாழ்வில் ஏதேனும் பிரச்சினை என்று வந்தவுடன் முதலில் கோவில்களைத் தேடி ஓடுவதும் தெய்வத்திற்கு செலவழிக்கும் பணமும் நேரமும் பெற்ற தாய் தந்தையர்க்கு செலவழித்தாலே சுபீட்சம் நிறையும் என்பதை மக்கள் எப்படி அறியாமல் இருக்கின்றனர் என்பது ஆச்சரியமே. 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்ற அவ்வை மூதாட்டியின் வாக்கை படிக்கத்தவரியதன் விளைவோ அல்லது அவையெல்லாம் ஏட்டு சுரைக்காய் என்ற அறியாமையின் காரணமோ விளங்கவில்லை.

பெற்ற பிள்ளைக்கு தன் பாலை ஊட்டி வளர்க்கும் போதும் உறங்க வைக்கும் போதும் அன்னை குழந்தைக்கு சொல்லித் தரும் கதைகள் மூலம் வயிறும் நிரம்பி கதையின் மூலம் அறிவையும் நிரப்பி வளர்க்க தவறி வேலைக்குச் செல்லும் அவசரங்கள் நிறைந்த வாழ்க்கைச் சூழல் காரணமோ, குழந்தை வளர்ப்பே அறியாத தாய் தன் குழந்தையை வளர்க்க வேலைக்காரியை வைத்துக் கொள்வதன் விளைவா தாய் மகவின் பாசப் பிணைப்பு குறைந்து போக காரணம். புரிந்துகொள்ள இயலவில்லை.

பெற்ற பிள்ளையை வளர்க்கும் முறை அறியாது பாசம் என்றப் பெயரில் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் பதிலாக பணத்தையும் வாழ்க்கையின் சுக போகங்களின் ருசியையும் கொடுத்து வளர்த்தத்தின் விளைவோ, எங்கே எப்படி தவறியது இந்த அருமையான பாசம் என்று விளங்கவில்லை. முடிவு தாய் தந்தையரை தவிக்க விட்டு வெளிநாட்டிற்கு பணம் ஈட்டும் மும்முரத்தில் காப்பகங்களிலும் வேலைகாரர்களின் துணையோடும் நிர்கதியாய் நிற்க வைத்துவிட்டு போக வைப்பது எது,

பாசம் எங்கே போனது தெரியவில்லை, வாழ்க்கையில் கஷ்டங்களும் தொல்லைகளும் நோயின் கொடுமையும் அதிகரிக்கும் போது தெய்வபக்தி அதிகரித்து விடுவதும் வியப்பானதே. தெய்வம் எப்படி நன்மை செய்துவிடும் என்று எதிர்ப்பார்க்க முடிகிறது என்பது நகைப்பிற்குரியது. தெய்வத்திடம் வேண்டிக்கொண்டு வேண்டுதல் செலுத்தினால் தெய்வம் நன்மை செய்யும் என்றால் தெய்வத்திற்கு பணம் தேவைப்படுகிறதா, கைம்மாறு எதிர்பார்க்கும் குணாதிசயம் கொண்டதா தெய்வம்?

10/26/2009

கோவிலில்லா ஊரில்....


ஆகஸ்ட்டுமாத இறுதியும் செப்டம்பர் மாதமும் கோவில்களில் திருவிழாக்கள் என்பதால் கோவில் அமைந்திருக்கும் தெருக்களிலோ வீதிகளிலோ அலங்காரங்களும் அலங்கார விளக்குகளும் ஒலி பெருக்கிகளும் காணப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது, தடை செய்யப்பட்ட பழைய ஒலி பெருக்கிகளையே தற்ப்போதும் பயன் படுத்தி வருவதால் சத்தம் காதை பிளந்து விடும் போன்றுள்ளது, கோவில்களை அடுத்திருக்கும் குடி இருப்புகளில் குடி இருப்போரும் தெருவை கடந்து செல்லும் வாகனங்களும் ஒலி பெருக்கியிலிருந்து வரும் அதிக பட்ச சத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்படுவது சகஜம். இதனால் சில இடங்களில் விபத்துக்களும் ஏற்ப்படுகிறது.

சிறிய குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மற்றும் உடல் நலமில்லாதவர்களை இந்த ஒலிபெருக்கியின் சத்தம் இம்சைப்படுத்தி வருவதோடு நில்லாமல் உடல் நலக் குறைவை அதிகப்படுத்துவதாகவே உள்ளது , வீட்டிலிருக்கும் தொலைபேசியின் அழைப்பு மணியோசை கேட்காமல் பல தொலைபேசி அழைப்புகள் சத்தத்தின் மிகுதியால் நிராகரிக்கபடுவதும் வாடிக்கை, இப்படி பல பாதிப்புகளை ஏற்ப்படுத்தும் ஒலிபெருக்கிக்கு மின்சாரம் தெருவிளக்கிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் மின்சாரத் தொடர்பிலிருந்து எடுக்கபடுவதாக கூறப்படுகிறது.

அந்த காலத்தில் ஒரு பழமொழி உண்டு, 'கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் ' என்று, ஆனால் கோவில் திருவிழாக்கள் பெரும்பாலும் தெருவிழாக்களைப்போல நடத்தப்படுவதால், திருவிழாக்களின் போது பயங்கர சத்தம் ஏற்ப்படுத்தக்கூடிய வெடிகளை இரவு 10 மணிக்கு மேல் வெடித்து குலை நடுங்க வைப்பதாலும், 'கோவில் இல்லாத ஊரில் குடி இருப்பதே' சிறந்ததாக இருக்கும் என்ற நிலை உருவாகி வருகிறது.

ரயில் - முன்பதிவு

Monday, 26 October 2009


இந்தியாவிலிருக்கும் போக்குவரத்து வசதிகளில் எல்லாதர மக்களும் நம்பியிருக்கும் ரயில் போக்குவரத்து, இந்திய நாட்டின் அதிக மக்கள் பயணம் செய்யும் போக்குவரத்தாகவும் இருந்து வருகிறது, இத்தகைய வசதியை வெள்ளைக்காரன் கொடுத்துவிட்டு போகாமல் இருந்திருந்தால் இன்றைய கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் வேலை வாய்ப்பிற்கும் போக்குவரத்திற்கும் மாற்றாக எதை பயன்படுத்தி இருக்க கூடும் என்று நினைக்கும் போது ரயில் சேவையின் மகத்துவம் பற்றி உணர முடிகிறது.

மிகவும்
முக்கியமாக விளங்கும் ரயில் போக்குவரத்து மக்களின் பெருக்கத்திற்கு ஏற்ப பல வசதிகளை அதிகபடுத்திவந்தாலும், பயணச் சீட்டு முன்பதிவு என்ற மிகப்பெரிய சிறப்பான வசதியை ஏற்படுத்தி இருப்பது பல விதங்களில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக உள்ளது,

அதிகரித்து
வரும் பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க ரயில்களை அதிகரித்துள்ளதும், கணி
ணி மூலம் முன்பதிவு, இணையதளத்தின் மூலம் முன்பதிவு என்று பல சிறப்பான வழிகளை முன்பதிவிற்க்கென ஏற்ப்படுத்தியுள்ளது மிகவும் சிறந்த முறையாக விளங்கி வருகிறது. குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்வதற்கு கூட இயலாமல் எல்லா ஊர்களுக்கும் முன்பதிவு நிரம்பி காணப்படுவது, அதிசயம் ஆனால் உண்மை.

இதை
பற்றி அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதாக தெரியவில்லை, அத்தனை
பயச்சீட்டுகளையும் முன்கூட்டியே அத்தனை சீக்கிரத்தில் எப்படி யார் முன்பதிவு செய்து நிரப்பிவிடுவார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது, இதனால் மக்களுக்கு பலவிதத்தில் தொல்லையாகவே இருந்து வருகிறது, எந்த ஊருக்கு முன்பதிவு செய்ய வேண்டுமானாலும் இதே நிலைமைதான்.

பயணச்சீட்டுகளை
மொத்தமாக முன்பதிவு செய்து ஏஜெண்டுகள் நிரப்பிவிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது, கமிஷனுக்காக ஏஜெண்டுகள் எல்லாப் பயணச்சீட்டுகளையும் முன்பதிவு செய்துவிடுவதால் பொதுமக்கள் முன்பதிவு செய்யும்போது முன்பதிவு செய்ய முடியாமல் போகிறது
என்று கூறப்படுகிறது.

இந்திய
தேசத்தின் பெரும்பாலான மக்களின் போக்குவரத்திற்கு அருமையான வசதியாக ரயில் இருந்தும் கமிஷன், ஏஜெண்டு என்ற குறுக்கீடுகளால் முன்பதிவு வசதி கிடைக்காமல் பலர் அவதிக்குள்ளாவது நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்த பிரச்சினையை தவிர்க்க அரசும் அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கைகளை மேற்க்கொள்ளாவிடில் இதற்க்கு தீர்வு காண்பது கடினம்.

10/24/2009

போக்குவரத்துஏறக்குறைய முன்னூறு நானூறு ஆண்டுகளாய் மதராஸ் பட்டினத்தின் நடுவில் பரம்பரையாய் வாழ்ந்து வரும் எங்கள் முப்பாட்டன் காலந்தொட்டு மதராஸ் பட்டினத்தில் ஏற்ப்பட்டு வரும் மாற்றங்களை காண்பதற்கு பிரம்மிப்பாய் தான் இருக்கிறது, என் கொள்ளு தாத்தாவின் காலத்தில் மதராஸில் இருந்த போக்குவரத்திற்கும் தற்போதிருக்கும் போக்கு வாரத்திற்கும் எத்தனை மாற்றங்கள், கொள்ளு தாத்தாவின் ஆத்மா மதராஸில் தான் நடந்து சென்ற அல்லது ட்ராமில் சென்ற இடங்களை பார்க்க வேண்டும் என்று விரும்பி வந்துவிட்டால், நிச்சயமாக ஏமாந்து இது மதாராசாக இருக்க வாய்ப்பில்லை என எண்ணி திரும்பி ஏக்கத்தோடு போய்விடும் என்றே தோன்றுகிறது.

போக்குவரத்து
அதிகரித்திருப்பதற்கேற்ப்ப சென்னையில் பல புதிய வீதிகளும் ஏற்பட்டு இருப்பதோடு பழைய வீதிகள் பெரிதாக்கபட்டும் பெரிதாக்க இயலாத போக்குவரத்து நிறைந்த வீதிகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டும் நெரிசலை எப்படியெல்லாம் தவிர்க்க முடியுமோ அத்தனை முயற்சிகளையும் அரசும் போக்குவரத்து அதிகாரிகளும் எடுத்திருப்பதற்கு உண்மையில் பொது மக்கள் நன்றி சொல்லவேண்டும். மேம்பாலங்களை அமைத்து மிக மோசமான போக்குவரத்து நெரிசல்களுக்கு விமோசனம் கொடுத்திருப்பதற்கு மட்டுமே மக்கள் என்றென்றும் நன்றிகடன்பட்டவர்கள் ஆவர்.

கிறிஸ்துவ
வேதாகமத்தில் ஏசுநாதர் சொன்ன ஒரு உவமைக்கதை நினைவிற்கு வருகிறது, :>

வெளியூருக்கு
பயணம் செல்ல புறப்பட்ட எஜமான் ஒருவன் போவதற்கு முன் தன்னிடத்திலிருந்த வேலைகாரர்கள் ஒருவனுடைய கையில் ஐந்து தாலந்து [அந்த தேசத்தின் பணம்], மற்றொருவனிடத்தில் இரண்டு தாலந்தும், இன்னொருவனிடத்தில் ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு புறப்பட்டு போனான்.

ஐந்து தாலந்தை வாங்கியவன் அதைக்கொண்டு வியாபாரம் செய்து இன்னும் ஐந்து தாலந்து சம்பாதித்தான், அப்படியே இரண்டு தாலந்து வாங்கியவனும் இன்னும் இரண்டு தாலந்தை சம்பாதித்தான், ஒரு தாலந்தை வாங்கியவனோ அதை கொண்டு நிலத்தை தோண்டி தன் எஜமானுடைய பணத்தை புதைத்து வைத்தான், வெகுகாலத்திற்கு பின் அவர்களின் எஜமான் திரும்பி வந்து அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்,

ஐந்து தாலந்துகளை வாங்கியவன் வந்து மேலும் ஐந்து தாலந்துகளை தான் சம்பாதித்தேன் என்று சொல்லி கொடுத்தான், அதே போல இரண்டு தாலந்து வாங்கியவனும் மேலும் இரண்டு தாலந்துகளை சம்பாதித்தேன் என்று சொல்லி கொண்டுவந்து கொடுத்தான்,

அந்த எஜமான் அவர்கள் இருவரையும் பார்த்து கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களாய் இருந்தீர்கள் அதனால் உங்களை அநேகத்தின் மேல் அதிகாரியாக வைப்பேன், உங்கள் எஜமானுடைய சந்தோஷத்திறக்குள் பிரவேசியுங்கள் என்றான்.

ஒரு
தாலந்தை வாங்கியவன் வந்து நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனிதன் என்று அறிவேன் அதனால் நான் பயந்துபோய் உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன் இதோ உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்று சொன்னான்,

அதற்க்கு அந்த எஜமான் அவனைப் பார்த்து பொல்லாதவனும் சோம்பேரியுமான வேலைக்காரனே நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே அப்படியானால் என் பணத்தை காசுக்காரர் இடத்தில் போட்டுவைத்திருந்தால் நான் வரும்போது வட்டியுடன் வாங்கிக்கொள்வேனே என்று சொல்லி, அவனிடத்திலிருந்த தாலந்தை வாங்கி பத்து தாலந்து வைத்திருந்தவனிடத்தில் கொடுங்கள் என்றான், என்று உவமையாய் கதை சொல்லி இருக்கிறார்,

சென்னையில் போக்குவரத்திற்கென்று என்ன வசதிகள் மேம்பட செய்யப்பட்டுள்ளது என்ற வித்தியாசம் அடுத்த மாநிலமான கர்நாடகாவிற்க்குப் போனால் அங்கு காணப்படும் போக்குவரத்து நெரிசலும் அதை தாங்கும் அளவிற்கு வீதிகள் மேம்படுத்தப்படாமல் இருப்பதையும் காண முடிகிறது. தமிழகத்தில் ஆட்சி கிடைத்திருக்கும் காலத்தில் எதையெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை கண்கூடாக சென்னையிலும் சென்னையின் புறநகர்களிலும் கூட காணமுடிகிறது.
போக்குவரத்துவிதிகளை மீறி செல்லும் வாகனங்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதும் கூட சரியானபடி நடந்து வருவதால் போக்குவரத்து விதிகளை மீற முயல முடியாதவகையில் செயல்படுத்தபட்டிருப்பதும் சிறப்பானதே. பாதசாரிகள் நடக்கவேண்டிய நடைபாதைகளில் சிறிய கடைகள் நிரம்பி இருப்பதால் பல இடங்களில் பாதசாரிகள் வாகனங்கள் செல்லும் வீதியில் நடக்கவேண்டிய சூழ்நிலை காணபடுகிறது, நடைபாதை கடைகளை அப்புறப்படுத்திவிட்டால் நெரிசல் மிகுந்த பல இடங்களில் மக்கள் நடைபாதையில் நடப்பதற்கும் வாகனங்கள் எளிதாக வீதிகளில் ஓட்டுவதற்கும் வசதி ஏற்ப்படும்.

தங்கம்


தங்கம் எவ்வளவு விலை ஏறிக்கொண்டே போனாலும் ஆபரணதங்கம் வாங்குபவர்கள் மட்டும் குறையவே இல்லை. தீபாவளிக்கு சரியாக ஒருவாரத்திற்கு முன்னர் ஆபரண தங்கம் விற்கும் கடைகளில் பார்த்த போது கூட்டம் அலைமோதிக்கொண்டு நகைகளை வாங்கிக் கொண்டிருந்ததை காண முடிந்தது,

ஒரு
சிறிய தங்கநகை வாங்குவதற்கு குறைந்தது மூன்று நான்கு பேர் என கடைகளுக்கு வருவதால் கடை கூட்ட நெரிசலாகி விடுகிறது, அங்கு வரும் ஒரு சிலரின் போக்கும் யாராவது அசந்தால் நகை வாங்க வைத்திருக்கும் பணத்தையோ கழுத்தில் அணிந்துகொண்டிருக்கும் தங்க நகைகளையோ சுருட்டிக்கொண்டு போவதற்கு தயாராக நின்றுகொண்டிருப்பதும் பார்க்க முடிகிறது. நாம் அவர்களை கவனிக்கிறோம் என்பதை அவர்கள் கவனித்து விட்டால் நைசாக அந்த இடத்தை விட்டு போய்விட்டு அவர்களது கூட்டத்தைச் சேர்ந்த வேறு திருடர்களை அந்த இடத்திற்கு அனுப்பி விடுகின்றனர்.

எது எப்படியோ மக்கள் சளைக்காமல் கட்டு கட்டாக பணத்தை எடுத்துவந்து தேவையான நகைகளை வாங்கி செல்வதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பணவீக்கம் அதிகரித்து உலக பொருளாதாரம் வீழ்ச்சியில் இருப்பதாக செய்திகள் வந்துக் கொண்டிருந்தாலும் மக்களிடம் பணப் புழக்கத்திற்கு குறைவு இருப்பதாக தெரியவில்லை.

அமெரிக்கா
ஐரோப்பா போன்ற நாடுகளில் பணவீக்கத்தினால் பல லட்சகணக்கானோர் வேலை இழந்து தவித்து வருவதால், ஆடம்பரமான செலவுகளில் மக்கள் ஈடுபடுவது மந்த நிலையில் இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் நம் இந்திய நாட்டில் திருமணங்களுக்கோ பண்டிகைகளுக்கோ செலவு செய்வதும் மற்ற வைபவங்களும் எப்போதும் போலவே தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் கடைகளில் வியாபாரமும் எப்போதும் போல நடந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

மாம்பலம் [தி.நகர்] பாண்டி பஜார் போன்ற இடங்களில் எப்போதும் போல கூட்டம் அலை மோதுவதும் இயல்பாகவே காணப்படுகிறது, மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் மாநகர காவல் மக்களின் நலன் கருதி தங்கள் பொருட்களை பத்திரமாக பாதுகாத்துக்கொள்வது எப்படி என்று அறிவித்தபடி இருந்தாலும் மக்கள் அந்த அறிவிப்பை பயன்படுத்திக்கொள்கிரார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

நாளுக்கு
நாள் உஷ்ணம் அதிகரித்து வருவதைப்போலவே தங்கத்தின் விலையும் வீடு மனை போன்றவற்றின் விலையும் அசுர வேகத்தில் அதிகரித்த வண்ணம் இருப்பது சராசரி மக்களின் கனவுகள் கனவுகளாகவே இருந்துவிடும் நிலையில் தான் உள்ளது.