Translate

8/07/2009

நியாயத்தீர்ப்புநாள், [ JUDGEMENT DAY ]

Friday, 7 August 2009


நாம்
வாழ்ந்து கொண்டிருப்பது நிச்சயமாகவே கடைசிகாலம்தான், அதற்காக நாம் பயப்படவே
ண்டியதும் நம் கடமைதான், ஏனென்றால் நாம் அக்கிரமக்காரர்களாக இல்லாமல் நம்மை சகலவித பரிசுத்தத்தோடும் தற்காத்துக்கொள்வது மிகவும் அவசியமாகிறது.
**********************************************************************

வலைபூவைப்பற்றி
கேள்வி பட்டபின் நான் எழுத ஆர்வம் கொண்டதென்னவோ உண்மை, அதையே செய்தும் வருகிறேன், ஆனால் மற்ற பதிவர்களின் பதிவுகளில் மிகச்சிலவற்றை மட்டுமே
படித்துள்ளேன். நேற்று மற்ற பதிவர்களின் பதிவுகளை படிக்கும் எண்ணம் எனக்கு அதிசயமாக ஏற்ப்பட்டதால், எனக்குத்தெரிந்த 'புலம்பல்களில்' காணப்பட்ட மற்ற பதிவர்களின் வலைப்பூக்களில் சிலவற்றை படித்தேன், அவை மிக நன்றாக எழுத்தப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடும்படியாக நான் படித்த [இன்னும் பலரது பதிவுகளையும் படிப்பேன்] செல்வேந்திரன், யுவக்ரிஷ்ணன், ஸ்ரீமதி, [இன்னும் சிலரது பெயர்கள் மறந்துவிட்டது], படித்தேன். இதில் செல்வேந்திரனின் சொல்விளையாடல் மிகவும் அழகாக இருந்தது. ஸ்ரீமதியின் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது, யுவகிருஷ்ணன் எழுதியிருந்த 'உலகம் அழியப்போகிறதா' என்ற பதிவை படித்தேன், அதில் அவர் குறிப்பிட்டிருந்த மாயர்களைப்பற்றிய தகவல்களை பற்றி நான் அறியேன், ஆனால், அவர் அந்த பதிவில் குறிப்பிட்டதுப்போல நியாத்தீர்ப்பு என்பதும் உலகம் அழிவது என்பதை பற்றியும் குறிப்பிட்டிருந்ததில், நான் பைபிளில் கூறும் நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி நன்கு அறிவேன்,

வெள்ளைகாரர்கள் கூறிவரும் 'நியாயத்தீர்ப்பு நாளும்' பைபிளை சம்பந்தப்படுத்தியதுதான், பைபிளின் துவக்கத்தில் அதாவது ஆதாம் ஏவாளை கடவுள் உருவக்கியப்பின் உண்டான உலகம் நோவா என்ற ஆதாமின் சந்திவரை இருந்தது, நோவாவின் காலத்தில் ஜனங்கள் செய்த அக்கிரமங்களின் மிகுதியினால் கடவுள் ஜலப்ப்ரளயத்தை உண்டுபண்ணி பூமியை அழித்தார், மறுபடியும் ஜலம் வற்றியபோது கடவுள் பூமியின் மீது இனி மனிதரின் அக்கிரமங்களினால் பூமியையும் அதின் சகலவித ஜந்துக்களையும் அழிப்பதில்லை என்று வாக்களித்தார்.

" 21. சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.

22. பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்." [ஆதியாகமம்: 8: 21,22]

பைபிளில் துவக்கத்திலிருக்கும் ஆதியாகமம் என்ற புஸ்தகத்தில் முதல் பத்து அதிகாரங்களில் பூமியின் முதல் அழிவைப்பற்றியும், அது ஜலத்தினால் அழிந்த விதத்தைப்பற்றியும் கூறப்பட்டுள்ளது, இதற்க்கு ஆராய்ச்சி ரீதியான பல்வேறு சான்றுகளும் உள்ளது.

அதேப்போன்று பைபிளின் பல்வேறு இடங்களில் இரண்டாவது உலகத்திற்கு நேரப்போவது குறித்த செய்திகள் பல தீர்க்கதரிசிகளால் கொடுக்கப்பட்டுள்ளது, இதைப் பற்றியும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவின் ஆராய்ச்சியாளர்களும் பல தகவல்களை திரட்டி வெளியிட்டு வருகின்றனர்.

" 18. பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்." [I யோவான்; 2-18].

இது போன்று பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.

சுருக்கமாக சொல்வதென்றால் 'கிறிஸ்த்துவின் இரண்டாம் வருகை' என்பது தான் 'நியாயத்தீர்ப்பு நாள்' ( Judgementday ) என்பது. எப்பொழுது வருவார் என்பதற்கு அடையாளமாக பூமியிலேயும் கிரகங்களிலேயும் ஏற்ப்படும் மாற்றங்களைத்தான் சிலர் பூமி அழியும் என்றும் கூறிவருகின்றனர். பூமி அழிவதில்லை. ஏன் என்றால், "உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக, உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக" என்பதுதான் பைபிளில் சொல்லபட்டிருக்கும் முக்கிய ஜெபம்.

இதனால் பூமி அழிக்கப்படுவதில்லை என்பது விளங்குகிறது, அக்கிரமம் செய்கிறவர்கள் தான் அழிக்கப்படுவார்களே அல்லாமல் பூமி ஒருகாலமும் அழிக்கப்படுவதில்லை, "புதிய வானம் புதிய பூமி" காணப்படுவது உறுதி ஆனால் தற்ப்போதுள்ள வானமும் பூமியும் அழிக்கப்பட்டு புதியது உருவாக்கப்படுமா என்பதற்கு ஆதாரம் இல்லை. பைபிளில் குறிப்பிட்டிருக்கும் புதிய வானம் புதியபூமி என்பதைப்பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இஸ்ரவேல் நாட்டில் கட்டப்பட்டு வரும் சுவரில் காணப்படும் வாசல்களைப்பற்றியும் கடைசிக்காலாத்தை பற்றிய முன்னெச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது, இதனால் பூமி அழிக்கப்படாது ஆனால் பூமியில் ஏற்படும் பலவித இயற்க்கை சீற்றத்தினால் பலர் அழிவார்கள், இதைக் கொண்டு நாம் கடைசிகாலத்திலிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதற்கு முடியும்.

இவற்றைப்பற்றிய நிறைய செய்திகள் பைபிளிலும் அதைப்பற்றிய ஆராய்ச்சியாளர்களின் உரைகளும் கிடைக்கின்றன.'