Translate

8/04/2009

உன்னை ஒன்று கேட்ப்பேன் - 1 பாகம்

விஸ்வா இருபத்தேழு வயது மென்பொருள் பொறியாளன், படித்து முடித்தவுடன் பெங்களூருவில் வேலைகிடைத்து அவனைப்போல வயதுள்ளவர்கள் தங்கியிருந்த கூட்டத்தில் சேர்ந்து கொண்டவன், உயரம் ஐந்து அடி பத்து அங்குலம், மெல்லிய தேகம், மாநிறம், நாகரீகத்திற்க்கோ கண்பார்வைக்கோ கண்களில் எப்போதும் கண்ணாடி அணிந்திருந்தான். ஜீன்ஸ் பான்ட்டும் சில சமயம் டி ஷர்ட்டும் அலுவலகம் போகும் சமயங்களில் முழுநீளகை வைத்த ஷர்ட்டும் அணிந்து காலில் ஸ்போர்ட்ஸ் ஷூ அல்லது லெதர் ஷூ அணிந்து கொள்வான். பார்ப்பதற்கு மிக சாதாரண தோற்றம் கொண்டவன்.

பெங்களூரு விஸ்வாவிற்க்கு புதிய அனுபவம், அங்கு பெண்களும் ஆண்களும் சேர்ந்து பூங்காவில் காதல் புரிவதை பார்க்கும்போது அவனுள் இன்னொருவன் விஸ்வரூபம் கொள்வதை உணர்வான். பெங்களூரு முழுவதும் பூங்காக்கள் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்று கண்ணுக்கு குளுமையாக, அந்த குளுமையான காட்சிகளை ரசிக்கவிடாமல் எங்கே பார்த்தாலும் இளம் ஜோடிகளின் தழுவல்.

மாதம் தவறாமல் சம்பளம் வாங்கியவுடன் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் தன் படிப்பிற்கென்று வாங்கியதற்கு கட்டியது போக மீதி இருப்பில் அவனது சொந்த செலவுகளை பார்த்துக்கொள்வான்.

விஸ்வாவின் அலுவலகத்திலும் நிறைய பெண்கள் உடன் வேலை செய்துவந்தனர். அவர்கள் சில சமயங்களில் அணிந்து வரும் உடைகள் ஏனோ விஸ்வாவி
ற்க்கு அருவருப்பை ஏற்ப்படுத்தும், அவனுடன் வேலை பார்க்கும் மரியாவின் உடை எப்போதுமே சிக்கனம்தான், அவளது சிறிய மார்பகங்களை மற்றவர்களுக்கு காண்பிப்பதில் அவளுக்கு என்ன அப்படியொரு சுகமிருக்கும் என்பது அவனுக்கு விளங்காத உண்மை.

ஆனால் பலருக்கு அவளது மார்பகம் பார்ப்பதற்கு விருந்தாக இருந்து வந்ததை அவன் பார்க்க தவறியது இல்லை. அன்று அலுவலகத்தில் வேலை குறைவாக இருந்தது, வெளியே வந்து எங்காவது பூங்காவில் உட்காரலாம் என்றால் இளசுகளின் உரசல் காண விஸ்வாவி
ற்க்கு பிடிப்பதில்லை. அருகில் இருந்த சினிமா அரங்கில் ஏதேனும் சினிமா பார்க்கலாம் என்று டிக்கெட் வாங்கி இருக்கையில் உட்கார்ந்தான், விளக்குகள் அணைக்கப்பட்டு ஏதோ ஒரு கன்னடப்படம் திரையில் ஓடிக்கொண்டிருந்தது , சினிமாவை ஊமை படம் பார்ப்பதுப் போல பார்த்துக்கொண்டிருந்தான் விஸ்வா.

அவனுக்கடுத்த இருக்கையில் பெண் உட்கார்ந்திருப்பது போல தோன்றியது, அடிக்கடி அவன் மீது வந்து விழும் துப்பட்டாவை அந்த பெண் எடுத்துமேலே போட்டுக் கொண்டிருந்தாள். தொடரும்.....