Translate

8/16/2009

எனக்குப் பிடித்த நடிகர்கள் - ஜெ.பீ.சந்திரபாபு

என்னை கவர்ந்த, நான் பார்த்து ரசித்த நடிகர்களின் வரிசயில் காலம் சென்ற திரு சந்திரபாபுவைப்பற்றி எழுத வேண்டும், அவரது உடல் வாகு நடனத்திற்கு ஏற்றார்ப் போல வளைந்து நெளிவதை பார்க்கப் பார்க்க அழகு, நடனமும் வாய்ப்பாட்டும் அவரது 'masterpieces'.

முகம் மட்டும் ஒரு நகைச்சுவை நடிகனைப் போல இருந்தாலும், அந்த முகத்தில் அவர் காட்டும் பாவங்கள் தான் பெரும்பாலும் நகைச்சுவைக்கு மெருகூட்டுவதாக இருக்கும். அவர் நினைத்த படி கேட்க்கும் உடலால் அவரது நடனத் திறமை சிறப்பாக இருக்கும், சந்திரபாபுவைப்போல நடித்து, தன் சொந்த குரலில் பாடி, அழகான நடனத் திறைமையும் நகைச் சுவை நடிப்பும் கொண்ட வேறு ஒரு கலைஞன் இதுவரை தமிழ் திரையில் கிடையாது.

அவரது திறைமையை பார்த்தவர்கள் அவரை நிச்சயம் மறக்க முடியாது. அவரது பாடல்கள் இன்றும் கேட்ப்பதற்கு இனிமையும் பொருள் பொதிந்ததாகவும் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.