Translate

8/24/2009

எனக்குப் பிடித்த நடிகைகள் - ரேவதி



ரேவதியின் நடிப்பும் நடனமும் எனக்கு பிடிக்கும், அவர் நடித்து வெளிவந்த திரைபடங்களில் 'கிழக்கு வாசல்', 'மௌன ராகம் ', 'அவதாரம்', 'மறுபடியும்', 'புன்னகை மன்னன்', 'தேவர் மகன்', 'அரங்கேற்ற வேளை','வைதேகி காத்திருந்தாள்', 'புதுமைப்பெண்', 'மண்வாசனை' இன்னும் பலத் திரைப்படங்கள் ரசனைக்குரியவைகளும் நல்ல கதையம்சம் கொண்டதாகவும் அமைந்தது.

சிறந்த நடிகைகளின் வரிசையில் ரேவதிக்கு ஒரு தனி இடம் உள்ளது என்பது சொல்லித் தெரிய அவசியமில்லை. நடனம், பாட்டு, நடிப்பு என்று இவரது திறமை முடிந்து விடாமல் தயாரிப்பு இயக்கம் என்று இன்னும் தனது மறுபக்கத்தை உயர்த்திக் கொண்டிருப்பவர்.

ரேவதி யாருடன் ஜோடி சேர்ந்து நடித்தாலும் பார்க்க மிகவும் நன்றாகத்தான் இருந்தது, ஆனால் நடிகர் கார்த்திக்குடன் இவர் சேர்ந்து நடித்த திரைப்படங்கள் மாபெரும் வெற்றியாக அமைந்தது, ரசிக்கும்படியாகவும் இருந்தது. கமலஹாசனுடன் நடித்த தேவர் மகனில் இவரது நடிப்பின் அபாரம் காண முடிந்தது, புன்னகை மன்னனில் அருமையான இவரது நடனமும் இளமையான நடிப்பும் ரசனைக்குரியது. இதனால் இவர் ரசிக மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. இவர் நடிப்பில் வெளிவந்த இங்கே குறிப்பிடாத பல திரைப்படங்களும்
எனக்கு பிடிக்கும், அருமையான நடிப்பாற்றல் கொண்டவர்.