Translate

8/12/2009

என் போட்டிக்கான சிறுகதைப் பற்றி

சிறுகதை போட்டி முடிவுகளை அறிவித்திருக்கும் இந்த நேரத்தில் அதை பற்றிய பலவித அபிப்பிராயங்களும் வந்துகொண்டிருக்கும் போது, பொதுவான கருத்தாக வெற்றிப் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் போட்டியை நடத்தியவர்களுக்கும் வாழ்த்துக்களை கூறும் அன்பர்களைப்போல நானும் வாழ்த்து சொல்லி போவது சரியென்று எனக்குத் தோன்றவில்லை, போட்டியில் கலந்து கொண்ட 250 கதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கதைகளை படிப்பதற்கே முடியவில்லை, இதில் 250 கதைகளில் தேர்வு செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுவிட்டு நிஜமாகவே அத்தனை கதைகளையும் படித்தீர்களா என்று நடுவர்களிடம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் [curiosity] எனக்கு இருப்பது உண்மை.

நான் எழுதிய 'புத்தகம்' என்ற கதை உண்மை, அதில் என்னுடைய புனைவை சொருக எனக்கு விருப்பமில்லை, அதனால் அந்த கதையின் முடிவை பின்னர் சிறிய மாற்றம் செய்து 'விடியல்' என்று மறுபடியும் வெளியிட்டேன். அந்த மாற்றம் கூட நிஜமானதுதானே தவிர புனைவல்ல. அதுபற்றி பைத்தியக்காரனுக்கு அவரது -மெயிலுக்கு அதை குறித்து விவரித்து இருந்தேன் அவரிடமிருந்து எனக்கு பதில் தகவல் இல்லை என்ற போது நான் நிச்சயித்துக் கொண்டேன் எனது கதை அவர்களது தேர்ந்தெடுப்பில் இல்லை என்று.

பரிசு பெறவில்லை என்ற மன வருத்தம் எனக்கு கிடையாது, ஆனால் அவர்கள் தேர்ந்தெடுத்த கதைகள், கதைகளைப் போல இல்லாமல் வேறு விதமாக, குழப்பங்களை கொண்டதாகவும், புனைவுகள் அதிகம் கொண்டதாகவும் இன்னும் கதைகளுக்கு இல்லாத செயற்கை நிறைந்து காணப்படுகிறது, இது எனக்கு மிகவும் தமாஷாகவும் சற்று ஆச்சர்யமாகவும் உள்ளது, அதற்காகத்தான் அவைகள் தேர்ந்தேடுக்கப்பட்டதுதானா என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

என் தகப்பனார் ஒரு சிறந்த நாடக, கதை ஆசிரியர், நல்ல பாடகர், அவர் தன் வாழ்நாளையே அதற்காக இழந்தவர், நான் அவரிடமிருந்து கதை எழுதுவதற்கு சிறப்பாக பயிற்சிகள் எடுத்ததில்லை, ஆனால் என் ரத்தத்திலேயே இருப்பது கலை, என் அம்மாவும் நாட்டியம் பயின்றவர், பாடகி. இருவரும் கர்நாடக இசையில் தேர்ச்சிப் பெற்றவர்கள்.
கலை என்பது என் சுவாசம்.

அவர்கள் தற்சமயம் இல்லை என்கிற காரணத்தால் அவர்களைப்பற்றிய பல தகவல்களை நான் இங்கு எழுத வேண்டாமென எண்ணுகிறேன்.

கதை எழுதுவதற்கான பட்டறைப்பற்றி பயிதியக்காரனின் இடுகையைவாசித்தேன், பலருக்கும் அது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று நம்புகிறேன், ஆனால் நான் அவற்றில் கலந்து கொள்வதற்கு இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் எழுதிய 'புத்தகம்' என்பது கதையல்ல, அது நிஜம், நிஜத்தைபுனைவிற்றி எழுதினேன் என்பதையும் தெரிவித்துக்கொளுகிறேன்.