Translate

8/19/2009

எனக்குப் பிடித்த நடிகைகள் - சொவ்கார் ஜானகி


காலம் சென்ற நடிகை சொவ்கார் ஜானகியம்மாவின் தீவிர ரசிகை நான். அவர்களது நடிப்பையும் அசைவுகளையும் அணு அணுவாக ரசிப்பது எனக்குப் பிடிக்கும். அவர்களது நடிப்பில் அப்படியொரு நிஜமிருக்கும், எத்தனையோ திரைப்படங்கள் அவரது நடிப்பை பறைசாற்றி இருக்கின்றன, என் நெஞ்சில் என்றும் நீங்கா இடம் பிடித்த அவரது சில திரைப்படங்கள், 'எதிர் நீச்சல்', 'காவியத்தலைவி', 'இருகோடுகள்', 'இரு மலர்கள்', 'உயர்ந்த மனிதன்', இன்னும் பல திரைப்படங்கள்.

என்னைப்
பொறுத்தவரை நடிப்பு என்பதை கடந்த கால நடிகர் நடிகைகள் அவர்களுடனேயே கொண்டு சென்று விட்டார்களோ என்றும் நடிப்பு என்னும் ஒன்று அந்த நடிகர்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

ஈரப்பதம்
பூமியில் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் வறட்சி
எப்படி ப்பட்டுள்ளதோ அதைப்போல கலைத்துறையிலும் கூட குறிப்பாக நடிப்புத்துறையிலும் கதை இலாகாவிலும், பாடல்களின் மெட்டுகளிலும் கூட வரட்சி நிலவுகிறது, குப்பியில் குடிநீர், பிளாஸ்டிக் குடுவைகளிலும் உரைகளிலும் குடிநீர் போல ஆங்காங்கே ஒன்றிரண்டு நல்ல கதைகளும் பாடல்களும் வந்து கொண்டிருக்கிறது, ஆனாலும் நடிப்பிற்கு என்னவோ சரியான வரட்ச்சிதான் நிலவுகிறது.



சவ்க்கார் ஜானகி எந்த நடிகருடன் இணைந்து நடித்தாலும் அவரது நடிப்பை என்னால் ரசிக்க முடிந்தது, அத்தனை அருமையாக இணைந்து நடிப்பவர். நடிப்பு ஒன்றை மட்டுமே தனது முதலாக வைத்தவர்களில் இவரும் ஒருவர். இவரது நடிப்பைப் போல் இனி பார்க்க முடியாது என்பது உறுதி. என்னால் என்றும் மறக்க முடியாத நடிகைகளில் இவரும் ஒருவர்.