Translate

8/29/2009

எனக்குப் பிடித்த நடிகர்கள் - ஜீவா, ஜீவன், சேரன்


இளம் நடிகர்களில் நடிகர் ஜீவாவின் நடிப்பு 'ராம்' திரைப்படத்திற்குப் பின் அவர் ஏற்று நடிக்கும் எல்லாத் திரைப்படங்களும், அவருக்கேற்ற கதையம்சம் கொண்டதாக இருப்பது அவரது திறைமையை நிரூபிக்க கிடைத்த அருமையான வாய்ப்புகள் என்றே சொல்லவேண்டும், புதிய தலைமுறை நடிகர்களில் நடிகர் ஜீவாவின் கதை தேர்வும் அற்புதமான நடிப்பும் பாராட்டுதலுக்குரியது. இத்தனை இளம் வயதில் முதிர்ச்சியான நடிப்புத்திறன் இவரது ப்ளஸ்.

நடிகர்
ஜீவா ஏற்று நடிக்கும் திரைப்படங்களில் ஜீவாவின் கதாபாத்திரம் மிகவும் ரசிக்கும்படியாகவும், யதார்த்தமாகவும் இருக்கிறது. அவர் மேலும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து யதார்த்தமாகவும் வித்தியாசமாகவும் நடித்து என்னைப் போன்ற அவரது ரசிகர்களை திருப்தி படுத்துவார் என்று எதிர்பார்க்கிறோம், இவரது திருமண வாழ்க்கையும் திரையுலக பணியும் மென்மேலும் சிறக்க எமது மனமுவர்ந்த வாழ்த்துக்கள்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


நடிகர் ஜீவன் தான் முதன் முதலில் நடித்த வேடம் வில்லன் என்பதால் தொடர்ந்து அதே மாதிரியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தாலும் எனக்கு ஜீவனின் நடிப்பு மிகவும் பிடிக்கும். நான் ஜீவன் நடித்த திரைப்படங்களை தவறாமல் ரசித்து பார்ப்பது உண்டு.

இதேபாணியில்
தன்னால் இன்னும் எந்தமாதிரியான, வித்தியாசமான கதைகளை தேர்வுசெய்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்து முடிவுசெய்து நடித்தால் நிச்சயம் வெற்றி வாய்ப்புகள் இவருக்கு உள்ளது. கதை தேர்விலும் நடிப்பிலும் இன்னும் இவர் அதிக கவனமும் சிரத்தையும் எடுத்துக்கொண்டால் நிச்சயம் திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள இவரால் முடியும். இன்னும் வித்தியாசமான திரைப்படங்களில் திறம்பட நடித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்துவார் என்று நம்புகிறோம். மென்மேலும் சிறந்த திரைப்படங்களில் நடித்து பெயரும் புகழும் பெற எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *



நடிகர் சேரனாகவும் இயக்குனராகவும் இவரது திறைமை மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது, இவர் இயக்கும் திரைப்படங்களில் இவர் நடிப்பதும் இவரது திறைமைக்குச் சான்றுகள். பல வித்தியாசமான திரைப்படங்களை இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் பார்த்து ரசித்து வரும் ரசிகர்களில் நானும் ஒருத்தி.

சேரன்
இயக்குநர் ஆவதற்கு முன்பே என்னுடன் முதுகலையில் கல்லூரியில் படித்த சக மாணவன் சேரனைப்பற்றி மிகவும் ஆணித்தரமாக என்னிடம் சொன்னார், சேரன் என்ற ஒரு புதியவர் திரைப்படங்களை இயக்கவிருக்கிறார், அற்புதமான திறைமைசாலி, கூடிய சீக்கிரத்தில் தமிழ் சினிமாவில் அவர் பெயர் 'ஓஹோ' என்று பேசப்படப் போகிறது என்றார், அப்போது சேரன் என்பவரை யார் என்று யாருக்கும் தெரியாது.

என்னுடைய சகமாணவர் கூறியது போலவே சேரன் வித்தியாசமானவர் தான் என்பதை அவர் எடுத்த ஒவ்வொரு திரைப்படங்களையும் பார்த்து அறிந்து கொண்டேன், இப்படி வித்தியாசமான திறமைசாலிகளை தமிழ் திரையுலகமும் ரசிகர்களும் வரவேற்ப்பதுடன் ஆதரவும் தருவார்கள் என்பதில் ஐயமில்லை. எனக்குப்பிடித்த நடிகர், இயக்குநர் சேரன் அவர்கள் இன்னும் அற்புதமான வித்தியாசமான திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுப்பார் என்று நம்புகிறேன்.

சேரனின் முயற்சிகள் அத்தனையும் சிறக்க, பல சிறந்த திரைப்படங்களை எடுத்து வெற்றிவாகை சூடி மன நிறைவை பெற எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *