Translate

8/28/2009

எனக்குப் பிடித்த நடிகர்கள் - கஞ்சா கருப்பு, கருணாஸ், சந்தானம்


நடிகர் கஞ்சா கருப்பு, இவரை எனக்குப் பிடிக்க காரணம், இயல்பான இவரது பேச்சு வழக்கு, ஒப்பனை அவசியமற்ற கதா பாத்திரங்கள், இவை தான் இவரை மெருகேற்றி வருகின்றது. நடிப்பு என்பதை நடிப்பாகவே செய்யாமல் இயல்புடன் திரைப்படங்களில் காட்சியளிப்பது தான் இவரது ப்ளஸ். எனக்குப் பிடித்த புதிய நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் நடித்த திரைப்படங்களை நான் இவருக்காகவே மிகவும் ரசித்து பார்ப்பேன்.

இவரைப்போலவே எனக்குப் பிடித்த மற்றொரு நடிகர் கருணாஸ். இவரது நடிப்பு பிடிக்கும் என்பதை விட இவருக்கு கிடைக்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களை இவர் திறம்பட நடித்திருப்பது இவரது தன்னம்பிக்கையை காட்டுவதாக உள்ளது.

இவர்
தோன்றும் காட்சிகள் திரைப்படங்களில் மிகவும் குறைவாக இருந்தாலும் அவற்றை நான் மிகவும் ரசிப்பதுண்டு. இவர்கள் இருவருக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை சிறந்த நடிப்பிற்கு முக வசீகரமும் நிறமும் அழகும் அவசியமில்லை என்பதை உறுதி செய்வதாக இருப்பதும், தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு சிறியதாக
இருந்தாலும் இவர்களின் திறமையை கொஞ்சமும் குறையாமல் வெளிப்படுத்தும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது.

நடிகர் சந்தானம், இவரை தனியார் தொலைக்காட்சியில் பார்க்கும்போதே இத்தனை திறமையும் இளமையும் உள்ள இவருக்கு சிறப்பான எதிர் காலம் இருப்பது உர்ஜிதமாகிவிட்டது, இவர் திரைப்படத் துறைக்கு வந்தது இவருடைய திறமைக்கு எடுத்துக் காட்டு, இவர் ஒரு நகைச்சுவை நடிகர் மட்டும்தான் என்ற நிலையை மாற்றி, பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, திறமைகளை வெளிக் கொணர வேண்டும்.

இவர்களை நான் ஒரு நகைச்சுவை நடிகர்களாக நினைப்பதே கிடையாது, நகைச்சுவை நடிகர்களுக்கு வசனம் பேசுவதில் 'டைமிங்' இருந்தால் தான் நகைச்சுவை சிறப்பாக இருக்கும் என்ற கூற்று உள்ளது, இவர்களிடம் டைமிங் இருக்கிறதோ இல்லையோ திறமை கொட்டிக் கிடக்கிறது என்பது நிதர்சனமான உண்மை, அதனால் தான் இவர்களால் இத்தனை குறுகிய காலத்தில் புகழடையவும் ரசிகர்களின் வரவேற்ப்பை பெறவும் முடிந்திருக்கிறது என்பதில் சந்தேகமே கிடையாது.

இவர்கள் நிச்சயமாக இன்னும் பல
வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இவர்களது ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நடிப்பிலும் இன்னும் பல உயர்ந்த சாதனைகளை புரிவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

கஞ்சா கருப்பு, கருணாஸ், சந்தானம் மூவரும் இன்னும் பல சாதனைகள் புரிந்து திரையுலகில் தங்களுக்கென்று உயர்ந்த இடத்தை பிடித்து, வெற்றி மேல் வெற்றிகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.