Translate

8/27/2009

ஒன்று சேர்ந்தால் உண்டு வாழ்வு

பருவ மழை பொய்த்து விட்டது, உலகில் பணவீக்கம் அதிகரித்துள்ளது, இதனால் சாமான்யர்களுக்கு என்ன பிரச்சினைகள், வேலை இழப்பு அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், குடிநீர் பற்றாக்குறை, மின்சார பற்றாக்குறை, மின்சார பற்றாக் குறையால் சில நிறுவனங்கள் அடைக்கப் படுத்தல். இதனால் வேலையிழக்கும் நிலை, பஞ்சம், பஞ்சம் நீடித்தால் கொலை கொள்ளை திருட்டு அதிகரிப்பு, இதனால் மக்களின் வாழ்க்கை மோசமான நிலையடைதல், வறுமையால் பட்டினி சாவு போன்ற சூழல் உருவாகும்.

ஒன்று மற்றொன்றை சார்ந்திருப்பதும் அவற்றை சார்ந்து மனிதனின் அன்றாட வாழ்க்கை நடந்து வருவதும் இயல்பு நிலை, இந்த சங்கிலித் தொடர் போன்ற அமைப்பில் ஏதேனும் ஒன்றில் குறை அல்லது இல்லாமை ஏற்ப்பட்டாலும் அதை தொடர்ந்து மனிதனின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிறது.

பஞ்சம் பசி வறுமை வேலையில்லா திண்டாட்டம் பருவநிலையில் ஏற்ப்படும் அசாதரண மாற்றங்கள் இவை அத்தனைக்கும் சேர்த்து தீர்வு காணப்பட வேண்டும், எந்தவிதமான தீர்வுகள் அல்லது திட்டங்களை வகுத்து செயல்படுத்தினால் முழுமையான தீர்வுகளை காணமுடியும் என்பதை வல்லுனர்குழு
ஆராய்ந்து, தீர கலந்தாலோசித்து முடிவு செய்து உடனடியாக அவற்றை செயல்படுத்தவேண்டும் .

செயல் படுத்தும் போது அதில் முழு கவனம் செலுத்தி திட்டங்கள் முழு வெற்றியடையும் வரை கவனத்தை செயல் திட்டங்கள் மீது மட்டுமே செலுத்த வேண்டும், தீர்வுகளுக்கு என்னென்ன திட்டங்களை உடனடியாக செயல் படுத்த வேண்டும் என்பதில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே அபாயகரமான நிலை வருமுன் காத்துக் கொள்ள முடியும்.

இதில் நாடுகளுக்குள் வேற்றுகருத்துகள் ஏற்ப்படுவது, மாநிலங்களுக்கும் வேற்று கருத்துகள் கட்சிகளுக்குள் வேற்று கருத்துகள் என்று எந்த வில்லங்கமும் அல்லது தடையும் ஏற்படாமல் எல்லோரும் ஒருமுகமாக ஒற்றுமையுடன் முனைப்போடு செயல் பட்டால் மட்டுமே பணவீக்கமும் பஞ்சமும் பருவநிலை மாற்றங்களை சீற்படுத்துவதும் சாத்தியமாகும்.