Translate

8/26/2009

எனக்குப் பிடித்த நடிகர்கள் - ரகுவரன்

Wednesday, 26 August 2009




காலம் சென்ற நடிகர் ரகுவரன் சிறந்த நடிகர், அவர் தான் சிறந்த நடிகர் என்பதை பல திரைப்படங்களில் நிருபித்திருக்கிறார். வில்லனாக அவர் நடித்திருந்தாலும் நடிப்பு அபாரமானது, நான் அவரது நடிப்பை மிகவும் ரசித்திருக்கிறேன். இவரது ரசிகை நான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையும் அடைகிறேன்.

பாட்ஷா, புரியாதபுதிர், சம்சாரம் அது மின்சாரம், ஒரு மனிதனின் கதை, ஏழாவது மனிதன் போன்ற திரைபடங்களில் இவரது அபாரமான நடிப்பை பார்க்க முடியும், இவர் மறைவு பேரிழப்பு, அற்புதமான நடிகர், இவருக்கு இன்னும் அதிகபடியான வித்தியாசமான கதாபாத்திரங்கள் கொடுக்கபட்டிருந்தால் தலைசிறந்த நடிகர் என்பதை உலகு அறிந்திருக்கும், அத்தனை திறமை கொண்ட நடிகர்.


இவர் நடிப்பில் வெளிவந்த எந்த திரைப்படத்திலும் இவரது நடிப்பை நான் மிகவும் ரசித்திருக்கிறேன், இவரை ஒரு வில்லன் நடிகர் என்று கூறுவதை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன், வில்லனாக நடித்து பெயரெடுப்பது மிகவும் கடினமானதுதான் என்றாலும் கூட இவர் ஒரு அற்புதமான சிறந்த நடிகர். இன்னும் பல அறிய கதாபாத்திரங்களில் நடித்து சாதிக்கக் கூடிய அபூர்வ திறைமைசாலி. இத்தனை சீக்கிரத்தில் இவரது மறைவு நினைத்து பார்க்கவே வேதனையளிக்கும் நிகழ்வாகவே உள்ளது.