Translate

8/24/2009

எனக்குப் பிடித்த நடிகைகள் - ஸ்ரீதேவி

Monday, 24 August 2009



நடிகை ஸ்ரீதேவியின் தமிழ் படங்களை ரசிகாதவர்கள் யாரும் இருந்திருக்க முடியாது அழகும் நடிப்பும் கலந்த ஒரு சிறந்த நடிகை, எனது சமகாலத்திய நடிகைகளில் ஸ்ரீதேவியும் ஒருவர், அவர் ஹிந்தி திரைப்படங்களுக்குச் சென்ற பிறகு அவரது பெருமை இந்திய மாநிலங்கள் எல்லாவற்றிற்கும், அயல் நாடுகளுக்கும் பரவியது என்னவோ உண்மை, ஆனால் தமிழில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது பார்த்த ஸ்ரீதேவியை திரும்பவும் பார்க்க முடியாமல் போனது அவரது தமிழ் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் என்றே சொல்வேன்,

தமிழிலிருந்து ஹிந்தி திரைபடவுலகுக்குப்போன திரு வைஜெயந்திமாலா ஸ்ரீதேவியை போல தன் உருவத்தை மாற்றிக் கொள்ளாமல் இருந்தாலும் வைஜெயந்திமாலாவையும் தமிழ் ரசிகர்கள் இழந்து விட்டதாகவே நான் கருதுகிறேன், ஸ்ரீதேவி தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த காலம் இனிமையானதும் மறக்க முடியாததுமாகும், அவரது சிணுங்கல்களிலிருந்து ஒவ்வொரு அசைவையும் என்னைபோன்ற பலர் ரசித்து வந்தனர் என்பது உண்மை.

ஸ்ரீதேவி கமலஹாசன் ஜோடி நடித்த திரைப்படங்களை நான் விரும்பி பார்த்து ரசிப்பேன், மற்ற நடிகர்களுடன் அவர் இணைந்து நடித்த திரைப்படங்களையும் நான் ரசித்து இருந்தாலும், கமலஹாசனுடன் இணைந்து நடிக்கும்போது சிவாஜிகணேசனும் பத்மினியும் போல கமலஹாசனுடன் ஸ்ரீதேவி சேர்ந்து நடித்தது மிகவும் பொருத்தமாக இருந்ததுடன் ரசிக்கும்படியாகவும் இருந்தது.

ஸ்ரீதேவியின் நடிப்பில் வெளிவந்த 'சிகப்பு ரோஜாக்கள்', 'மூன்றாம் பிறை', 'மூன்றுமுடிச்சு', 'வறுமையின் நிறம் சிகப்பு', 'மீண்டும் கோகிலா', 'வாழ்வே மாயம்', 'கல்யாணராமன்', '16 வயதினிலே' 'காயத்ரி', 'மனிதரில் இத்தனை நிறங்களா', 'பைலட் பிரேம்நாத்', 'பிரியா', 'ஜானி', 'சிவப்பு மூக்குத்தி', 'கவரிமான்', 'பகலில் ஓர் இரவு' இன்னும் பல திரைப்படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். அவரது மூன்றாம் பிறை சிறந்த நடிகைக்கான விருதை பெற்று தந்தது.